வடிவுடையம்மன் 108 போற்றி:

 ஓம் ஒற்றியூர் நாயகியே போற்றி

ஓம் ஒங்கு புகழே போற்றி

ஓம் உமையே அம்மையே போற்றி

ஓம் வடிவுடை மாணிக்கமே போற்றி

ஓம் வரம் தந்திடுபவளே போற்றி

ஓம் வாடா நாயகியே போற்றி

ஓம் வாய்மை தேவியே போற்றி

ஓம் வளம் தந்திடுபவளே போற்றி

ஓம் வசிஷ்டருக்கு அருளினாய் போற்றி

ஓம் லோக நாயகியே போற்றி

ஓம் ஞான வடிவே போற்றி

ஓம் ஞானாம்பிகையே போற்றி

ஓம் கலியனுக்கு அருளினாய் போற்றி

ஓம் அமுது படைத்தாய் போற்றி

ஓம் இன்பத்தைக் காப்பவளே போற்றி

ஓம் அறிவைத் தருபவளே போற்றி

ஓம் அறிவின் திருவே போற்றி

ஓம் வெற்றித் திருவே போற்றி

ஓம் ஆதி தேவியே போற்றி

ஓம் அகத்தியருக்கு அருளினாய் போற்றி

ஓம் மன்னர்களுக்கு அருள்வாய் போற்றி

ஓம் மகாதேவி போற்றி

ஓம் மேன்மை தேவியே போற்றி

ஓம் ஞாயிறு ஒளியே போற்றி

ஓம் மின்னல் நாயகியே போற்றி

ஓம் துர்கா தேவியே போற்றி

ஓம் வித்யா தேவியே போற்றி

ஓம் சக்கர நாயகியே போற்றி

ஓம் சங்கடம் தீர்ப்பவளே போற்றி

ஓம் சந்தோஷம் தருபவளே போற்றி

ஓம் ஆதிபுரி நாயகியே போற்றி

ஓம் தேவர்கள் தலைவியே போற்றி

ஓம் படம்பக்க நாதர் தேவியே போற்றி

ஓம் வேதபுரீஸ்வரி தேவியே போற்றி

ஓம் வேதத்தின் தேவியே போற்றி

ஓம் நாகேஸ்வரி தேவியே போற்றி

ஓம் நிலவின் தலைவியே போற்றி

ஓம் பாட்டின் பொருளே போற்றி

ஓம் மும்மூர்த்திகள் தேவியே போற்றி

ஓம் முழுநிலவு நாயகியே போற்றி

ஓம் வெள்ளிக்கிழமை நாயகியே போற்றி

ஓம் வேதத்தின் வித்தே போற்றி

ஓம் கலைமகள் தேவியே போற்றி

ஓம் கலைக்கு அரசியே போற்றி

ஓம் வீணாதேவியே போற்றி

ஓம் பாசம் ஏந்திய தேவியே போற்றி

ஓம் பாசத்தை அறுப்பவளே போற்றி

ஓம் அங்குச நாயகியே போற்றி

ஓம் அரசனின் அரசியே போற்றி

ஓம் கடலரசன் தேவியே போற்றி

ஓம் மலைமகளே போற்றி

ஓம் மகேசன் மனைவியே போற்றி

ஓம் அருளே அரசியே போற்றி

ஓம் ஐயத்தை அருள்பவளே போற்றி

ஓம் விஐயத்தை அருள்பவளே போற்றி

ஓம் உமையே உட்பொருளே போற்றி

ஓம் நந்தா விளக்கே போற்றி

ஓம் நாதமே நாயகியே போற்றி

ஓம் கந்தனுக்கு வேல் தந்தாய் போற்றி

ஓம் கணபதிக்கு அங்குசம் தந்தவளே போற்றி

ஓம் சிவத்தின் சக்தியே போற்றி

ஓம் மஹா சக்தியே போற்றி

ஓம் நடராஜர் நாயகியே போற்றி

ஓம் திருவருள் தேவியே போற்றி

ஓம் தீர்த்த நாயகியே போற்றி

ஓம் மகிழமர நாயகியே போற்றி

ஓம் மந்திர சக்தியே போற்றி

ஓம் புராண நாயகியே போற்றி

ஓம் புண்ணியம் தருபவளே போற்றி

ஓம் பிரகாச நாயகியே போற்றி

ஓம் பிரம்மனுக்கு உபதேசித்தாய் போற்றி

ஓம் சித்திரை நாயகியே போற்றி

ஓம் பிரளயம் காத்ததேவி போற்றி

ஓம் எழுத்தின் நாயகியே போற்றி

ஓம் ஏழுலகம் காப்பவளே போற்றி

ஓம் குலம் காப்பவளே போற்றி

ஓம் குங்கும நாயகியே போற்றி

ஓம் கைலாச நாயகியே போற்றி

ஓம் வினை தீர்க்கும் நாயகியே போற்றி

ஓம் வினை அறுப்பவளே போற்றி

ஓம் கொற்றவை தேவியே போற்றி

ஓம் ஓங்கார காயிதே போற்றி

ஓம் மெய் ஞான சக்தியே போற்றி

ஓம் அனுகிரக நாயகியே போற்றி

ஓம் மாணிக்கமே மரகதமே போற்றி

ஓம் மாதவன் சகோதரியே போற்றி

ஓம் பூவே பூங்கொடியே போற்றி

ஓம் தேனே கரும்பே போற்றி

ஓம் திருவே தேவியே போற்றி

ஓம் தேவர்களுக்கு அரசியே போற்றி

ஓம் கருணை கடலே போற்றி

ஓம் கருணையின் வடிவே போற்றி

ஓம் குடும்பத்தை காப்பவளே போற்றி

ஓம் யோகத்தை தருபவளே போற்றி

ஓம் உலகத்தை காப்பவளே போற்றி

ஓம் காலத்தை மாற்றுபவளே போற்றி

ஓம் சதுர்த்தசி நாயகியே போற்றி

ஓம் சகலசக்தி நாயகியே போற்றி

ஓம் உலகின் உயிரே போற்றி

ஓம் ஆபத்தில் காப்பவளே போற்றி

ஓம் அனைத்தும் ஆனவளே போற்றி

ஓம் திரிபுர நாயகியே போற்றி

ஓம் உத்தம நாயகியே போற்றி

ஓம் பஞ்ச பூத நாயகியே போற்றி

ஓம் கோள்களின் தேவியே போற்றி

ஓம் ஞான சக்தி ஆனாய் போற்றி

ஓம் உயிர்களுக்கு ஞானம் தருவாய் போற்றி

ஓம் ஞான வடிவுடையே போற்றி! போற்றி!

****** சர்வமும் சக்தி மயம் ******

108 துர்க்கை அம்மன் போற்றி

Mahishasura Mardini Lyrics in Tamil | அயிகிரி நந்தினி பாடல் வரிகள்

Leave a Comment

error: Copying content is Prohibited, Instead you can share it! :)