Events

Meenam sani peyarchi palangal 2020-23 | மீனம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்

Meenam sani peyarchi palangal 2020-23

மீனம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 (Meenam rasi sani peyarchi palangal 2020)

லாபத்தை குவிக்க உள்ள மீன ராசி

உங்கள் ராசிநாதன் குருபகவான்..குருபகவானின் குணத்தை கொண்ட மீனராசியினர் நேர்மையானவர்கள்.

இதன் சின்னம் இரட்டை மீன்களை கொண்டது என்பதால் கழுவுற மீன்களில் நழுவுற மீன்கள் இவர்கள்.. நல்ல நெறிகளை கொண்ட இவர்கள் தன்னடக்கம் கொண்டவர்கள்.. மீனம் நீர் ராசி என்பதால் சிலருக்கு தண்ணீரில் நீந்துவது ரொம்ப பிடிக்கும்.. குளிர்ச்சியான ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ், இளநீர் போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார்கள்..

ஆன்மீக எண்ணம் , நல்ல நெறி, நல்ல நடத்தை, அடுத்தவர்களுக்கு உதவக்கூடிய எண்ணம் ,ரட்சித்தல், பெருந்தன்மை போன்ற நல்ல குணங்களை கொண்ட மீன ராசியினருக்கு தற்போது நடந்த சனிப்பெயர்ச்சி என்ன மாற்றங்களை தரப்போகின்றது என்று பார்ப்போமானால்

சனிப்பெயர்ச்சி 2020 நடக்கும் போது 11ல் சனி பகவான் அமர்ந்து, மீன ராசிக்கு நல்ல லாபத்தை தரக்கூடிய இடத்திற்கு வர உள்ளார். பாதக ஸ்தானமாக பார்க்கப்பட்டாலும், சனியால் மீன ராசியினர் நன்மைகளையே அதிகம் பெற உள்ளனர். சனியின் பார்வையால் எப்படிப்பட்ட பலன்களைப் பெற உள்ளனர் என்பதை விரிவாக காண்போம்…

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி 2020 ஜனவரி 24ம் தேதி நடக்க உள்ளது. இந்த சனி பெயர்ச்சி மூலம் மீன ராசிக்கு மிக நல்ல லாபம் மற்றும் நன்மைகள் அதிகம் அனுபவிக்கப் போகிறீர்கள்.

இதுவரை பத்தாம் இடமான, தசம கேந்திர ஸ்தானத்தில் அமர்ந்து உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்தார். வாழ்க்கையில் சங்கடங்கள், இடையூறுகள் கொடுத்து வந்தார்.

தற்போது 11ஆம் இடத்தில் மகர ராசியில் ஆட்சி பெற்ற சனியாக அமர உள்ளார். இதனால் மீன ராசிக்கு லாபமும், வரவும் ஏற்படும். இந்தாண்டு இறுதியில் குருவும் மகரத்தில் சனியுடன் இணையும் போது, இரு கிரகங்களும் லாப ஸ்தானத்தில் இருக்கும் போது மீன ராசிக்கு மிக சிறப்பான யோகம் கிடைக்கும். அதாவது 2020ஆம் ஆண்டுக்கு பிறகு மீன ராசி அல்லது லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல லாபமும், வரவு ஏற்படும்.

11ல் சனி இருப்பதால் கிடைக்கும் பலன்கள்

வேலை செய்பவர்களுக்கு உயர்பதவிகள், சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கன்சல்டண்ட் ஆக இருப்பவர்களுக்கு அதிக தொடர்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் கல்வி அல்லது வேலை வாய்ப்பிற்காக முயன்று கொண்டிருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

இந்த முறை மீன ராசியினர் அதிகளவு முயற்சி செய்யாவிட்டாலும், வெற்றிகளும், பாராட்டுகளும் குவியும். எதிர்பாராத லாபங்கள், நன்மைகள் கூடும்.

மற்றவர்களின் பார்வை உங்கள் மீது திரும்பும். உங்களை முன்னிறுத்தி மற்றவர்கள் செயல்படக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும்.

மீன ராசி மீது சனியின் 3ஆம் பாரவை பலன்கள்

சனி பகவான் 3,7,10ஆம் பார்வையால் பலன்களை கொடுப்பார். அந்த வகையில் 3ஆம் பார்வையாக சனியின் பார்வை மீன ராசியின் மீது விழுவதால் சற்று சஞ்சலமான மன நிலையோடு இருப்பீர்கள்.

நாம் செய்யும் வேலை தாமதப்படுமா, எதிர்மறையாக நடக்குமா என பல குழப்பமான மன நிலை தோன்றும். இருப்பினும் சனி 11ல் இருப்பதால், உங்களின் வேலைகள் கண்டிப்பாக சரியாக முடித்து கொடுத்துவிடுவார்.

சனியின் 7ஆம் பார்வை கடகத்தில், மீன ராசிக்கு என்ன பலன்

ஒரு பெரிய வேலையை செய்து முடிக்க வேண்டும் என திட்டம் தீட்டி அதை தொடங்கியிருந்தால், தொடக்கத்தில் அந்த செயலை செய்ய சிறு தடுமாற்றங்கள் இருந்திருந்தாலும், சனி 11ஆம் இடத்தில் அடையும் போது, அந்த செயல்கள் மிக சிறப்பாக முடிய சனி பாதையை அமைத்துக் கொடுப்பார்.

அப்போது எந்த காரியமாக இருந்தாலும் அது நடப்பதற்கு உண்டான தடைகள் நீங்கும்.

வீட்டை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கும் மீன ராசி மனைவியாக இருந்தாலும் சரி, ஏதேனும் ஒரு வகையில் அவருக்கு லாபமோ அல்லது பொருள் வரவோ, அல்லது சொத்து வரவோ, பல்வேறு பரிசுகள் கிடைக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார். இப்படிப்பட்ட லாபகரமான நிலையை கொடுப்பார்.

சனியின் 10ஆம் பார்வை துலாம் மீது விழுவதால் கிடைக்கும் பலன்கள்:

மீன ராசிக்கு 8ஆம் இடமாக துலாம் அமைந்திருப்பதால், இதுவரை சங்கடங்கள், எதிர்ப்புகள், வீண் அலைச்சல், வீண் பழிகள், குழப்பங்கள் இருந்தாலும் அதை எல்லாம் ஓரங்கட்டி அதிலிருந்து நல்ல பலனை கொடுக்கும் சாதகமான காலகட்டமாக அமையும்.

பொதுவாகவே அசுப கிரகமாக பார்க்கப்படும் சனி எப்போதெல்லாம் 11ஆம் இடத்திற்கு வருகின்றாரோ, அப்போதெல்லாம் அந்த ராசிக்கு லாபத்தையும், வரவையும் கொடுக்கக் கூடியவராக இருப்பார்.

வெளிநாட்டு யோகம்

​11ஆம் இடம் பாதக ஸ்தானமாக பார்க்கப்படுவதால், எப்போதெல்லாம் பேராசையுடன், கோபமாக, ஒரு உச்சமான விரக்தியில் இருப்பவர்களுக்கு தான் இழப்புகளை தருவார். ஆனால் அடிப்படையாக உழைக்கும் வர்க்கத்தினருக்கும், உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் கவனம் செலுத்தக் கூடியவர்களுக்கு லாபத்தை தரக் கூடியவராக தான் இந்த சனி பெயர்ச்சி இருப்பார்.

அந்தளவில் நேர்மறையான பலன்களை தரக் கூடியதாக தான் இந்த சனிப்பெயர்ச்சி அமையும்.

மாணவர்களுக்கு:

யாரெல்லாம் வெளியூர், வெளிநாடு சென்று படிக்க ஆசைப்படுகின்றனரோ, அல்லது அவர்கள் விரும்பக் கூடிய படிப்பை படிக்கக் கூடிய நல்ல ஆற்றலையும், வாய்ப்புக்களையும் கொடுப்பார். அதோடு படிப்பில் நல்ல கவனத்தை கொடுத்து நல்ல கல்வி முன்னேற்றத்தை கொடுப்பார்.

திருமணம் மற்றும் சுப காரியங்கள்

10ல் சனி இருக்கும் போது காரிய தடை இருந்திருக்கும். தற்போது 11ல் வந்த உடன் காரிய தடை விலக்கக் கூடிய காலமாக இருக்கும். 11ல் சனி வருவதால் திருமணம், குழந்தைப் பேறு என குடும்பம் விரிவாவதற்கு உதவிகரமாக இருப்பார்.

எப்போதெல்லாம் 11ஆம் இடத்தில் சனி வருகின்றதோ அப்போதெல்லாம் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அந்த வகையில் குடும்ப பெரியோர்கள், மூத்த சகோதரர்களின் ஆதரவு, உதவிகள் கிடைக்கும்.

இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை, சேமிப்பே இல்லை என நினைத்தவர்கள் கூட இந்த சனி பெயர்ச்சியால் சேமிப்பில் கவனமும் ஆர்வமும் ஏற்படும். கடன் பிரச்னைகள் தீர்ந்து முன்னேற்றம் உண்டாகும்.

அதுமட்டுமல்லாமல் வீடு, மனை, வாகனம் வாங்குதல் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் பாக்கியங்கள் உண்டாகும்.

இந்த சனிப்பெயர்ச்சி ராசி ரீதியாக மட்டுமல்லாமல் நட்சத்திர ரீதியாகவும் மிக நல்ல பலன்களைத் தான் பெற உள்ளனர்.

பரிகாரம்:

அடிக்கடி சிவாலயத்திற்கு சென்று ஈசனை வழிபடுவதும், நவகிரகங்களில் சனி பகவானை வழிபட்டு வருவதாலும், மிக நல்ல பலன்களை கூடுதலாக பெறலாம்.

மதுரையில் உள்ள இன்மையில் நன்மை தருவார் சிவன் கோயிலுக்கு சென்று வருவது நல்லது. முடியாதவர்கள் அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று வருவது நல்லது.

உங்களால் முடிந்தளவிற்கு ஏழைகள், ஆதரவற்றோருக்கு உணவு, உடை தானம் வழங்குங்கள்

மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | விருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | தனுசு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கும்பம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மீனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம் | Kolaru Pathigam lyrics in Tamil

    Kolaru Pathigam lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால் உண்டாகும்… Read More

    10 hours ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    1 week ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    1 week ago

    Komatha Stothram | பசுமாடு ஸ்தோத்ரம்

    பசுமாடு ஸ்தோத்ரம்       ஸ்ரீமன் நாராயணனும், பரமனும், இந்திரனும், ஆதி விஷ்ணுவும், அவருடைய அச்சுதரும், “பசுவம்மா ஸ்தோத்திரத்தை… Read More

    1 week ago

    Asta Kaali Deviyar Varalaru | அஷ்ட காளி தேவியர் வரலாறு

    அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More

    1 week ago

    Shri Narashimma vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம்

    ஸ்ரீ நரஸிம்ம வைபவம்*!  வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணனின் ‘*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்*! -26- *அடியவர்க்கு எளியவன்*! தூணிலிருந்து நரசிம்மமாக பகவான்… Read More

    1 week ago