Lyrics

Maruthamalai mamaniye muruga lyrics in tamil | மருதமலை மாமணியே முருகய்யா

Maruthamalai mamaniye muruga lyrics in tamil

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? (Maruthamalai mamaniye) என்று தொடங்கும் இந்த பாடல் தெய்வம் என்னும் படத்தில் 1972 ஆம் ஆண்டு திரு. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையில் திரு. கண்ணதாசன் அவர்கள் இயற்றிய பாடலை பாடியவர் திரு. மதுரை சோமு அவர்கள் ஆவார்….

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?……
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?…..
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?…..
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
அஆஆ.. மருதமலை மருதமலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்

பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா ஆஆ…
தேவர் வணங்கும் மருதமலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா..

முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் வரிகள்

மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது.

இதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே பல இடங்களில் கூறியுள்ளார்.

அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும் – இது தான் போட்டி.

குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.

அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன ‘மருதமலை மாமணியே’ பாடல்.

ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து ‘இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்’ என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள்….
“சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்”….

குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில்
முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல், ‘நிச நிச நிச நிச…’ என்று மிகக்கடினமாகவும் வேகமாகவும் வாசித்துவிட்டாராம்..

கவிஞர் உடனே, ‘இதைத்தான் எதிர்பார்த்தேன்…’ என்று,

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு

என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலீனை நான் சிறிது நேரம் கீழே வைத்து

“ஐயா, என்னை விட்டுடுங்க”ன்னு கும்பிட்டேன் என்றார் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்.

இப்படிபட்ட கவிஞர் கிடைக்க நாம் என்ன தவம் செய்தோமோ?!

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
Tags: Lord murugan
  • Recent Posts

    Today rasi palan 19/04/2025 in tamil | இன்றைய ராசிபலன் சனிக்கிழமை சித்திரை 6

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°°° *சித்திரை - 06* *ஏப்ரல் -… Read More

    12 hours ago

    2025-26 தமிழ் புத்தாண்டு: விசுவாவசு வருடத்தின் பஞ்சாங்க கணிப்பும் பலன்களும்

    # 2025-26 தமிழ் புத்தாண்டு: விசுவாவசு வருடத்தின் பஞ்சாங்கக் கணிப்பும் பலன்களும் **தமிழ் புத்தாண்டு** இந்த ஆண்டு ஏப்ரல் 14,… Read More

    5 days ago

    பங்குனி உத்திரம் நாள் | 11.4.2025 வெள்ளிக்கிழமை | Panguni uthiram

    Panguni Uthiram 2025 11-04-2025 மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.… Read More

    1 week ago

    பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள் | Panguni Uthiram special

    Panguni Uthiram Special பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள்... Panguni Uthiram special அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திரம்… Read More

    1 week ago

    Rama Navami | ஸ்ரீ ராம நவமி விரதமுறை மற்றும் பலன்கள் | Rama Navami Special

    Rama Navami ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான்,… Read More

    2 weeks ago

    உங்கள் வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் பெருக இந்த 3 விஷயங்களை இப்போதே செய்யுங்கள்!

    வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும். நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு… Read More

    2 weeks ago