மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil
மண்ணளந்த காளி அவள்
மயானத்தில் கோயில் கொண்டு
மாசியில் தேர் ஓட ஓடி வருகிறாள்
ஆதி பரமேஸ்வரியாம் அங்காள ஈஸ்வரியாம்
மேல்மலையனூர் எல்லையில் ஓடி வருகிறாள்….
மஞ்ச பொடவ கட்டி
மங்கலமா சிங்காரம்மா ஒய்யாரமா
நடை நடந்து அங்காளம்மா வாராளாம்
எங்க அங்காளம்மா வாராளாம்
நடலை ஆடும் அங்காளி அவ
சுடலை ஆடி வாராளாம்
அம்மா
பூவாலே கரகம் எடுத்து
பூங்காவனத்து தில்லைக்குள்ளே
அங்காளம்மா வாராளாம், எங்க அங்காளம்மா வாராளாம்
நடலை ஆடும் அங்காளி அவ
சுடலை ஆடி வாராளாம்
தாயே
அங்கம் நடுங்கிடவே
அகிலமெல்லாம் குலுங்கிடவே
அங்காளம்மா வாராளாம் எங்க அங்காளம்மா வாராளாம்
தாயே
சூலம் பிரம்பெடுத்து வேப்பிலையும் தான் எடுத்து
அங்காளம்மா வாராளாம் எங்க அங்காளம்மா வாராளாம்
அம்மா
சித்தாங்கு ஆடைகட்டி சிங்கரத வாகனத்தில்
அங்காளம்மா வாராளாம் எங்க அங்காளம்மா வாராளாம்
அம்மா
பட்டாடை பளபளக்க பாதக்கொலுசு கலகலக்க
அங்காளம்மா வாராளாம் எங்க அங்காளம்மா வாராளாம்
அம்மா
மலையனூரு எல்லையில் மயான கொள்ளையிட்டு
அங்காளம்மா வாராளாம் எங்க அங்காளம்மா வாராளாம்
நடலை ஆடும் அங்காளி அவ சுடலை ஆடி வாராளாம்
நடலை ஆடும் அங்காளி அவ சுடலை ஆடி வாராளாம்
நடலை ஆடும் அங்காளி அவ சுடலை ஆடி வாராளாம்
மஞ்ச பொடவ கட்டி
மங்கலமா சிங்காரம்மா ஒய்யாரமா
நடை நடந்து அங்காளம்மா வாராளாம்
எங்கஅங்காளம்மா வாராளாம்
நடலை ஆடும் அங்காளி அவ
சுடலை ஆடி வாராளாம்