Aadi pooram Prayers for getting baby
பிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம்!
ஆடிப்பூரம் 2025 தேதி – 28/07/2025 – திங்கட்கிழமை
2025 ஆம் ஆண்டு ஆடிப் பூரம் ஜூலை 28, திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படும்.
ஆடிப்பூரம்:
ஆடித் திங்களில் வரும் பூர நட்சத்திரம் கொண்ட நாள் ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுகிறது.
சிறப்பு:
அம்பாளுக்குரிய விசேட நாளாகும், உமாதேவி அவதரித்த நாளாகவும், உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள் சக்தியாக உருவெடுத்த நாளாகவும் ஆடிப் பூரம் கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் உள்ள முக்கியமான வைபவங்களில் ஆடிப்பூரமும் ஒன்று. ஸ்ரீஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம். இந்த நன்னாளில், அதாவது ஆடி மாத பூர நட்சத்திர நாளில், சுமங்கலிகளுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீரங்கமன்னார் கோயில், மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோயில் மற்றும் திருவண்ணாமலை கோயில்களில் பத்து நாட்களும், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் மூன்று நாட்களும் ஆடிப்பூரத் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
ஆடிப்பூர நாளில், அனைத்து ஆலயங்களிலும் அம்பாள் சந்நிதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடுகள் நடைபெறும். இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், பிரசாதமாகத் தரப்படும் வளையலை பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால், அங்கு சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகும். விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் என்று தெரிவிக்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
மேலும் தகவலுக்கு: