கன்னி ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் (Kanni rasi sani peyarchi palangal)
♍அஷ்டமத்து சனியிலிருந்து விடுபடும் கன்னி ராசிக்கு
கன்னி ராசிக்காரர்கள் புதனை ராசிநாதனாக கொண்டவர்கள்… எனவே புதனின் குணங்கள் இவர்களுக்கும் இருக்கும்… எனவே இவர்களும் புத்திசாலிகள் …புத்தியை பயன்படுத்தி பிழைக்க கூடியவர்கள்.. இவர்களுக்கு அறிவே மூலதனம் ..இவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள் சுருண்ட முடி உடையவர்கள்…
நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருக்கும் கன்னி ராசிக்காரர்கள்,, கிண்டல் கேலி நையாண்டி செய்வதிலும் வல்லவர்கள்.. இவர்கள் எல்லோரையும் அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என்று முறை வைத்து அழைத்து மனப்பூர்வமாக பாசத்துடன் இருப்பார்கள். மிதுன ராசியில் பிறந்தவர்கள் ஒருமாதிரியானவர்கள். எப்படியும் வாழலாம் என்ற கொள்கையுடையவர்கள்…. ஆனால் கன்னி ராசியில் பிறந்தவர்கள் நேர்வழியில் நியாயமான வழியில் சம்பாதிப்பவர்கள் ஆக இருப்பார்கள்.
கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு கன்னி லக்னமாகவும் அமைந்து விட்டால் மிக நளினமான ,அழகாக, சுருண்ட முடியுடன்,பிறரை கவர்ந்திழுக்கும் பேரழகுடன் காண்பவரை கவர்ந்து இழுப்பார்கள்.. இவர்களுக்கு பேச்சுதான் மூலதனம். . உலக விஷயங்களை தன்னுடைய விரல்நுனியில் (பிங்கர் டிப்ஸில்) வைத்திருப்பவர்கள் கன்னி ராசியினர்.. இவர்களின் விகடமான, நகைச்சுவை கலந்த பேச்சை ரசித்து கேட்பதற்காகவே பத்து பேர் இவர்கள் பின்னால் சுற்றுவார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
புகழ்பெற்ற வக்கீல்கள், ஜோதிடர்கள் பட்டிமன்ற பேச்சாளர்கள், நகைச்சுவையாளர்கள், புதனுடைய ஆதிக்கம் மிகுந்தவர்கள்.. புதன் ஜாதகத்தில் தனித்து இருக்கவேண்டும் அல்லது சுபர்களோடு சேர்ந்து இருக்கவேண்டும்..பாவிகளோடு சேர்ந்தால் தானும் பாவியாகிவிடுவார்
அமோகமான பலன்கள்
♍கன்னிராசிக்கான சனிப்பெயர்ச்சி மிக சிறப்பான பலன்கள் பெற உள்ளது. கன்னி ராசிக்கு 2020 முதல் 2022 வரை எப்படிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்…
♍ ராசிக்கான சனிப்பெயர்ச்சி மிக சிறப்பான பலன்கள் பெற உள்ளது. கன்னி ராசிக்கு 2020 முதல் 2022 வரை எப்படிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்…
அர்த்தாஷ்டம சனி முடிவு
இவர் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
♍அர்த்தாஷ்டம சனி முடிவு
கன்னி ராசிக்கு இதுவரை அர்த்தாஷ்டமச் சனி இருந்தது. இதனால் பல கஷ்டங்கள், சோதனைகள், நோய்கள் கொடுத்திருந்தது. தாய்க்கு உடல் மற்றும் மன ரீதியாக பிரச்சினைகள் கொடுத்தது. வாகன பிரச்சினை, விபத்து, வாகனம் தொலைதல் என பல்வேறு செலவுகளை கொடுத்திருந்தது. பலர் தங்களின் வேலை இழக்க நேரிட்டது.
5ஆம் இடத்தில் சனி
சனி இருதுவரை உங்கள் ராசிக்கு 4ம் இடமான தனுசுவில் அமர்ந்து தனது 10ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்த்து வந்தார். இதனால் பல துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து வந்தீர்கள். குடும்பத்தில் பல பிரச்னைகள் இருந்தது.
தற்போது 5ல் சனி சஞ்சரிப்பதால் அவர் கெடுதலுக்கு பதிலான நன்மையை செய்ய உள்ளார். உங்களுக்கு பூர்வ புண்ணியங்கள் கிடைக்கப் போகிறது.
சனியின் 3, 7, 10 பார்வைகள் சற்று மோசமான பலன்களை தரக் கூடியது. இதுவரை 10ம் பார்வையாக பிரச்னைகளை அனுபவித்த கன்னி ராசியினர் தற்போது சிறப்பான நல்ல பலன்களை பெறுஈர்கள்.
உங்களுக்கு தடைப்பட்டு வந்த தொழில், வியாபார முயற்சிகள் விருத்தி ஆகும். புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். எல்லா பிரச்னைகளும் தீரக்கூடிய அருமையான காலம் இது..
சனிப் பெயர்ச்சியின் போது சனியால் உங்களுக்கு எதன் மூலம் சுபம் மற்றும் அசுபமாக பலன்களை தருவார் தெரியுமா?
சனி பார்க்கும் பார்வை:
சனி பகவான் மகர ராசியில் அமர்ந்து அவர் மீனம், கடகம், துலாம் ஆகிய ராசிகளை முறையே 3, 7 மற்றும் 10ஆம் பார்வையாக பார்க்க உள்ளார்.
3ம் பார்வை பலனாக இதுவரை இருந்த விரய செலவுகள் நீங்கி லாபத்தையும் சேமிப்பையும் பெறப்போகிறீர்கள். உங்களின் வேலையில் முன்னேற்றம் இருக்கும்.
7ஆம் பார்வை
7ம் பார்வையான மிதுன ராசியைப் பார்ப்பதால் அது மனைவி, தொழில், பங்குதாரர் ஸ்தானமாக அமைவதால், குடும்பம், தொழிலில் நல்ல முன்னேற்ற சூழல் இருக்கும். அர்தாஷ்டம் சனி நீங்கி நன்மை ஏற்படும்.
திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடக்க சிறப்பான காலம் இது. இதுவரை தொழிலில் இருந்த இழுபறி நீங்கி லாபத்தைப் பார்க்கப் போகும் காலம்
குரு 4ம் இடமான சுக ஸ்தானத்தில் இருப்பதால் நீங்கள் முயற்சிக்கும் சொத்துக்கள், ஆடம்பர கார் வாங்கும் வாய்ப்பு அமையும். சுற்றுலா, விழாக்களில் கலந்து கொள்ளுதல் உள்ளிட்ட கேளிக்கைகள் நிறைந்திருக்கும்.
2021ல் குரு 5ம் இடம் செல்வதால் உங்களின் பூர்வ புண்ணியங்கள் மூழுவதும் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நடக்கும் சிறப்பான அதிர்ஷ்ட காலம்.
2022 பலன்
2022ல் குரு பகவான் உங்களுடைய 6ம் இடத்திற்கு செல்வதால் உங்களுக்கு இருந்த எதிரிகள் இடம் தெரியாமல் போவார்கள். உடல் ஆரோக்கிய பிரச்னைகள் தீர்ந்து சுக நிலை அடைவீர்கள். சனியும் சிறப்பான பலன்கள் தரக் கூடிய இடத்தில் அமைந்துள்ளது சிறப்பு.
தெரிந்து கொள்ள வேண்டியது:
கன்னி ராசிக்கு மட்டும் நீங்கள் பலனைப் பார்பதோடு, உங்கள் லக்கினத்திற்கான பலனைப் பார்க்கவும். இரண்டிலும் சிறப்பான பலன்கள் இருப்பின் நீங்கள் தான் ராஜா.
ராசியோ அல்லது லக்கினத்திற்கான பலன் சுமாராக இருப்பின் அதற்கேற்றார் போல நடந்து கொள்வது அவசியம்.
பரிகாரம்:
சனிக்கு சிறந்த பரிகாரமாக விநாயகரை வணங்குதல், அனுமனை வணங்குதல் மிகவும் சிறப்பானது. மாற்று திறனாளிகளுக்கு உதவுதல், தர்மமாக நடந்து கொள்ளுதல் நல்லது.
கடவுளை வணங்குவது, நியாயமாக நடந்து கொள்ளுதல், எந்த ஒரு வேலை செய்தாலும் முழு சிரத்தையுடன் செய்வது நல்லது.
மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | விருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | தனுசு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கும்பம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மீனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_°°°°°°°°°°°°°°°*சித்திரை - 09**ஏப்ரல் - 22 - (… Read More
# 2025-26 தமிழ் புத்தாண்டு: விசுவாவசு வருடத்தின் பஞ்சாங்கக் கணிப்பும் பலன்களும் **தமிழ் புத்தாண்டு** இந்த ஆண்டு ஏப்ரல் 14,… Read More
Panguni Uthiram 2025 11-04-2025 மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.… Read More
Panguni Uthiram Special பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள்... Panguni Uthiram special அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திரம்… Read More
Rama Navami ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான்,… Read More
வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும். நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு… Read More