(How to meet siddhargal) மனிதர்களுக்கு விடையே தெரியாத இரண்டு கேள்விகள் இந்த உலகத்தில் உள்ளது. அது என்ன கேள்வி! என்பதை பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்வோம். கடவுள் இருப்பது உண்மையா? இறந்த பின்பு நம்முடைய உயிர் என்ன ஆகிறது? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பல மகான்கள், பல விதமான பதில்களை சொல்லி இருந்தாலும், மனிதனாக பிறவி எடுத்தவருக்கு, இந்த கேள்விக்கான சரியான பதில் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பதிலே தெரியாத இந்த கேள்விக்கான விடையை சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குமானது சாதாரண மனிதர்களுக்கு உண்டா என்பதும் சந்தேகம்தான்!. அறிவியல் ரீதியாகவும், பொதுவான கருத்துகள் சொல்லப்பட்டுள்ளதை தவிர, இதற்கான சந்தேகங்கள் இன்றளவும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
மேலே குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு கேள்விகளுக்கும், இந்த பதிவின் மூலம் கூட கட்டாயமாக பதில் சொல்ல முடியாது. ஆனால் இந்த உலகத்தில் கடவுள் என்பவர் இல்லை என்று முடிவு செய்து விட்டால், கட்டாயமாக தவறு செய்பவர்கள் தங்களுடைய தவறுகளை நிறுத்திக் கொள்ளாமல் மேலும் மேலும், பயமில்லாமல், தங்களுடைய தவறுகளை செய்து கொண்டே தான் இருப்பார்கள்.’
இரண்டாவதாக நம்முடைய உயிர் நம்மை விட்டு பிரிந்த பின்பு, ‘அடுத்த ஜென்மம் எடுக்கும்’ என்ற நம்பிக்கை நமக்கு இல்லாவிட்டால் இந்த ஜென்மத்தில் பாவங்கள் தலைவிரித்து ஆடும். ஆகவே, தவறு செய்தால் கடவுள் தண்டிப்பார் என்ற ஒரு நம்பிக்கையும், பாவங்கள் செய்தால் அடுத்த ஜென்மத்தில்லோ அல்லது நரக லோகத்திலோ தண்டனை இருக்கும் என்ற பயத்திலுமாவது, தவறுகள் இந்த பூமியில் குறைக்கப்படுகின்றன. இப்படியிருக்க, ‘கடவுள் இருக்கின்றார்’ என்பதை நம்புவதும், ‘அடுத்த ஜென்மம் உண்டு என்பதை நம்புவதிலும்’ எந்த ஒரு தவறும் இல்லை. என்று தான் கூற வேண்டும். இது நம்முடைய வாழ்க்கைக்கு நல்லது என்று, நம் முன்னோர்கள் சொல்லியிருக்கும் எந்த ஒரு கருத்தும் பொய்யாகாது என்பதையும், நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் கட்டாயமாக பதிலை நம்மால் பெற முடியும். யாரிடமிருந்து பதிலை தெரிந்து கொள்வது? இன்றளவும் இந்த பூமியில் சாகாவரம் பெற்று உலாவி வரும் சித்த புருஷர்களின் மூலம், விடை தெரியாத கேள்விகளுக்கு கூட, பதில் கட்டாயம் இருக்கும். விடையே இல்லாத சில கேள்விகளுக்கும், பதிலைத் தெரிந்து கொள்ளலாம்.
சித்தர்களை சந்திப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் நம்முடைய முன்னோர்கள் சித்தர்களை தரிசனம் செய்வதற்காக ஒரு பயிற்சியை நமக்கு சொல்லிவிட்டுத்தான் சென்றுள்ளார்கள். அது என்ன பயிற்சி என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நம்மில் பல பேருக்கு சித்தர்களை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சித்தர்ரையாவது, ஒருமுறையாவது, வாழ்க்கையில் தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பயிற்சியை தாராளமாக செய்யலாம்.
18 சித்தர்களில் யாரை சந்திப்பது என்ற குழப்பம் கட்டாயம் எல்லோருக்கும் வரும். ‘ஞானக் கோவை’ என்னும் சித்தர்கள் பாடலை தொடர்ந்து படித்து வந்தால் எந்த சித்தரை காண வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றிவிடும். எந்த சித்தரை நீங்கள் காண வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவர் தான் உங்களின் ஜென்மம் பத்தின ரகசியத்தை உங்களுக்காக சொல்லப்போகும் சித்த புருஷர்.
இந்த பயிற்சிக்கு முதலில் ஒரு மண் அகல் தீபத்தில், பசு நெய் ஊற்றி, தாமரைதண்டு திரி போட்டு, நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து 8அடி தூரத்தில் அந்த தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரையும் எடுத்து அந்த விளக்கிற்கு பக்கத்தில் வைத்து விடுங்கள்.
ஒரு மரப்பலகையின் மீதோ அல்லது பாயின் மீதோ, நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள்.(தீபத்திலிருந்து 8 அடி தள்ளி அமர்ந்து கொள்ள வேண்டும்.) நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபத்தின் ஒளி, உங்களது நெற்றியின் புருவ நேர்கோட்டில் இருக்கும்படி அமர வேண்டும். நீங்கள் எந்த சித்தரை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த சித்தர் பெயரை மனதார ஒருமுறை உச்சரித்து விட்டு, ஆசி பெற்றுக்கொண்டு, அதன்பின்பு
‘ஓம் சிங் ரங் அங் சிங்’
என்ற இந்த மந்திரத்தை, தீபத்தின் ஜோதி சுடரை பார்த்தபடி, உங்கள் மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த மந்திரம் சித்தர்ரை உங்கள் வசம் ஈர்க்கக்கூடிய மந்திரமாக சொல்லப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தில் உலாவிக் கொண்டிருக்கும் சித்தர் பெருமக்களின் ஜீவாத்மாக்களை வசீகரிக்கும் தன்மையும் இந்த மந்திரத்திற்கு உண்டு.
இந்த பயிற்சியை நீங்கள் ஆரம்பிக்கும் தினம் அமாவாசை அன்று இருக்க வேண்டும். தொடர்ந்து 90 நாட்கள் இந்த பயிற்சியை செய்து பாருங்கள். நீங்கள் இந்த பயிற்சியை செய்ய வேண்டிய நேரம் இரவு 8 மணியிலிருந்து 9 மணிவரை. மந்திரத்தை இத்தனை முறைதான் உச்சரிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஒரு மணி நேரம் வரை உங்களால் எவ்வளவு முடியுமோ அத்தனை முறையும் உச்சரிக்கலாம்.
இந்தப் பயிற்சி முடித்த பின்பு, இரவு பழங்களை சாப்பிடலாம். அதன்பின்பு தீபத்தின் அருகில், செம்பில் வைத்துள்ள நீரை எடுத்து குடித்து விடவும். பழம் இல்லை என்றால், பால்சாதம் சாப்பிடலாம். முடிந்த வரை பயிற்சி செய்யும் இந்த 90 நாட்களுக்கும், உப்பு, புளி, காரம் இவைகளை குறைத்துக்கொள்வது அவசியம். அசைவ உணவு கட்டாயமாக சாப்பிடக்கூடாது. எந்த விதமான கெட்ட பழக்கத்திற்கும் செல்லக்கூடாது.
இந்த பயிற்சியை மேற்கொண்டால் 90 நாட்களுக்குள் ஒரு சித்தரின் தரிசனம் உங்களுக்கு கிடைக்கும் என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி 90 நாட்களில் சித்தர் தரிசனம் கிடைக்கவில்லை என்றால் தொடர்ந்து இந்த பயிற்சியினை செய்து வரலாம். நிச்சயமாக அதிசயமான ஒரு காட்சியை கட்டாயமாக நீங்கள் காணப் போவது உறுதி என்பதில் மட்டும் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதில் எந்த விதமான மாய மந்திர வித்தைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது…
18 சித்தர்களில் பதினெழாவது சித்தர் சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு
சித்தர்கள் கூறும் ஓரை இரகசியம்
அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (20) நாள் 3.5.2021 செவ்வாய்க்க்கிழமை அட்சய திருதியை… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our WhatsApp group _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°°°°°… Read More
Guru Peyarchi Palangal 2022-23 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 (Guru Peyarchi Palangal 2022-23)… Read More
Mesha rasi guru peyarchi palangal 2022-23 குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22 Mesha rasi guru peyarchi palangal 2022-23… Read More
Rishaba Rasi Guru Peyarchi Palangal 2022-23 ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal… Read More
Mithuna rasi Guru peyarchi palangal 2022-23 மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Mithuna rasi guru peyarchi palangal… Read More
Leave a Comment