ஓம் தில்லை நடராஜனே பாடல் வரிகள்

ஓம் தில்லை நடராஜனே, சிதம்பர வாசனே, சிவகாமி நேசனே வா…
உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே, நலம் பெற அருளே வா…

சாமி பிட்டுக்கு மண் சுமந்த ஈசனே
கையில் பிரம் படி பட்ட பரமேசனே

சாமி பிட்டுக்கு மண் சுமந்த ஈசனே
கையில் பிரம் படி பட்ட பரமேசனே

சாமி கட்டு கட்டாய் விறகினை கடைத் தெருவில் விற்றுவந்த கயிலை நாதனே வா….

உன் நடனத்தை காணவே ஆடி வந்தோம் தேவனே நலம் பெற அருளே வா….

ஓம் தில்லை நடராஜனே…. ஓம் தில்லை நடராஜனே…..

ஓம் தில்லை நடராஜனே, சிதம்பர வாசனே, சிவகாமி நேசனே வா…
உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே, நலம் பெற அருளே வா…

அய்யன் சாம்பலையும் பூசிக்கொண்டு வந்து, உன் பரதேசி வேடம் நானும் கண்டு

சாமி சாம்பசிவ சங்கர சாம்பசிவ சங்கர ஸம்போ மகாதேவா

உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் பெற அருளே வா….

ஓம் தில்லை நடராஜனே, சிதம்பர வாசனே, சிவகாமி நேசனே வா….
உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே, நலம் பெற அருளே வா…

தென்னாடுடைய சிவனே போற்றி!.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!..

ஓம் நமசிவாய…. ஓம் நமசிவாய….

தென்னாடுடைய சிவனே போற்றி

ஆடுக நடனம் ஆடுகவே பாடல் வரிகள்

சிவபுராணம் பாடல் வரிகள்

என்னப்பன் அல்லவா பாடல் வரிகள்

ஓம் தில்லை நடராஜனே பாடல் காணொளி 

2 Comments

Leave a Comment

error: Copying content is Prohibited, Instead you can share it! :)