கடக ராசி பலன்கள் – 75/100 – கடகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Kadaga rasi guru peyarchi palangal 2020-21
மென்மையான மனமும்… சிந்தித்து செயல்படும் உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே…!!
நடைபெற இருக்கின்ற குருப்பெயர்ச்சியில் குருவானவர் கடக ராசிக்கு ஆறாம் இடத்தில் இருந்து களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். குருதேவர் தான் நின்ற இடத்திலிருந்து ஐந்தாம் பார்வையாக கடக ராசிக்கு லாப ஸ்தானமான 11ஆம் இடத்தையும், ஏழாவது பார்வையாக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக முயற்சி ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.
குருதேவர் ராசியை பார்ப்பதினால் எப்போதும் புத்துணர்ச்சியுடனும், பொலிவுடனும் காணப்படுவீர்கள். பொது அறிவு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். தனிப்பட்ட திறமைகளை வளர்த்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். செய்கின்ற பணிகளின் மூலம் பெருமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான தருணங்கள் ஏற்படும்.
பெண்களுக்கு :
வாழ்க்கை துணைவரிடம் அவ்வப்போது சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். தாய்வழி உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். பிள்ளைகள் உங்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள்.
மாணவர்களுக்கு :
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான உதவிகள் கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வியில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருப்பது நன்மையை ஏற்படுத்தும். சக ஊழியர்களுடன் பேசும் பொழுதும், பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுதும் அவர்களின் தன்மைகளை அறிந்து செயல்பட வேண்டும். உத்தியோக உயர்வு தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு :
ரசாயனம் தொடர்பான உரங்களை பயன்படுத்துவதை காட்டிலும், இயற்கை உரங்களை பயன்படுத்தினால் லாபமும், விளைச்சலும் அதிகரிக்கும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் நீங்கி விளைச்சல்கள் அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளும், அறிமுகமும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு :
ஆபரணம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மையும், லாபமும் உண்டாகும். பங்குச்சந்தை தொடர்பான செயல்பாடுகளில் ஆலோசனைகளை பெற்று மேற்கொள்வது முன்னேற்றத்தை உண்டாக்கும். தொழிலில் எதிர்பார்த்த வங்கி கடன் உதவிகள் சாதகமாக அமையும்.
அரசியல்வாதிகளுக்கு :
கட்சி தொடர்பான பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு பலரின் பாராட்டுகளையும், ஆதரவுகளையும் பெறுவீர்கள். கட்சி மற்றும் மக்கள் சார்ந்த துறையில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். செய்யும் சேவைகளின் மூலம் ஆதரவும், அனுகூலமான வாய்ப்புகளும் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையில் இருப்பவர்கள் நெருக்கமான நபர்களின் மூலம் மாற்றங்களும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். இசை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தற்காப்பு கலைகளின் மூலம் பிரபலம் அடைவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும்.
களத்திர குரு குரு பகவான் உங்க ராசிக்கு 7ஆம் வீட்டில் அமர்கிறார். கேந்திர ஆதிபத்திய தோஷம்தான் என்றாலும் குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. குரு பார்வையால் கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கும் கண்டச்சனியால் ஏற்பட்ட கவலைகள் தீரு. குடும்பத்தில் அசாத்திய சூழ்நிலைகள் நிலவும். கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் வரலாம் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்லவும். குரு அதிசாரமாக செல்லும் காலங்களில் ஓரளவு நன்மையைத் தருவார்.
வழிபாடு :
தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைதோறும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து வழிபாடு செய்துவர உத்தியோக உயர்வும், தந்தை வழியில் ஆதரவுகளும் அதிகரிக்கும்.
செவ்வாய்க்கிழமைகளில் திருத்தணிக்குச் சென்று, தணிகை முருகனுக்குத் தீபமேற்றி வணங்கி வழிபட்டு வாருங்கள். தடைகள் அனைத்தும் விலகும்; விருப்பங்கள் நிறைவேறும்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_°°°°°°°°°°°°°°°*சித்திரை - 09**ஏப்ரல் - 22 - (… Read More
# 2025-26 தமிழ் புத்தாண்டு: விசுவாவசு வருடத்தின் பஞ்சாங்கக் கணிப்பும் பலன்களும் **தமிழ் புத்தாண்டு** இந்த ஆண்டு ஏப்ரல் 14,… Read More
Panguni Uthiram 2025 11-04-2025 மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.… Read More
Panguni Uthiram Special பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள்... Panguni Uthiram special அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திரம்… Read More
Rama Navami ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான்,… Read More
வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும். நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு… Read More