Navarathri history tamil

*நவராத்திரி விழா வந்தது எப்படி? கொலு வைப்பது ஏன்?*

முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கணம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் துன்பப்பட்டனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை.

இப்படியே போனால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்று எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

மக்களின் துன்பம் கண்டு அவளும் மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை ஆனார்கள். அதேபோல இந்திரனும் அஷ்டதிக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள்.

Navarathri history

அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

ஏன் ராத்திரி?

அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரியமாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

நவராத்திரியன்று யாரையெல்லாம் வழிபட வேண்டும்?

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடை மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்ய வேண்டும். முதல் மூன்று நாட்களில் துர்க்கையை மகேஸ்வரி, கவுமாரி, வராகியாகவும், இடை மூன்று தினங்களில் லட்சுமி தேவியை மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியை சரஸ்வதி, நரசிம்கி, சாமுண்டியாகவும் முறையாக வழிபாடு செய்ய வேண்டும்…

நவராத்திரி திருவிழா

21.09.2017 – 29.09.2017

20.09.2017 காலை 11.24 வரை அமாவாசை திதி
புதன்கிழமை

கொலு அமைக்க, கலச ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம்
காலை 6.00- 7.30 மணி
9.15-10.15 மணி
அமாவாசை திதி இருக்கும் போதே செய்வது சிறப்பு

நவராத்திரி ஒன்பது நாட்களின் மகிமை

நவராத்திரி ஒன்பது நாட்களும், பராசக்தி, ஒவ்வொரு தேவியின் வடிவில், ஒரு வயது முதல் 10 வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்கிறாள்.கன்னியின் வயதிற்கேற்ப, ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக ஒன்பது நாள் ஒன்பது கன்னிகைகளையும், ஒன்பது சுமங்கலிகளையும் பூஜை செய்வது, அளவிட முடியாத புண்ணியம் உண்டாகும் குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் ஒன்பது நாட்களும் பூஜிக்கப்பட வேண்டும்.அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை, உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. பராசக்தி, அசுரர்களுடன் சண்டையிட்ட போது, தேவர்கள், பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான், பொம்மை கொலு வைப்பதாகவும் சொல்வதுண்டு. இந்த ஒன்பது நாட்களில், தினமும், பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். பகலில், 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.தசரதனின் மகன் ராமர் தான், முதன்முதலில் கொண்டாடினார். அதன் பின் தான், அவருக்கு சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று கூறப்படுவதும் உண்டு…

Leave a Comment