மிதுனம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Midhunam sani peyarchi palangal 2017-20

சிறு கண்ணோட்டம்:

உங்கள் ராசிக்கு இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் சில நன்மைகளும் சில சங்கடங்களும் நேரிடும். நண்பர்கள் மூலம் உங்களுக்கு நன்மை வந்து சேரும். சிலருக்கு பதவி உயர்வு கூட கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவர். ஆனால் குடும்ப ரீதியாக பார்த்தால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வரும். ஆகையால் இருவரும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அதோடு தேவையற்ற மருத்துவ செலவுகள் வரும். இப்படி நற்பலன்களையும் கெடுபலன்களையும் சனிபகவான் உங்களுக்கு சமமாகவே தரும் காலம் இது.

காக்கைக்கு அன்னமிடுவது, நவகிரகங்களை வளம் வருவது போன்ற எளிய பரிகாரங்களை நீங்கள் செய்வதன் மூலம் சனியின் தாக்கம் குறையும்.

மிருக சீரிஷம் 3-4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம், 1,2,3ம் பாதம்

(உங்கள் ரசி எது என்று தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தாக கா, கி, கு, கூ, க, ங, ச, சே, கோ, கை, ஹை மற்றும் ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இங்கு குறிப்பிட்ட பலன்கள் பொருந்தும்)

வான மண்டலத்தில் 3வது ராசியாக வலம் வரும் மிதுனராசியில் பிறந்த உங்கள் ராசி நாதன் புதன் ஆவார். இவர் புத்திக்கும், வித்தைக்கும், ஞானத்துக்கும் அதிபதியாவார். காக்கும் கடவுளான திருமால் புதனுக்குரிய தெய்வமாவார். எனவே திருமால் உலகத்தை காப்பது போல் நீங்களும் பலரை காப்பாற்றும் பொறுப்பு உடையவர்களாவீர்கள். பலருடைய சவால்களையும் பேச்சுகளையும், சிந்தனைகளையும் மாற்றிக் கொண்டே இருப்பீர்கள். எதையும் மனதால் கணக்கு போடும் உங்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியானது சற்று சுமாராகவே இருந்து வரும்.

இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதும் இனி அவர் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் கணடச்சனியாக இருந்தது பலன் தருவார். 6ம் இடத்தில் இருந்தாலும் அலைச்சல், வேதனை, நோய்வாய்ப்படுதல் கடன் இவையெல்லாம் இல்லாமல் இல்லை. அதே சமயம் 7ம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் அதனுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும். எதையும் சிந்தித்து செயல்படும் உங்கள் எண்ணம்தான் உங்கள் வாழ்க்கையின் முதல் என்று சொன்னால் அது மிகையாகாது.

சனியானவர் உங்களது ராசிக்கு 8 மற்றும் 9ம் வீட்டிற்கு அதிபதியாகி 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சற்று சுமாரான பலன் என்றுதான் சொல்ல வேண்டும். அதே சமயம் அவர் குரு வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அடிக்கடி ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகி வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும். உங்கள் ராசிக்கு சனி 8ம் அதிபதி என்றாலும் அவரே 7ம் அதிபதியாக இருந்து அவர் 7ல் பலம் பெற்று உங்கள் ராசியை பார்ப்பதால் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் சிலசமயம் வந்து சேரும்.

எனென்றால் 8ம் இடம் என்பது கஷ்டத்தை பற்றி சொன்னாலும் அதிர்ஷ்டத்திற்கு 9ம் இடமாகும். இரண்டுக்கும் அவரே அதிபதியாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் இக்காலங்களில் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் யார் என்று உலகிற்கும் மற்றவர்களுக்கும் தெரியவரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப் புழக்கம் தாரளமாக இருந்து வரும். கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். அந்த பணங்கள் பொருள்கள் தவணை முறையில் வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் சிந்தனை சக்தியும் மிகுந்து காணப்படும்.

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ வழி ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் இருந்து வரும். அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் வந்து சேரும். நெருங்கிய உறவினர்கள் உங்களை விட்டு பிரிய நேரிடும்.

தன்னம்பிக்கையும் ஊக்கமும் அதிகரிக்கும். எப்பொழுது எல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதை தீர்க்க இறைவன் ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைப்பார். தாயரால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். தாயாரின் அன்பும் ஆசியும் கிட்டும். பழைய இடங்களை விற்று புதிய இடம் வீடு, வண்டி, வாகனங்கள், விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்.

இதுவரை குடும்பத்தில் நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும். காதல் விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும் ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் அடிக்கடி விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது.

வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். ஆனால் வேலையில் திருப்தியற்ற நிலைமையே அமையும். எனவே கிடக்கும் வேலையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடக் கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்து கொள்ளல் வேண்டும். வேலையாட்களால் நன்மையும். அதே சமயம் அவர்களால் ஒரு சிலருக்கு தேவையற்ற பிரச்சனையும் வந்து சேரும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வீட்டு வளர்ப்பு பிராணிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். தேவையற்ற பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. விரதங்களை தவிர்ப்பது நன்று. தள்ளிப்போன திருமண சுபகாரியங்கள் குறிப்பாக காதல் திருமணங்கள் நடக்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வழக்குகள் இழுபறியாகவே இருந்தாலும் இறுதியில் வெற்றி கிட்ட வாய்ப்பு அதிகம். அரசாங்க விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. தேவையற்ற கடன் மற்றும் வட்டி கட்ட வேண்டி வரும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. சுயதொழில் கூட்டுத் தொழில் ஓரளவு சாதகமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவதில் அதிக எச்சரிக்கை தேவை.

ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும். வேலையில் உத்யோக உயர்வு ஊதிய உயர்வு கிட்டும். வேலையில் அதிக கவனம் தேவை. சக தொழிலாளர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் வந்து சேரும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு சுமாராக இருந்து வரும். நண்பர்களால் எதிர்பார்த்த, பாராத உதவிகள் வந்து சேரும். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். எனவே எதிரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: கோவை மாவட்டம், இருளர்பதி எனும் ஊரில் அருளும் ஸ்ரீசுயம்பு பெருமாளை, சனிக்கிழமையில் சென்று தரிசித்து, துளசி மாலை அணிவித்து வழிபடுங்கள்; மகிழ்ச்சி நிலைக்கும்.

கோவிலை புதுப்பிக்கும் பனி எங்கேனும் நடந்தால் உங்களால் முடிந்து உதவியை செய்யுங்கள். சனிக்கிழமைகளில் வீட்டருகில் உள்ள பெருமாள் கோயிலிற்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்துவாருங்கள்; மகிழ்ச்சி நிலைக்கும். தினமும் “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை கூறுவதன் பயனாக உயர்வு உண்டு

 

Leave a Comment