மகேஸ்வராஷ்டமி | Maheswarashtami

நாளை 20.2.2025 – வியாழன் மகேஸ்வராஷ்டமி மாசி மாதத்து தேய்பிறை அஷ்டமி மகேஸ்வராஷ்டமி என்று அழைக்கப்படும்.

இதனை காலாஷ்டமி என்றும் சொல்வார்கள்….

அஷ்டமி தினம் பைரவர் வழிபாட்டுக்குச் சிறந்தது. ஆயுள் தோஷத்தை நீக்கக் கூடியது. சனிபகவானுக்கு பரிகாரமாக பைரவரை வணங்கலாம். அவர் பல்வேறு தொழில் பிரச்னைகளில் இருந்து விடுவிப்பார். பொதுவாகவே சிவாலயங்களில் முதல் வழிபாடு கணபதிக்கும், நிறைவு வழிபாடு பைரவருக்கும் செய்யப்படுகின்றது. பைரவரை காவல் தெய்வம் என்று கருதுவார்கள். நவகிரகங்களின் உயிர் தேவதையாக விளங்குபவர் பைரவர். அவருடைய உடலில் நவகிரகங்கள் மற்றும் 12 ராசிகள் இருக்கின்றன. அஷ்டமி நாளில் பைரவருக்கு வடை மாலை அணிவிக்கலாம். பைரவருக்கு மிளகை ஒரு துணியில் கட்டி, நல்லெண்ணையில் நனைத்து வைத்து விளக்கு ஏற்றினால், கஷ்டங்கள் விலகும். நிம்மதி பிறக்கும். கடன், வியாதி, எதிரி, போன்ற துன்பங்கள் முற்றிலும் விலகும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புது யுக்தி, முன்னேற்றம் ஏற்படும். காலையில் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். மாலையில் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு பைரவர் சந்நதிக்குச் சென்று வழிபட வேண்டும்.

Leave a Comment