Subscribe for notification
Events

Magara rasi Guru peyarchi palangal 2024-25 | மகரம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

Magara rasi guru peyarchi palangal 2024-25

மகரம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Magara rasi guru peyarchi palangal 2024-25

மன உறுதி அதிகம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!!

மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025

உதட்டால் பேசாமல் இதயத்தால் பேசுபவர்களே…!

மகரம்  குரு பெயர்ச்சிபலன்கள் – 01.05.2024 முதல் 13.04.2025 வரை

குருபகவானின் நட்சத்திர பயணம்: 

 1.5.2024 முதல் 13.6.2024 வரை சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்கள் வீட்டு விஷேசங்களை எடுத்து நடத்துவீர்கள். தொலை தூர பயணங்கள் உண்டு. வேற்று மதத்தினர், வேற்று மொழி பேசுபவர்கள் உதவுவார்கள். சிறு சிறு விபத்துகள் வந்து போகும். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம்.

13.6.2024 முதல் 19.8.2024 வரை மற்றும் 28.11.2024 முதல் 10.4.2025 வரை சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் செல்வாக்கு கூடும். இழுபறியான வேலைகள் உடனே முடியும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு உடல்நிலை சீராகும். மனைவி வழி உறவினருடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வாகனம் அமையும். வசதியான வீட்டுக்கு இடமாறுவீர்கள். பிள்ளை பாக்கியம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. ஆபரணங்கள் வாங்குவீர்கள்.”

 20.8.2024 முதல் 27.11.2024 வரை மற்றும் 10.4.2025 முதல் 13.4.2025 வரை செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மூத்த சகோதரர் உதவுவார். புது வாகனம், சொத்து அமையும். முக்கிய பிரமுகர்களின் ஆதரவால் பெரிய பதவியில் அமர்வீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.

தன் பலம் பலவீனம் அறிந்து, தன்னை தயார்படுத்திக் கொள்பவர்களே! குரு பகவான் கடந்த ஓராண்டு காலமாக 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் கஷ்டப்படுத்தினார். நிம்மதியில்லாமலும், தூக்கமில்லா மலும், விரக்தியிலும், வேதனையிலும் நீங்கள் அலைந்தீர்கள். இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை 5-ம் வீட்டில் அமர்வதால் இனி விஸ்வரூபம் எடுப்பீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும்.

தடைகளும், தடுமாற்றங்களும் நீங்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். கணவரும் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கணவர் ஒருபக்கம், மனைவி ஒருபக்கம், பிள்ளைகள் ஒருபக்கம் என்று பிரிந்து இருந்தவர்கள் இனி ஒன்று சேருவீர்கள். மகளுக்கு திருமணம் சீரும், சிறப்புமாக முடியும். மகனுக்கு வேலை கிடைக்கும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் நோய் விலகும். முகத்தில் அழகு, இளமைக் கூடும். குரு 9-ம் வீட்டை பார்ப்பதால் வழக்கு சாதகமாகும். வழக்கால் பணம் உண்டு”

 “உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் பணத்தை திருப்பித் தருவார்கள். புது முதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள். தந்தைவழியில் இருந்த மனக்கசப்பு நீங்கும். தந்தையாரும் ஆதரவாகப் பேசுவார். தந்தைவழி சொத்து சேரும்.

லாப வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். சிலருக்கு ஷேர் மூலம் பணம் வரும். அக்கம் – பக்கம் வீட்டாருடன் இருந்த சச்சரவு நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். நாத்தனார், மச்சினர் மதிப்பார்கள். மாமனார், மாமியார் உங்களுடைய முடிவை ஏற்றுக் கொள்வார்கள்.

வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம். வெளிப்படையாக யாரையும் விமர்சிக்காதீர்கள். குடும்பத்திலும் அவ்வப்போது சச்சரவுகள் வரும். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.

நெருக்கடியான நேரத்தில் உங்களை பயன்படுத்தி விட்டு கறிவேப்பிலையாய் தூக்கி எறிந்து விட்ட நண்பர்கள், உறவினர்களை நினைத்து ஆதங்கப்படு வீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். எதிர்தரப்பு வாய்தாவால் வழக்குத் தள்ளிப் போகும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். மகனின் நட்பு வட்டத்தை கண் காணிப்பது நல்லது.

கூடாப்பழக்கம் தொற்ற வாய்ப்பிருக்கிறது. நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் வேறு அர்த்தத்தில் புரிந்துக் கொள் வார்கள். பணப்பற்றாக்குறை அதிகமாகும். பூர்வீக சொத்தை சரியாகப் பராமரிக்க முடியவில்லையேயென வருத்தப்படுவீர்கள். பேருந்துகளில் செல்லும் போது படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டாம்.

தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். பழைய பிரச்சினைகளை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். தடைப்பட்ட  “காரியங்களையெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும்.

மாற்று மதம், மொழி, மாநிலத்தவர்களால் உதவிகள் உண்டு. இளைய சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள்.

கேது 9-ம் இடத்திலேயே நீடிக்கயிருப்பதால் தந்தையாருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சை, மூச்சுத் திணறல், வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வந்துப் போகும். அவருடன் மனவருத்தங்களும் வரக்கூடும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை தலை தூக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்துக் கொண்டேயிருக்கும்.

வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள் வீர்கள். சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப செயல்படப் பாருங்கள். தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம். மூலிகை, கட்டிட உதிரி பாகங்கள், துணி, புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் உண்மையாக இருப்பது மட்டும் போதாது, உயரதிகாரிகளுக்கு தகுந்தாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். உங்களின் கடின உழைப்பை மூத்த அதிகாரிகள் புரிந்துக் கொள்வார்கள்.

சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். இழந்த சலுகைகளையும், மதிப்பு, மரியாதையையும் மீண்டும் பெறுவீர்கள். தள்ளிப் போன பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். இந்த குரு மாற்றம் எதிர்பாராத திடீர் யோகங் களையும், செல்வ செழிப்பையும், அந்தஸ்தையும் உங்களுக்கு அள்ளித் தரும்.

மகரம் ராசி குருப்பெயர்ச்சி பரிகாரம்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் உள்ள பட்டமங்கலம் எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபடுங்கள். பழைய கோயிலை புதுப்பிக்க உதவுங்கள். நினைத்தது நடக்கும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-25

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Sani peyarchi palangal 2025-2027 | சனிப்பெயர்ச்சி 2025-2027 பலன்கள்

    Sani peyarchi palangal 2025-2027 சனிப்பெயர்ச்சி 2025-2027 பலன்கள் (Sani Peyarchi Palangal 2025) இந்த மாற்ற நிலை 29.03.2025… Read More

    2 days ago

    பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க காரடையான் நோன்பு 14/3/2025 | karadaiyan nombu 2025

    காரடையான் நோன்பு -விளக்கம்-விரத முறை *காரடையான் நோன்பு* 🙏🙏 *காரடையான் நோன்பு* *சிறப்பு பதிவு* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *14.03.2025* *வெள்ளிக் கிழமை*… Read More

    2 days ago

    Mesham sani peyarchi palangal 2025-27 | மேஷம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்

    Mesham sani peyarchi palangal 2025-27 மேஷராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் (Mesham sani peyarchi) மேஷ ராசி (… Read More

    3 days ago

    Rishabam sani peyarchi palangal 2025-2027 | ரிஷபம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்

    Rishabam sani peyarchi palangal 2025-27 சனிப்பெயர்ச்சியால் யோகங்களை பெற உள்ள ரிஷப ராசி (Rishabam rasi sani peyarchi… Read More

    3 days ago

    Kadagam sani peyarchi palangal 2025-27 | கடகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்

    கடகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Kadagam sani peyarchi palangal 2025-27 சனி பகவான் 2025 புத்தாண்டில் மார்ச் 29,… Read More

    3 days ago

    Mithunam sani peyarchi palangal 2025-27 | மிதுனம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்

    Mithunam sani peyarchi palangal 2025-27 கால புருஷனின் மூன்றாவது ராசி, மிதுன ராசி (Mithunam sani peyarchi)… மிதுன… Read More

    3 days ago