கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Kanni rasi guru peyarchi palangal 2021-22
கவனம் எதில் இருந்தாலும்… தன் கடமை தவறாத கன்னி ராசி அன்பர்களே…!!
கன்னி ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் இருந்த குரு இப்போது 6ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். (பொதுவாக 6, 8, 12 ம் இடங்கள் குருவுக்கு துர்பலன்களை தரக்கூடிய இடங்கள் ஆகும்.) குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 10, 12, 2 ஆகிய இடங்களில் படுவதால் ஏராளமான நன்மைகளும் நடைபெறும். உங்கள் ராசிக்கு குரு 4, 7க்கு உடையவர், அவர் 6ல் மறைகிறார். இது அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இருப்பினும் குரு பகவானின் 10, 12, 2 இடங்கள் பார்வையால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். 12ம் இடத்தை குரு பார்ப்பதால் சையன, போஜன, போக சுகம், ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலையும் கிடைக்க வாய்ப்புள்ளது. 2ம் இடத்தை குரு பார்ப்பதால் குடும்பம் விருத்தி பெரும், தன வசதி பெருகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.
நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் நல்ல உதவியும் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவும் கிட்டும். பெண்களுக்கு நல்ல குடும்பம் அமையும். குடும்பத்தினர் அனைவருக்கும் நல்லது நடக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை, வெளிநாடு யோகம் போன்றவை அமையும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட சுப காரியங்கள் நடைபெறும். உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். இந்த குரு பெயர்ச்சி காலக் கட்டத்தில் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நோய் நொடிகள் ஏற்படாத வகையில் உங்களை காத்துக்கொள்ளவும். பிறரின் போட்டி பொறாமைக்கு ஆளாக நேரிடும். எனவே எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
உங்களது சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னேற முடியும். மற்றவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிவீர்கள். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். வி.ஐ.பிகளை பகைக்க வேண்டாம். உங்கள் நிதிநிலையும் சாதகமாகவோ திருப்திகரமாகவோ இருக்காது. செலவுகள் யாவும் கட்டுக்குள் இருந்தாலும் எதிர்காலத்திற்கு சேமிக்க இயலாது. உங்கள் பொருளாதார நிலையை நன்கு உணர்ந்து, அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இது சரியான நேரமாக இருக்கும். இப்பொழுது கடன் வாங்கவோ அதற்கு விண்ணப்பிக்கவோ வேண்டாம். பணப்பற்றாக்குறை காரணமாக, பழைய கடன்களையும் அடைக்க முடியாமல் போகலாம். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் குறைவாக இருக்கும். உங்கள் செலவுகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். எதிர் காலத்திற்கு சேமிப்பு முடியாத காரியம். செலவுகளைப் பொறுத்தவரை, வீண் செலவுகளையும், ஆடம்பரங்களையும் கட்டுக்குள் வைப்பது அவசியம். கடன்களைப் பொறுத்தவரை எச்சரிக்கை தேவை.
குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி கலகலப்பாகச் செல்லும். குடும்ப விவகாரங்களை சிறந்த முறையில் சமாளிக்க முடியும். அடிக்கடி உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் நடந்து கொள்வீர்கள். சாதுர்யமாக நடந்து கொள்வது குடும்பத்திற்கு நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட முடியாமல் போகலாம். இதை புரிந்து கொண்டு நடந்து கொண்டால் மனதில் கவலை எழாது. கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது. திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் வரன் தேடுவதற்கு இது சுமாரான காலமாக இருக்கும். தேக ஆரோக்கியத்த்தில் கூடுதல் கவனம் தேவை. எப்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகுந்த பலனளிக்கும் எனலாம். பொதுவாக நீங்கள் பாதுகாப்புடன் இருப்பதும் நன்மை தரும். குடும்பத்தினரின் உடல்நிலை சுமாராக இருக்கும்.
உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சுப பலன்கள் கிட்டும். கொடுத்த வேலையில் முழு மூச்சுடன் செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் வேலை மற்றும் தொழில் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கவனத்துடனும், பொறுமையுடனும் கையாளவும். தொழில், வியாபாரத்தில் சராசரி பலன்கள் கிட்டும். உத்யோகத்தில் பொறுத்தவரை இந்தக் காலக் கட்டம் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். ஊக்கத் தொகை, பதவி உயர்வு, ஊதிய உயர்வு, நீங்கள் விரும்பிய இடமாற்றம் போன்றவை விருப்பும் வகையில் இருக்கும். உங்கள் கடின உழைப்பு, உங்கள் வேலை முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
6ல் உள்ள குரு பகவான் எப்படி பார்த்தாலும் பல வகையில் நன்மைகளை செய்து இந்த குரு பெயர்ச்சியை உங்களுக்கு சாதகமாக மாற்றுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
பரிகாரம் : விட்டுப்போன முன்னோர் வழிபாட்டினை முறையாக செய்யவும்
கன்னி ராசிக்காரர்களுக்கு ஸ்ரீரங்கநாதர் ஆலயமே சிறந்த பரிகார ஸ்தலம் ஆகும். அதிலும் குறிப்பாக திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் பெரியபிராட்டி ஆலயத்திற்கு எதிரே இருக்கும் ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு, மற்றும் செட்டிபுண்ணியம் ஸ்ரீஹயக்ரீவர் ஆலய வழிபாடு மிகச் சிறந்த நன்மைகளைத் தரும். வாழ்க வளமுடன்
சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜப் பெருமானை வணங்குங்கள். வாய் பேச மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்
பசு வழிபாட்டின் மகத்துவம். பசு வழிபாட்டின் மகத்துவம் - (Benefits of worshipping cow) இந்துக்களுக்குரிய வழிபாடுகளில் பசு வழிபாடு… Read More
வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More
108 Murugar Names tamil | 108 முருகர் போற்றி 108 murugar names ஓம் அழகா போற்றி ஓம்… Read More
Kandha guru kavasam lyrics கந்த குரு கவசம் பாடல் வரிகள்... Kandha guru kavasam கலியுகத் தெய்வமே கந்தனுக்கு… Read More
அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (20) நாள் 3.5.2021 செவ்வாய்க்க்கிழமை அட்சய திருதியை… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our WhatsApp group *_📖 பஞ்சாங்கம்:… Read More
Leave a Comment