Magara rasi guru peyarchi palangal 2023-24

மகரம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Magara rasi guru peyarchi palangal 2023-24

மன உறுதி அதிகம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!!

மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

உதட்டால் பேசாமல் இதயத்தால் பேசுபவர்களே…!

சுக ஸ்தான குரு – மகரம்

இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் வழி நடத்தும் ஆற்றல் பெற்றது நவக்கிரகங்கள் நவக்கிரகங்களிலே சுபக்கிரகமாக விளங்கக் கூடிய ஸ்ரீ குருபகவான் ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு கடக்கும் காலம் 1 வருடம் ஆகும் ஸ்ரீ சோபகிருது வருஷம் சித்திரை மாதம் 09-ம் தேதி 22.04.2023 சனிக்கிழமை இரவு 11.27-க்கு மணிக்கு ஸ்ரீ குருபகவான் ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன இராசியிலிருந்து அஸ்வினி நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷ இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

சனி பகவானின் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே!!! குருபகவான் உங்கள் ராசிக்கு 3 மற்றும் 12-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே ஆயுள் (8-மிடம் ) தொழில் (10-மிடம்) விரயம் (12மிடம்) ஸ்தானங்களில் பதியும். வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

குரு பகவான் உங்க ராசிக்கு 3வது வீட்டிலிருந்து 4வது வீட்டான அர்த்தாஷ்டம ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சியாக உள்ளார். கடந்த ஒருவருட காலமாகவே 3ல் குரு பகவானின் சஞ்சாரம் இருந்ததால், எதிலும் தடை தாமதம், ஏமாற்றம், மனக்குழப்பம், எந்த செயலை செய்வதற்கும் பயம், அடிக்கடி உடல் ஆரோக்கியம் சரியில்லாமல் போவது, பிடித்த வேலை கிடைக்காமல் திண்டாட்டம், பண நெருக்கடி என பல சவால்களை சந்திந்திருப்பீர்கள். ஆனால், தற்போது இந்த அர்த்தாஷ்டம குருவால் பல பிரச்சனைகள் பாதியாக குறையும். இருந்தாலும் இந்த அர்த்தாஷ்டம ஸ்தானம் என்பது தாயார் ஸ்தானம் என்றும் சொல்வார்கள். எனவே, இந்த காலக்கட்டத்தில் தாயாருடன் வாக்குவாதம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், உங்களுடைய உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். பண நெருக்கடிகள் தோன்றும். அதனால் அனாவசிய செலவுகளை முற்றிலும் குறைத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தினரால் அடிக்கடி பிரச்சனை வரும், நீங்கள் அமைதியாக சென்றால் பெரிய பிரச்சனையை தவிர்க்க முடியும். கவலைப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒருசிலருக்கு தீய பழக்கங்களுக்குச் அடிமையாகக் கூடிய சூழ்நிலை வந்து நீங்கும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வண்டி வாகனத்தில் செல்லும் நிதானம் அவசியம்.

குரு பகவான் அமரக்கூடிய இடம் தான் பிரச்சனையாக இருந்தாலும் பார்க்ககூடிய இடம் அற்புதமான பலன்களை கொடுக்கக்கூடியவை. அந்தவகையில், குரு பகவான் தனது 5வது பார்வையாக உங்க ராசிக்கு 8வது வீடான அஷ்டம ஸ்தானத்தை பார்வையிடுவதால் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணையிடம் இருந்துவந்த மனக்கசப்பு விலகும். கடன் பிரச்சனையால் அவதிப்பட்ட மகர ராசியினருக்கு ஒரு புது மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் திடீர் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினரால் ஏற்பட்ட குழப்பம் விலகும். சுயதொழிலால் லாபம் ஏற்படும்.

சிலர் அடகுவைத்த நகைகளை மீட்டெடுப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணியிட மாற்றம் உங்களுக்கு பிடித்தது போலவே அமையும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு செல்ல வாய்ப்புள்ளது. அடுத்ததாக, குருபகவான் தனது 7வது பார்வையாக உங்க ராசிக்கு 10வது வீட்டை பார்வையிடுவதால், தொழில் ஆர்வம் அதிகரிக்கும். அதாவது புதிய தொழில் தொடங்குவதற்கான எண்ணங்கள் ஏற்படும். ஆனால், பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவிற்கு இருந்தால் பிரச்சனை இருக்காது. கடன் கொடுப்பதையும், கடன் வாங்குவதையும் அறவே நிறுத்த வேண்டும்.

அதேபோல், எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை கொடுக்கும். எனவே, ரொம்ப எதிர்பார்ப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு தடை தாமதத்துடன் கிடைக்கும். மேலும், குரு பகவான் தனது 9வது பார்வையாக உங்க ராசிக்கு 12வது இடமான விரைய ஸ்தானத்தை பார்வையிடுவதால், தண்டச் செலவுகள் குறையும். நிலம், மனை போன்றவற்றில் முதலீடு செய்வதற்கு முன்பாக அந்த சொத்தில் இருக்கும் வில்லங்களை அறிந்து அதன்பிறகு முதலீடு செய்வது நல்லது. இல்லையென்றால் இழப்பு உங்களுக்கு தான். ஒரு சிலருக்கு குழந்தை பிறப்பால் சுபசெலவுகள் வரலாம். குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் நடைபெறும். மாணவர்கள் படிப்பில் அதிகம் முயற்சி எடுத்து படித்தால் வெற்றி உங்களுக்கே.

மகர ராசிக்காரர்களே ஏழரை சனியால் பல ஆண்டு காலமாக கஷ்டங்களை மட்டுமே சந்தித்து வரும் உங்களுக்கு குரு பகவானால் இனி வரும் காலங்கள் பாதிப்பை குறைத்து சந்தோஷத்தை அதிகரிக்கும். வேலை தொழிலில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறைந்து கவலைகள் நீங்கப் போகிறது இந்த குரு பெயர்ச்சி உங்களின் வாழ்க்கையில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தப்போகிறது.

பரிகாரம்
அருகில் இருக்கும் விநாயகர் ஆலயங்களுக்கு சென்று வணங்குங்கள். ஒருமுறை பிள்ளையார்பட்டி சென்று கற்பக கணபதியை மனம் ஒன்றி வணங்கி விட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நிம்மதி நிறையும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-24

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Leave a Comment