மலையனூரு அங்காளியே பாடல் வரிகள் அல்லது மஞ்சளிலே நீராடி என தொடங்கும் இந்த பாடலின் பாடல் வரிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் அனைத்து திருவிழாக்கள், கோவில் பூஜைகள் மற்றும் ஐயப்பன் பூஜையிலும் இடம்பெறும்… அவ்வளவு சிறப்பு மிக்க பாடல் வரிகள் உங்களுக்காக இங்கு உள்ளது… ஓம் சக்தி..
மஞ்சளிலே நீராடி
குங்குமத்தால் பொட்டு இட்டு
பூவாடைக் காரியம்மா
அம்மா நீ மருளாடி வந்திடம்மா
உடுக்கை பம்பை முரசொலிக்க……
உருமி மேளம் தான் ஒலிக்க…..
சித்தாங்கு ஆடை கட்டி
தாயே நீ சீறி எழுந்திடம்மா…
மேல் மலையனூரில் கோயில் கொண்ட
என் அங்காள ஈஸ்வரியே…
ஆத்தாளே அழைக்கின்றேன்
ஆடி இங்கு வந்திடம்மா
நீ வந்திடம்மா…
மேல்மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
மேல்மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே
மாங்காளி திரிசூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
தெய்வமம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே (Chorus)
சித்தாங்கு ஆடைகட்டி
நீ சிங்கரதம் மீதேறி
சித்தாங்கு ஆடைகட்டி
நீ சிங்கரதம் மீதேறி (Chorus)
தேரோடும் வீதியிலே
தாயே நீயாடி வந்திடம்மா
அந்தரியே சுந்தரியே
எங்க அங்காள ஈஸ்வரியே
அந்தரியே சுந்தரியே
எங்க அங்காள ஈஸ்வரியே
ஆடி வரும் தேரினிலே
நீ அழகாக வருபளே அம்மம்மா
மலையனூரு அங்காளியே
மாக்காளி திரி சூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே
மாங்காளி திரி சூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே (Chorus)
ஆலய வாசலிலே
அலங்காரத் தோரணமாம்…….
அங்காள ஈஸ்வரிக்கு
அபிஷேக பூஜைகளாம்…….
ஆடிவரும் தேரினிலே
அம்மா நீ அசைந்து வரும் மாரியம்மா
ஆயிரம் கண்கள் கொண்டவளே
எங்க அங்காள ஈஸ்வரியே…..
திருவிளக்கின் ஒளியினிலே
தாயே திருவாக்கு சொல்லிடம்மா
திருவிளக்கின் ஒளியினிலே
தாயே திருவாக்கு சொல்லிடம்மா
மாவிளக்கின் ஒளியினிலே
தாயே மங்கைக் குறி சொல்லிடம்மா
மாங்கல்யம் காத்திடம்மா
இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா
மாங்கல்யம் காத்திடம்மா
இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா
மலையனூரு அங்காளியே
நீ மருளாடி வந்திடம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
குறி சொல்ல வாடியம்மா
எங்கள் குலம் காக்கும்
தெய்வமம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே
மாங்காளி திரிசூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
மேல்மலையனூரு அங்காளியே
மாக்காளி திரி சூலியே
சமயபுரத்தாலே மாரியம்மா பாடல் வரிகள்
நிறைஞ்ச மனசு உனக்கு தாண்டி பாடல் வரிகள்
தைப்பூசம் தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி? 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _* _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *தை -… Read More
Thaipusam 2025 - தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் தைப்பூசம் / Thaipusam என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும்… Read More
தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள், Thaipusam special informations 1. தைப்பூசம் (Thaipusam special informations) இந்தியாவில்… Read More
அள்ளிக் கொடுப்பதில் பாடல் வரிகள்| Alli koduppathil song lyrics tamil அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன்… Read More
பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்| Pachai Mayil Vahananae Lyrics Tamil பச்சை மயில் வாகனனே – சிவ… Read More