Thaga Thaga song lyrics

தகதக தகதகவென ஆடவா என்ற பாடல் (Thaga Thaga Thaga song lyrics in tamil) 1973 ஆம் ஆண்டு வெளிவந்த காரைக்கால் அம்மையார் என்ற திரைப்படத்தில் திரு. குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் திரு. கண்ணதாசன் அவர்களின் பாடல் வரியில், திருமதி. கே.பி. சுந்தராம்பாள் அவர்களால் பாடப்பட்ட பாடல். இது மிக சிறப்பான பாடலாகும்.

ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை
பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா
உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி…..

தகதக தகதகவென ஆடவா –சிவ
சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதகவென ஆடவா –சிவ
சக்தி சக்தி சக்தியோடு ஆடவா……….

ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே
நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே
தாள வகைகளோடு மேள துந்துபிகள்
முழங்கிட ஓர் கணமே காலைத் தூக்கியே
ஆனந்தத் தாண்டவம் ஆடுக மன்னவனே

முத்துக்கொடி சக்திக் குலமகள்
வித்துக்கொரு வெள்ளந்த துணையென
பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட

தித்திப்பது இறைவன் பெயரென
பற்றுந்தரும் பரமன் துணையென
சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட

சுற்றுந்தரும் ஒரு வகை அறிவினில்
முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள்
வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட

திக்குப் பல திமிதிமிதிமி என
தக்கத் துணை தக தக தக தகவென
தட்டக்கடல் அலையென நடமிடு உலகாட

இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி
எழிலோடு எமையாளவா
இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே
இயங்கியே உலகாளவா

அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே
அரசனே நடமாடவா
ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென
அம்மையுடன் நீ ஆடவா

சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா…

உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா
நாதகீத போதவேத பாவராகத் தாளமோடு
அடியவர் திருமுடி வணங்கிட
கொடி உயர்ந்திட படை நடுங்கிட….

ஓம் நமசிவாய…

தென்னாடுடைய சிவனே போற்றி…
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

சிவாஷ்டகம்

108 சிவன் போற்றி

Leave a Comment