Events

Mithunam sani peyarchi palangal 2020-23 | மிதுனம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்

Mithunam sani peyarchi palangal 2020-23

கால புருஷனின் மூன்றாவது ராசி, மிதுன ராசி (Mithunam sani peyarchi)… மிதுன ராசியில் பிறந்தவர்கள் அதிக புத்திசாலிகள்… கொஞ்சம் கபட எண்ணமுள்ள மிதுன ராசியினர் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள்… குறுக்குவழி எத்தனை இருக்கிறதோ அத்தனையும் இந்த மிதுனராசிக்காரர்களுக்கு அத்துப்படி… நாய் விற்ற காசு குறைக்காது, பூ விற்ற காசு மணக்காது ..கருவாடு விற்ற காசு நாறாது என்பது இவர்களுடைய கொள்கை… வாய் திறமையுள்ள வாய்ஜாலம் உள்ள இவர்கள் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள்… இவர்கள் மூளை பலம் உள்ளவர்கள் …மூளையை பயன்படுத்தி அறிவை பயன்படுத்தி தனது நுட்பமான அறிவை பயன்படுத்தி, வாழ்க்கையில் எப்படியும் முன்னேறி விடுவார்கள்…. புத்தி சாதுரியம் உள்ள மதிநுட்பம் உள்ள இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும்,ரொம்ப முன் எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனையில் இருந்து சர்வசாதாரணமாக தன்னுடைய அறிவை, புத்தியைப் பயன்படுத்தி அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வந்து விடுவார்கள்.

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி சார்வரி வருடம் மார்கழி மாதம் 12 (டிசம்பர் 27) தேதி அதிகாலை 5.22 மணிக்கு நிகழ இருக்கிறது. இதில் சனி பகவான் தனுசு ராசியில் உள்ள உத்திராடம் நடத்திரம் 1ம் பாதத்திலிருந்து மகர ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதத்திற்கு பெயர்கிறார். மிதுன ராசிக்கு 8ம் இடத்தில் சனி அமர்வதால் அஷ்டம சனி ஏற்படுகிறது. இதனால் எல்லா விதத்திலும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.அஷ்டம சனி நடக்கும் மிதுன ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்…

சனி தன் 3, 7, 10 ஆகிய பார்வை பலனால் சிறப்பான பலன்களைத் தரக்கூடியவர். இந்நிலையில் மிதுன ராசிக்கு சனியின் பார்வை பலன் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

சனியின் 3ம் பார்வையால் ராசிக்கு தொழில், வியாபாரம் எனும் ஜீவன ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் குடும்பம், தன ஸ்தானத்தைப் பார்க்கிறார். 10ம் பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கிறார்.

 

இப்படிப்பட்ட சூழல் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழும். புதிய நபர்களின் அறிமுகமும், ஆலோசனையும் கிடைக்கும்.

குடும்பம், தொழில், வியாபாரம், கல்வி, பண பரிவர்த்தனை என எந்த ஒரு செயல்பாடாக இருந்தாலும் சரி நிதானமும், கவனமுடன் கூடிய செயல்பாடு மிக அவசியம். சோம்பேறித்தனத்தை அகற்றி, செயல்படுவது அவசியம். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

 

👍​கை கொடுக்கும் குரு :

2020ல் குரு சுமாரான பலன்களுடன் தொடங்கினாலும், 2021ம் ஆண்டு மற்றும் 2022ம் ஆண்டில் குரு மிக சிறப்பான அமைப்பில் மிதுன ராசிக்கு அமர்ந்து யோக பலன்களைக் கொடுப்பார். வீட்டில் சுப காரியங்கள் நடத்தல், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் என சுப ஆண்டாக அமையும்.

​உத்தியோகஸ்தர்கள் / தொழில், வியாபாரிகளுக்கு :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு பயணம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் அலைச்சல் ஏற்பட்டாலும், நீங்கள் விரும்பிய வகையில் நல்ல பலனும் கிடைக்கும். உங்கள் பணியிடத்தில் இருந்த மறைமுக பிரச்னைகள் குறைந்தாலும், பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் மன சோர்வு, ஓய்வின்மை உண்டாகலாம்.

தொழில் செய்பவர்களுக்கு பூர்வீக ரீதியான சொத்துக்கள், பங்குகள் கிடைப்பதன் முலம் தொழிலுக்கு நிதி ரீதியான பிரச்னைகள் தீர்ந்தாலும், உங்கள் இலக்கை எட்டுவதற்கு கூடுதலான முயற்சி தேவைப்படும். வியாபாரத்தில் மூத்தோரின் ஆலோசனைகள், திட்டங்கள், புதிய முயற்சிகள் தேவைப்படும். உங்களின் செயல்பாடு வெற்றி கிடைக்க சரியான ஆலோசனை, செயல் திட்டங்கள் தேவைப்படும்.

​விவசாயிகள், பெண்களுக்கான பலன் :

விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு சாதகமான பலன் கொடுக்கும் வகையில் இயற்கை உதவும். சிறப்பாக பருவ மழை பெய்து நீர்பாசன வசதிகள் சிறப்பாக பெற்று வேளாண்மை சிறக்கும். விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மனை வாங்கும் போது ஆலோசனை செய்து வாங்குவது நல்லது. மற்றவர்களின் வார்த்தைகளை நிதானமாக யோசித்து பின் நம்பவும்.

💃பெண்களுக்கான பலன் :

குடும்பத்தில் சிறு பிரச்னைகள் இருந்து கொண்டே இருக்கும். கவனமாக பேசுவதும், வாக்குவாதங்களைத் தவிர்ப்பதால் மட்டும் குடும்ப அமைதி காக்க முடியும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்ல உங்களுக்கான வெற்றி தேடி வரும். வீட்டின் ரகசிங்கள், பிரச்னைகளை மற்றவர்களிடம் பகிரந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வம்பு வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது.

 

​கல்வி, அரசியல்வாதி, கலைஞர்களுக்கு :

 

கல்வி:

படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய காலம். இருப்பினும் ஆசிரியர்களின் ஆலோசனையும், உங்களின் சிறப்பான முயற்சிகளும் தான் உங்களை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்லும். போட்டி தேர்வில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். ஒரு முறைக்கு பல முறை படிப்பது நல்ல பலனைத் தரும்.

அரசியல்வாதி

அதிகார வட்டத்தில் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் மேற்கொள்வதும், உணவு விஷயத்தில் கவனம் தேவை. பதவியை அடைய கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்குறுதிகளில் கவனம் தேவை.

கலைஞர்களுக்கு :

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெறுவதில் சிரமங்கள் ஏற்படும். இருப்பினும் ‘முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்பதற்கேற்ப உங்களின் கடின முயற்சி நல்ல பலனைப் பெற்று தரும். உங்களுக்கான அங்கிகாரம் கிடைப்பதில் பல நேரங்களில் காலம் கடந்து போகலாம்.

வழிபாடு :

சனிக்கிழமைகளில் அனுமனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருவது நல்ல பலனைத் தரும்.

வாரம் தோறும் சிவாலத்திற்கு செல்வதும், சிவ வழிபாட்டுக்கு பின்னர் சனி பகவானுக்கு செய்வது நல்லது.

சிவ மந்திரத்தை சொல்லுதலும், விஷ்ணுவின் சகஸ்ரநாமம் படிப்பதால் ஏற்பட்ட தடைகள் நீங்கி மன நிம்மதி கிடைக்கும்.

மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | விருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | தனுசு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கும்பம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மீனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

    பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

    5 days ago

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More

    6 days ago

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More

    1 month ago

    ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

    🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More

    1 month ago

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More

    2 months ago