Blogs

உணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் | Useful Health tips

சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் (Health tips)

1. தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும்

2. சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும்

3. வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும்

4. பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும்

5. குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.

6. மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும். உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.

7. சருமப் பிரச்னைகள் தீர அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் அரிப்பு, அக்கி கிருமிகள் நீங்கும்.

8. பருத்தொல்லை நீங்க புதினா இலைச்சாறுடன் ஓட்ஸ் கலந்து பருக்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும், அம்மன் அரிசி பச்சிலையின் சாறை தினமும் பருக்களின் மேல் தடவி வந்தாலும் பருக்கள் மறையும்.

9. கறிவேப்பிலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்குங்கள். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளநரை சீக்கிரமே மறைந்து போகும்.

Health tips

 

நெல்லிக்காயை நறுக்கி வெய்யிலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியைச் சேர்த்துப் பருகினால் விட்டமின் சி சத்து கிடைக்கும் இது வயிற்றுக்கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். தயிரில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்றாக வளரும்.

அத்தி இலையுடன் வில்வம் சேர்த்து காய வைத்து பொடி செய்து சாப்பிட கைகால் நடுக்கம் நரம்புதளர்ச்சி குணமாகும்.

தர்பூசணிப் பழம் சாப்பிட்ட பிறகு அதன் அடிப்பகுதியை பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ துருவி தயிர்பச்சடியாகவோ உளுந்துடன் சேர்த்து அரைத்து வடையாகவோ சாப்பிடலாம் சதைப்பகுதியில் மட்டுமல்ல இதிலும் நீர்ச்சத்து உள்ளது.

ஆரோரூட் மாவை வயிற்றுப்போக்கு ஏற்பட்டு களைப்படையும்பொழுது மட்டுமே கஞ்சி வைத்து சாப்பிட்டு குணமடைவோம். இது அனைவரும் அறிந்ததே. அறியாத விஷயம் என்னவென்றால் அதிக கோடையில் வியர்த்து விறுவிறுத்து களைப்பாக இருக்கும்போது ஆரோரூட் மாவு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கஞ்சி வைத்துக் குடித்தால் உடல் குளிர்ந்து வியர்க்காமல் இருக்கும்

மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். ஞாபக சக்தி பெருகும். வாந்தியை நிறுத்தும்.

தேநீர் தயாரிக்கும்போது வெல்லம் சேர்த்து அருந்துவதே நல்லது. சர்க்கரை உடலுக்கு அவ்வளவு உகந்ததில்லை.

கால்சியம் மாத்திரைகளை சாப்பிடுபவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்/ அப்போதுதான் கிட்னியில் கல் உண்டாகாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கீழா நெல்லியை பால் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு மூன்று நாள் தொடர்ந்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் குடலில் தேங்கியிருக்கும் பித்தவாயு வெளியேறிவிடும். இதுமட்டுமல்லாமல் குடல் வீக்கம் வயிற்று மந்தம் சரியாகும்.

காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து இருக்கிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரை ஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் இஞ்சிச்சாறும் தேனும் சேர்த்து சாப்பிடுங்கள் கூடவே கொஞ்சம் வெந்நீர் குடியுங்கள் காலை மாலை என மூன்று நாள் இதேபோல் சாப்பிட்டால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.

பொடுகுத் தொல்லை முடிகொட்டுதல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு வெது வெதுப்பான நீரில் குளித்து வந்தால் ப்லன் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் ஓரிரு மாதங்களில் வித்தியாசம் தெரியும்.

வயிற்று வலியால் அவதிப்படும்போது பத்து புதினா இலைகளை வெறுமனே வதக்கி ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் இறக்கி ஆற வைக்கவும் இதை காலை மதியம் மாலை என கொடுத்து வந்தால் வயிற்று வலி மட்டுமல்லாது வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளும் சரியாகும்.

பிரண்டையின் மேல் பகுதியில் உள்ள நாரை உரித்து எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து பச்சை நிறம் மாறி பொன்னிறமாக ஆகும்வரை வதக்க வேண்டும் அத்துடன் காய்ந்த் மிளகாய் புளி உப்பு உளுந்து தேங்காய் சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் வாயுத்தொல்லை விலகுவதோடு உடம்புக்கு பலமும் தரும்.

*அசத்தல் டிப்ஸ்*
……………………….
1. சிறு கீரை கண் எரிச்சல் இருமல் பித்தம் போகும். பசலைக்கீரை மலக்கட்டு உடல் வெப்பம் தணிக்கும். பொன்னாங்கண்ணிக்கீரை உடல் அழகு கூட்டும். புளிச்சக்கீரை ரத்தக் குறைபாடுகள் நீக்கும். புதினா ஜீரணசக்தி உண்டாகும். தூதுவளைக்கீரை காது கேளாமை காசம் சீராகும்

2. நீரிழிவுக்குக் கொண்டைக்கடலை கைகண்ட மருந்து. அதிலும் கறுப்பு கொண்டைக்கடலையில் சுண்ணாம்பு சத்து அதிகம் இந்தச் சுண்டலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

3. ஆறாத புண்ணை ஆற்ற தேங்காய் எண்ணெயில் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு காய்ச்சித் தடவவும். சீதபேதியைக் குணப்படுத்த மாதுளம் தோலை அரைத்து எருமைத்தயிரில் கலந்து மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்கவும் புளி ஏப்பத்தை நிறுத்த துருவிய கேரட்டில் பச்சடி செய்து சாப்பிடலாம்

4. சாதம் வடித்தக் கஞ்சியில் சிறிது மஞ்சள் தூள் போட்டு தெளிந்ததும் உப்பு சீரகத்தூள் கலந்து அருந்த அஜீரணக்கோளாறு நீங்கும்.

5. விட்டமின் பி 2 சத்து அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்ளவும் சருமம் மிருதுவாகவும் சுருக்கங்கள் விழாமலும் இருக்கும். இது பால் வெண்ணெய் மீன் முட்டை தானியங்கள் மற்றும் மணத்தக்காளி கீரையில் அதிகம் உள்ளது.

*எதுக்கு எது நிவாரணம்?*

மாங்காய் மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் அதற்குப் பால் ஒரு டம்ளர் குடிக்கவும்.

உணவில் அதிக நெய் சேர்த்தால் ஒரு கப் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.

பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் கேக் நிறைய சாப்பிட்டால் அதற்கு ஒரு டம்ளர் வென்னீர் குடிக்கவும்.

கனமான உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டால் சுக்கு வெல்லம் சாப்பிடலாம் அல்லது சுக்கு காப்பி தயாரித்து குடிக்கலாம்.

அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஸ்வீட் சிறிது சாப்பிடலாம்.

தேங்காய் தேங்காயில் செய்த பதார்த்தங்களை அதிக அளவு சாப்பிட்டு விட்டால் அதற்கு கொஞ்சம் அரிசி எடுத்து மென்று சாப்பிடவும்.

குடல் புண் அதிகம் இருந்தால் அடிக்கடி வாழைப்பூ சமைத்துச் சாப்பிடலாம்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை முள்ளங்கி அருமருந்து. அதை சாலட் ஆகவும் தயிர்பச்சடி ஜூஸ் என குடிக்க மஞ்சள் காமாலையிலிருந்து விடுபட்டு உடலும் ஆரோக்கியம் பெறும்,

விலகாத நோய் கூட விளாம்பழ லேகியத்தால் விலகும்.

காய்ச்சலுக்கு தண்ணீர் அதிகம் குடிக்க காய்ச்சலின் வேகம் குறையும். கருந்துளசி நீர் காய்ச்சலைக் குறைக்கும்.

உடல் கொழுப்பிற்கு வாழைத்தண்டை ஜூஸ் அல்லது கறி கூட்டு செய்து சாப்பிடலாம். இதனால் கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும்.

வெட்டை சூடு தணிய வல்லாரை இலை சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.

உடல் உஷ்ணத்திற்கு சீரக நீர் இள நீர் வெந்தயம் ஊறவைத்த நீர் அருந்தக் கொடுக்கலாம்.

வெயிலில் அலைந்துவிட்டு வருபவர்களுக்கு சாத்து குடி ஜூஸ், அல்லது தண்ணீர் வெல்லம் அல்லது பானகம் கொடுக்க சுறுசுறுப்பாக இருக்கும்…

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil

    மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil மண்ணளந்த காளி அவள்… Read More

    10 hours ago

    மலையனூரு அங்காளியே பாடல் வரிகள் | Malayanooru Angaliyae amman song lyrics tamil

    மலையனூரு அங்காளியே  பாடல் வரிகள் | Malayanooru Angaliyae song lyrics in tamil மலையனூரு அங்காளியே பாடல் வரிகள்… Read More

    51 minutes ago

    தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் | Onnam padi eduthu song lyrics in tamil

    தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் - Onnam Padi Eduthu Song lyrics தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் அல்லது… Read More

    10 hours ago

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா | Karthigai deepam tiruvannamalai

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா! Karthigai deepam tiruvannamalai   🏕✅ தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை.… Read More

    9 hours ago

    ஆடுக நடனம் ஆடுகவே சிவன் பாடல் வரிகள் | Aaduga nadanam lyrics in tamil

    ஆடுக நடனம் ஆடுகவே சிவன் பாடல் வரிகள் | Aaduga nadanam lyrics in tamil ஆடுக நடனம் ஆடுகவே… Read More

    1 week ago

    பகவான் ஶ்ரீ  கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள்

    பகவான் ஶ்ரீ  கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள் அருமையான பதிவு, முழுவதும் படியுங்கள் ..   1. மகாவிஷ்ணு எடுத்த… Read More

    3 weeks ago