Maruthamalai Sathiyama Song Lyrics in Tamil
மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா
தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா
மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா
தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா
ஆதிசிவன் மேல சத்தியமா
அந்த ஆனைமுகன் மேல சத்தியமா
ஆறுமுகன் மேல சத்தியமா
அந்த ஞான பழம் மேல சத்தியமா
ஒத்த மனசுல மொத்த நெனப்புல
கூடி இருக்குற சண்முகா
ஆறுபடையும் சண்முகா
நெஞ்சுக்குள்ளதான் சண்முகா
செவ்வடிவேலா சரவணபவ
ஆறெழுத்துமே சரணம்
ஆறெழுத்துமே சரணம்
ஆறுமுகனே சரணம்
மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா
தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா
திருத்தணி வீட்டுக்குள்ளே
ஒரு தீபம் தெரியுமே சண்முகா
தீபம் தெரியுமே சண்முகா
உன் பாதம் தெரியுமே சண்முகா
அரோகரா கோசத்துலே
உன் முகம் சிரிக்குமே சண்முகா
முகம் சிரிக்குமே சண்முகா
ஆறுமுகம் சிரிக்குமே சண்முகா
திருத்தணி வீட்டுக்குள்ளே
ஒரு தீபம் தெரியுமே சண்முகா
தீபம் தெரியுமே சண்முகா
உன் பாதம் தெரியுமே சண்முகா
அரோகரா கோசத்துலே
உன் முகம் சிரிக்குமே சண்முகா
முகம் சிரிக்குமே சண்முகா
ஆறுமுகம் சிரிக்குமே சண்முகா
உக்கிர நாளிலும் சண்முகா
நல்ல உச்சவ நாளிலும் சண்முகா
நாளும் கிழமையும் சண்முகா
ஒரு உண்மைய சொல்லவா சண்முகா
ஆறுபடையிலும் ஆறுகாலத்திலும்
பூஜை நடக்குமே சண்முகா
பூஜை நடக்குமே சண்முகா
நல்ல பூஜை நடக்குமே சண்முகா
செவ்வடிவேலா சரவணபவ
ஆறெழுத்துமே சரணம்
ஆறெழுத்துமே சரணம்
ஆறுமுகனே சரணம்
மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா
தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா
பழமுதிர் சோலையிலே
ஒரு தேரு நடக்குமே சண்முகா
தேரு நடக்குமே சண்முகா
தங்க தேரு நடக்குமே சண்முகா
ராஜநடை போட்டு வந்து
புதுயோகம் கொடுக்குமே சண்முகா
யோகம் கொடுக்குமே சண்முகா
சுப யோகம் கொடுக்குமே சண்முகா
பழமுதிர் சோலையிலே
தேரு நடக்குமே சண்முகா
தேரு நடக்குமே சண்முகா
தங்க தேரு நடக்குமே சண்முகா
ராஜநடை போட்டு வந்து
புதுயோகம் கொடுக்குமே சண்முகா
யோகம் கொடுக்குமே சண்முகா
சுப யோகம் கொடுக்குமே சண்முகா
ஊரு உலகமும் சண்முகா
தேருவடம் இழுக்குமே சண்முகா
பக்தி வெள்ளத்திலே சண்முகா
உன் தேரு மிதக்குமே சண்முகா
ராஜ ரத்தத்திலே சிம்மாசனத்திலே
வீதி உலா வரும் சண்முகா
வீதி உலா வரும் சண்முகா
என் நெஞ்சுக்குள்ளதான் சண்முகா
செவ்வடிவேலா சரவணபவ
ஆறெழுத்துமே சரணம்
ஆறெழுத்துமே சரணம்
ஆறுமுகனே சரணம்
மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா
தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா
தென்பழனி சுத்தி சுத்தி
மயில் பறக்குது சண்முகா
மயில் பறக்குது சண்முகா
உன்னை தேடி பறக்குது சண்முகா
கிட்ட வந்து எட்டி நின்னு
என்னை பாத்து சிரிக்கிது சண்முகா
பாத்து சிரிக்கிது சண்முகா
கண்ண பாத்து சிரிக்கிது சண்முகா
தென்பழனி சுத்தி சுத்தி
மயில் பறக்குது சண்முகா
மயில் பறக்குது சண்முகா
உன்னை தேடி பறக்குது சண்முகா
கிட்ட வந்து எட்டி நின்னு
என்னை பாத்து சிரிக்கிது சண்முகா
பாத்து சிரிக்கிது சண்முகா
கண்ண பாத்து சிரிக்கிது சண்முகா
வீரபாகுவின் பக்கமா
அந்த வீரவேலுவின் பக்கமா
அஞ்சுகரனின் பக்கமா
அந்த ஐராவதம் பக்கமா
தங்கநிறத்துல ரெண்டு கண்ணுக்குள்ள
கொழுவிருக்கிற சண்முகா
நீ கொழுவிருக்கிற சண்முகா
என் கண்ணுக்குள்ளதான் சண்முகா
செவ்வடிவேலா சரவணபவ
ஆறெழுத்துமே சரணம்
ஆறெழுத்துமே சரணம்
ஆறுமுகனே சரணம்
மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா
தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா
திருச்செந்தூர் கோயிலிலே
வேலாடனும் சண்முகா
வேலாடனும் சண்முகா
வெற்றி வேலாடனும் சண்முகா
தில்லையாண்டான் தில்லையென
வரம் கொடுக்கனும் சண்முகா
வரம் கொடுக்கனும் சண்முகா
நீ வரம் கொடுக்கனும் சண்முகா
திருச்செந்தூர் கோயிலிலே
வேலாடனும் சண்முகா
வேலாடனும் சண்முகா
வெற்றி வேலாடனும் சண்முகா
தில்லையாண்டான் தில்லையென
வரம் கொடுக்கனும் சண்முகா
வரம் கொடுக்கனும் சண்முகா
நீ வரம் கொடுக்கனும் சண்முகா
கண்ணு படும்படி சண்முகா
இந்த காலம் முழுவதும் சண்முகா
உன்னை நினைக்குறேன் சண்முகா
நல்ல செல்வம் கொளிக்கனும் சண்முகா
சொன்ன வரங்கள அள்ளி கொடுக்குற
கொடை வள்ளலே சண்முகா
கோடி வணக்கம் சண்முகா
பல கோடி வணக்கம் சண்முகா
செவ்வடிவேலா சரவணபவ
ஆறெழுத்துமே சரணம்
ஆறெழுத்துமே சரணம்
ஆறுமுகனே சரணம்
அய்யா மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா
தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா
திருப்பரங்குன்றத்திலே
ஒரு பாட்டு படிக்கணும் சண்முகா
பாட்டு படிக்கணும் சண்முகா
புது பாட்டு படிக்கணும் சண்முகா
புள்ளி மயில் ஏறிவந்து
நீ கேட்டு ரசிக்கணும் சண்முகா
கேட்டு ரசிக்கணும் சண்முகா
வந்து காட்சி கொடுக்கணும் சண்முகா
திருப்பரங்குன்றத்திலே
ஒரு பாட்டு படிக்கணும் சண்முகா
பாட்டு படிக்கணும் சண்முகா
புது பாட்டு படிக்கணும் சண்முகா
புள்ளி மயில் ஏறிவந்து
நீ கேட்டு ரசிக்கணும் சண்முகா
கேட்டு ரசிக்கணும் சண்முகா
வந்து காட்சி கொடுக்கணும் சண்முகா
பூபாலமும் ஆடுமே
ஒரு ஆலோலமும் பாடுமே
கந்த சஷ்டியும் ஆடுமே
உன் கந்த புராணமும் பாடுமே
சின்ன நிலவிலும் சின்ன விளக்கிலும்
காட்சி கொடுக்கணும் சண்முகா
உன்னை நினைக்கிறேன் சண்முகா
என் நெஞ்சுக்குள்ளேதான் சண்முகா
செவ்வடிவேலா சரவணபவ
ஆறெழுத்துமே சரணம்
ஆறெழுத்துமே சரணம்
ஆறுமுகனே சரணம்
ஆமா மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா
தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா
சுவாமிமலை உச்சியிலே
உன் கொடி பறக்குமே சண்முகா
கொடி பறக்குமே சண்முகா
சேவல் கொடி பறக்குமே சண்முகா
ஆடி வரும் காவடிக்கு
அது சொல்லி கொடுக்குமே சண்முகா
சொல்லி கொடுக்குமே சண்முகா
வரம் அள்ளி கொடுக்குமே சண்முகா
சுவாமிமலை உச்சியிலே
கொடி பறக்குமே சண்முகா
கொடி பறக்குமே சண்முகா
சேவல் கொடி பறக்குமே சண்முகா
ஆடி வரும் காவடிக்கு
அது சொல்லி கொடுக்குமே சண்முகா
சொல்லி கொடுக்குமே சண்முகா
வரம் அள்ளி கொடுக்குமே சண்முகா
எந்த நேரத்திலும் சண்முகா
நீ நின்ற கோலத்திலே சண்முகா
அண்டும் வினைகளை விரட்டி
குலம் காக்கும் தெய்வமே சண்முகா
சன்னிதானம் அதை சுத்தி வளம் வர
நெஞ்சம் உருகுதே சண்முகா
நெஞ்சம் உருகுதே சண்முகா
என் உள்ளம் உருகுதே சண்முகா
செவ்வடிவேலா சரவணபவ
ஆறெழுத்துமே சரணம்
ஆறெழுத்துமே சரணம்
ஆறுமுகனே சரணம்
மருதமலை சத்தியமா
உன் ஆறுபடையும் சண்முகா
ஆறுபடையும் சண்முகா
எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா
தங்க ரதம் ஏறிவந்து
நீ எட்டி பார்ரையா சண்முகா
எட்டி பார்ரையா சண்முகா
நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா
108 முருகர் போற்றி
பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்
கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்
கந்த குரு கவசம் பாடல் வரிகள்
இங்கே “மருதமலை சத்தியமா” பாடல் குறித்த தனிப்பட்ட, அரிதான தகவல்கள் தமிழில் வழங்கப்பட்டுள்ளன — இதில் பாடல், பாடகர் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்களும் அடங்கும்.
பாடல் விவரங்கள்
“மருதமலை சத்தியமா” பாடல் “யாமிருக்க பயமேன்” என்ற ஆன்மிக ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது.
பாடல் வரிகள்: மேலநல்லூர் ஸ்ரீனிவாசன்
இசை அமைப்பு: அஜய்
பாடியவர்: புஷ்பவனம் குப்புசாமி
பாடல் முழுவதும் முருகப் பக்தி, மருதமலை மலைத் தெய்வம் மற்றும் சண்முகன் அருள் குறித்த பக்தி உணர்வுகளை நெகிழவைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
பாடலில் வரும் வரிகள் — “தங்கரதம் ஏறி வந்து நீ எட்டி பாரையா சண்முகா” போன்றவை — முருகனின் பரம்பொருள் தோற்றம், அவரது வேல், ஆறுபடையுடனான புனித தோற்றங்கள் போன்றவற்றை நினைவூட்டுகின்றன.
பாடகர் – புஷ்பவனம் குப்புசாமி
புஷ்பவனம் குப்புசாமி தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நாட்டுப்புற இசை (Folk Music) பாடகர்.
இவர் M.A., M.Phil., Ph.D. பட்டங்களை பெற்றவர்; இசைத் துறையில் ஆழமான கல்வி பெற்றவர்.
தம்பதியராக தனது மனைவி அனிதா குப்புசாமியுடன் சேர்ந்து 3,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
நாட்டுப்புற இசை வழியாகத் தமிழ்மக்களின் பாரம்பரியம், பக்தி உணர்வு, கலாச்சாரம் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
—
🌟 இந்தப் பாடலின் சிறப்புகள்
இந்தப் பாடல் பக்தியும் நாட்டுப்புற இசையும் இணைந்திருப்பது மிகச் சிறப்பாகும். புஷ்பவனத்தின் தனித்துவமான நாட்டுப்புற பாணி, முருக பக்திப் பாணியுடன் கலந்துள்ளது.
முருகனின் மலைத் தலங்கள் — குறிப்பாக மருதமலை — பாடல் வரிகளில் பலமுறை குறிப்பிட்டிருப்பதால், பக்தர்களுக்கு அந்தத் தலத்தின் புனிதத்தன்மை உணர்த்தப்படுகிறது.
பாடல் வெளியானது பிறகு, முருகன் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது; பல திருவிழாக்கள், கும்பாபிஷேகம், முருகன் திருவிழா ஊர்வலங்கள் ஆகியவற்றில் இப்பாடல் ஒலிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் (YouTube, Instagram Reels, WhatsApp Status) அதிகம் பயன்படுத்தப்படும் முருகன் பக்திப் பாடல்களில் இதுவும் ஒன்று.
