செல்வந்தராக்கும் ரத சப்தமி விரதம்!சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் மிக முக்கியமானது, ‘ரத சப்தமி’ ஆகும். இந்த நாளில் விரதம் இருந்து செய்யப்படும் தான, தருமங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஓம் சூர்யாய நம: செயலை தூண்டுபவனுக்கு வணக்கம்

ஓம் அர்க்கய நம: போற்றுதலுக்குரியவனுக்கு வணக்கம் ஓம் ஆதித்யாய நம: தேவர்க்கெல்லாம் தேவனாக இருப்பவனுக்கு வணக்கம் பொங்கல், ரதசப்தமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சூரிய உதயத்துக்கு முன்னதாக நீராடிய பிறகு, இந்த மந்திரத்தைச் சொன்னால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும். சமஸ்கிருதத்தில் முடியாதவர்கள் இதிலுள்ள தமிழ் அர்த்தத்தைச் சொன்னாலே போதும்.

ஸ்ரீ சிவசூர்யநாராயணஸ்வாமியே திருவடிகள் போற்றி

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் மிக முக்கியமானது, ‘ரத சப்தமி’ ஆகும். இந்த நாளில் விரதம் இருந்து செய்யப்படும் தான, தருமங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் மிக முக்கியமானது, ‘ரத சப்தமி’ ஆகும். இது ‘சூரிய ஜெயந்தி’ என்றும் அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ‘ரத சப்தமி’ என்கிறோம்.

‘சப்தம்’ என்றால் ‘ஏழு’ என்று பொருள். அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் சப்தமி திதியாகும். உத்ராயன புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே ‘ரத சப்தமி’ என்று போற்றப்படுகிறது. அன்றைய தினம் சூாியன் பயணிக்கும் தேரை இழுத்துச் சென்றும், 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி தன்னுடைய பயணத்தைத் தொடங்குகின்றன.

இந்த நாளில் சூரிய உதயத்தில் எழுந்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். பெண்கள் 7 எருக்கம் இலைகள், மஞ்சள், அட்சதையும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் 7 எருக்கம் இலைகள் மற்றும் அட்சதையும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.

7 எருக்கம் இலைகளையும் கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள்பட்டையில் இரண்டு, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும். இவ்வாறு வைத்துக் ெகாண்டு நீராடுவது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.

தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள் 7 எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள் ஆகியவற்றை தலையில் வைத்து நீராடுவது சிறப்பு. கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப் பிடித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன.

ரத சப்தமி அன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய- சந்திரரை வரைந்து, அவர்கள் பவனி வருவதாக நினைத் துக்கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உட்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரிய நாராயணரின் துதி களைச் சொல்லி வழிபட வேண்டும்.

கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசு மாட்டிற்கு கொடுப்பது மிகவும் நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து, அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவற்றை படைக்கலாம்.

இந்த நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஒருநாள் பிரமோற்சவம்

திருப்பதியில் ரதசப்தமி தினத்தன்று, ஒருநாள் பிரமோற்சவம் நடை பெறும். அன்றைய தினம் திருமலை யில், ஸ்ரீதேவி- பூதேவி சமேத மலையப்ப சுவாமி, 7 வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் பவனி வருவார். இந்த ஒரு நாள் பிரமோற் சவத்தை ‘சிறிய பிரமோற்சவம்’ என்றும் அழைப்பார்கள். ரத சப்தமி அன்று அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், காலை 9 மணிக்கு சின்ன ஆதிசேஷன் வாகனத்திலும், 11 மணிக்கு கருட வாகனத்திலும், பகல் 1 மணிக்கு அனுமன் வாகனத்திலும் மலையப்ப சுவாமி வீதி உலா வருவார். பகல் 2 மணிக்கு சக்கர ஸ்நானம் நடைபெறும். தொடர்ந்து மாலை 4 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணிக்கு சந்திர பிரபையிலும் சுவாமி வலம் வருவார். அதோடு பிரேமாற்சவ நிகழ்ச்சி நிறைவு பெறும்.

பொங்கல், ரதசப்தமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சூரிய உதயத்துக்கு முன்னதாக நீராடிய பிறகு, இந்த மந்திரத்தைச் சொன்னால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும். சமஸ்கிருதத்தில் முடியாதவர்கள் இதிலுள்ள தமிழ் அர்த்தத்தைச் சொன்னாலே போதும்.

ஓம் சூர்யாய நம: செயலை தூண்டுபவனுக்கு வணக்கம்

ஓம் அர்க்கய நம: போற்றுதலுக்குரியவனுக்கு வணக்கம்

ஓம் ஆதித்யாய நம: தேவர்க்கெல்லாம் தேவனாக இருப்பவனுக்கு வணக்கம்

ஓம் அம்ருதாய நம: அமிழ்தமாக இருப்பவனுக்கு வணக்கம்

ஓம் ஜகதேக சக்ஷüஷே நம: உலகின் கண்ணாக இருப்பவனுக்கு வணக்கம்

ஓம் ஜகதாத்மனே நம: உலகுக்கு உயிராக இருப்பவனுக்கு வணக்கம்

ஓம் மித்ராய நம: நண்பனாக இருப்பவனுக்கு வணக்கம்

ஓம் தபனாய நம: காய்ச்சுபவனாக இருப்பவனுக்கு வணக்கம்

ஓம் காலகாரணாய நம: காலத்தை உண்டாக்குபவனுக்கு வணக்கம்

ஓம் தீவாகராய நம: பகலை உருவாக்குபவனுக்கு வணக்கம்

ஓம் பாஸ்கராய நம: ஒளியை உண்டாக்குபவனுக்கு வணக்கம்

ஓம் ககாய நம: வானத்தில் சஞ்சரிப்பவனுக்கு வணக்கம்

ஓம் ரவயே நம: மாறுதலைச் செய்பவனுக்கு வணக்கம்

ஓம் ஹம்ஸாய நம: பரமாத்மனுக்கு வணக்கம்

ஓம் பூஷ்ணே நம: அனைத்து உயிர்களுக்கும் உணவளிப்பவனுக்கு வணக்கம்

ஓம் ஜ்யோதிஷே நம: வெளிச்சமாக இருப்பவனுக்கு வணக்கம்

ஓம் ஹரண்யகர்பாய நம: அனைத்தையும் தன்னுள் அடக்கியவனுக்கு வணக்கம்

ஓம் விச்வ ஜீவனாய நம: உலகம் முழுமைக்கும் உயிராக இருப்பவனுக்கு வணக்கம்

ஓம் ஸஹஸ்ரபானவே நம: அளப்பரிய ஒளியுடையவனுக்கு வணக்கம்

ஓம் மரீசயே நம: கதிரையுடையவனுக்கு வணக்கம்

ஒம் ஸவித்ரே நம: உண்டுபண்ணுபவனுக்கு வணக்கம்

ஓம் பிரத்யக்ஷதேவாய நம: கண்கண்ட தெய்வமாக இருப்பவனுக்கு வணக்கம்

ஓம் தசதிக் ஸம்ப்ரகாசாய நம: பத்துத்திக்குகளிலும் ஒளிவீசுபவனுக்கு வணக்கம்

ஓம் கர்மசாக்ஷிணே நம: செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு வணக்கம்

ஓம் அம்சமாலினே நம: கதிர்மாலையை உடையவனுக்கு வணக்கம்

ஓம் ப்ரபாகராய நம: பிரபையை உண்டு பண்ணுகிறவனுக்கு வணக்கம்

ஓம் சூரிய நாராயணாய நம: செயலை தூண்டும் இறைவனுக்கு வணக்கம்

சூரிய நமஸ்கார மந்திரம்

சூரிய (பூஜை) நமஸ்காரம் என்பது மற்ற தெய்வங்களை பூஜை அறையில் வழிபடுவது போல சூரியனையும் வழிபடுவதையேக் குறிக்கும்.

சூரிய நமஸ்கார மந்திரம்

சூரிய (பூஜை) நமஸ்காரம் என்பது மற்ற தெய்வங்களை பூஜை அறையில் வழிபடுவது போல சூரியனையும் வழிபடுவதையேக் குறிக்கும். இது யார் வேண்டுமானாலும் எளிய முறையில் செய்யலாம்.

அதிகாலையில், அதாவது ஆறு மணிக்குள் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து சமயச் சின்னங்களை (விபூதி, குங்குமம், திருமண் போன்றவை) அணிந்து கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனை தரிசனம் செய்வது சூரிய நமஸ்காரத்தின் முதல்படி

ஓம் மித்ராய நம:

ஓம் ரவயே நம:

ஓம் சூர்யாய நம:

ஓம் பானவே நம:

ஓம் ககாய நம:

ஓம் பூஷ்ணே நம:

ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:

ஓம் மரீசய நம:

ஓம் ஆதித்யாய நம:

ஓம் ஸவித்ரே நம:

ஓம் அர்க்காய நம:

ஓம் பாஸ்கராய நம:

ஸ்ரீ சிவசூர்யநாராயணஸ்வாமியே திருவடிகள் போற்றி

Leave a Comment