Mesham sani peyarchi palangal 2025-27
மேஷராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் (Mesham sani peyarchi)
மேஷ ராசி ( விரைய சனி 70% )
சனி பகவான் 2025 புத்தாண்டில் மார்ச் 29, 2025 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம்பெயரவுள்ளார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார்
அந்த வகையில், மேஷம் ராசியின் சனிப்பெயர்ச்சி பலன்களை இந்த பதிவில் காணலாம்.
மேஷ ராசியில் சனி பகவான் பத்தாம் மற்றும் பதினொன்றாவது வீட்டிற்கு அதிபதியாகும், இந்த பெயர்ச்சியின் போது உங்கள் பன்னிரண்டாவது வீட்டிற்குள் நுழைகிறார். இப்போது உங்கள் ஏழரை சனி தொடங்கும். சனி பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. பாதம், முதுகு, கழுத்து, பாத வலி ஏற்படும். உடற்பயிற்சி மிகவும் முக்கியம். பிள்ளையாரை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். தொழில், வியாபாரம், சுப காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஏழரை சனியின் தொடக்கம் என்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க வேண்டும். எதிர்கால பிரச்னைகளுக்கு இந்த காலகட்டத்திலேயே தயாராகிக் கொள்ள வேண்டும்.
மேஷ ராசிக்கு ஏழரை சனியின் முதல் பகுதி தொடங்குகிறது. உங்களுக்கு விரய ஸ்தானத்தில் சனி காலம் தொடங்க உள்ளது. இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் உங்களின் வீண் செலவு அதிகரிக்கும். வாழ்க்கை தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக திண்டாட வேண்டியது இருக்கும். சில வேலைக்காக முன் பணம் வாங்கி அதை செய்து முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். பொது வாழ்க்கையில் வீண் பழி ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் நம்பிக்கை குறையும். உத்தியோகத்தில் உங்கள் வேலை, திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம்.உத்தியோகத்தில் உடனடியான முன்னேற்றம் காண வாய்ப்பு இல்லை என்றாலும் படிப்படியாக வளர்ச்சி இருக்கலாம். பணியிடத்தில் உங்களுக்கு அதிக பணிகள் வழங்கப்படலாம்.வேலை மாற்றத்திற்கு இது உகந்த நேரம் அல்ல. தொழில் செய்பவர்களுக்கு இது சிறந்த காலக்கட்டம்.
உங்கள் திறமைகளை பயன்படுத்தி நீங்கள் தொழிலில் முன்னேறுவீர்கள். கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். புதிதாகவும் கூட்டுத் தொழில் தொடங்கலாம்.உங்கள் பேச்சில் கவனம் தேவை. உங்கள் காதல் உறவை திருமண உறவாக நீங்கள் மாற்ற நினைக்கலாம். உங்கள் முயற்சியில் கவனமும் எச்சரிக்கையும் தேவை. சூழ்நிலையை பொறுமையுடன் கையாள வேண்டும். சமரச பேச்சு வார்த்தை மூலம் உறவில் மோதல் வராமல் தடுக்கலாம்.இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரலாம். பண விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டம். பங்கு வர்த்தகம் மற்றும் ஊக வணிகம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு நிதிநிலை இருக்கலாம். யாருக்கும் பணத்தை கடனாக அளிக்காதீர்கள்.
பண விஷயங்களில் லாபம் காண்பதில் தாமதம் இருக்கலாம்.உடலில் சிறிய பாதிப்புகள் இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை / சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மன ஆரோக்கியம் முக்கியம். எனவே உங்கள் மன ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எனவே மன அமைதிக்கு யோகா அல்லது தியானம் மேற்கொள்ளுங்கள்.இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் மாணவர்கள் சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் அது சமாளிக்கும் வகையில் இருக்கலாம். எனவே கவலை வேண்டாம். கடின உழைப்பை மேற்கொள்வதன் மூலம் படிப்பில் சிறந்து விளங்கலாம்.உங்கள் முன்னேற்றத்தில் ஏற்படும் தடைகளைத் தவிடு பொடியாக்கி வெற்றி பெற கணபதி ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள்.
பரிகாரம்: முருகப் பெருமான், அனுமன் வழிபாடு செய்து வரவும். சனிக்கிழமையன்று ஸ்ரீ பஜ்ரங் பானை ஓதவும். எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை என வருந்தாமல், கடின உழைப்பு, திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யவும்.
மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | விருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | தனுசு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | மகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | கும்பம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | மீனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027