Events

Rishaba rasi Guru peyarchi palangal 2022-23 | ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

Rishaba Rasi Guru Peyarchi Palangal 2022-23

ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal 2022-23

ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023

உங்களின் மதிப்பெண் – 70/100

ஏமாளிகள், அப்பாவிகளுக்காக பரிந்து பேசுபவர்களே..!

எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் கொண்டவர் நீங்கள். உழைப்பைத் தவிர வேறு எதையும் நம்பாதவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து எந்தவொரு முடிவையும் உறுதியாக எடுக்க முடியாமல் தவிக்க வைத்தார் குருபகவான். இப்போது 14.4.22 முதல் 22.4.23 வரை, லாப வீட்டில் வந்து அமர்கிறார்.

இனி திட்டமிட்ட வேலைகள் தடையில்லாமல் முடியும். பணப் பற்றாக்குறை நீங்கும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். பிரபலங்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவி கிட்டும்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கணவன் – மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே… நல்ல பதில் வரும். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களைப் பாராட்டுவார்கள்.

தடைகள் நீங்கி திருமணம் கைகூடும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் சலசலப்புகள் நீங்கும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும். தாமதமாகிக் கொண்டிருந்த அரசாங்க விஷயங்கள் எல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். வீடு – வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

14.4.22 முதல் 29.4.22 வரை உங்களுக்கு அஷ்டம லாபாதிபதியான குருபகவான், தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால், அலைச்சல், திடீர்ப் பயணங்கள், செலவுகள், சகோதரருடன் மனத்தாங்கல், சிறு சிறு விபத்துகள் வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் கவனம் தேவை. தொற்று நோய் வரக்கூடும். குடும்பத்தில் அதிருப்தி நிலவும். பண இழப்பு வரும்.

30.4.22 முதல் 24.2.23 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்களின் பாக்கிய ஜீவனாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், வரவேண்டிய பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சொந்தமாக வீடு கட்டுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். வேலை கிடைக்கும். வழக்கு வெற்றியடையும். ஷேர் மூலம் பணம் வரும். கல்யாணம் கூடி வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். 8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குருபகவான் வக்ரத்தில் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வந்தாலும் செலவுகள் கூடும். உடல் ஆரோக்யத்தை பார்த்துக் கொள்ளுங்கள். ஷேர் மூலம் பணம் வரும்.

24.2.23 முதல் 22.4.23 வரை குருபகவான் உங்கள் தன, பூர்வ புண்ணியாதி பதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். தீடீர் பணவரவு உண்டு. சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளின் கல்வி, திருமணம், உத்தியோகம் திருப்திகரமாக அமையும்.

வியாபாரத்தில், இதுவரையிலும் செய்ய முடியாமலிருந்த சில மாற்றங்களை இப்போது செய்வதுடன், புதிய முதலீடுகளும் செய்வீர்கள். இரும்பு, எலெக்ட்ரானிக்ஸ், ஏற்றுமதி – இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கடையை கொஞ்சம் விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். வேலையாள்கள் இனி அடிக்கடி விடுப்பில் செல்ல மாட்டார்கள். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். கூட்டுத்தொழிலில் பிரச்னை தந்த பங்குதாரர்களை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில்
உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேர்வார். உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். பதவி – சம்பள உயர்வு எல்லாம் உண்டு. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சம்பளத்துடன் கூடிய புது வாய்ப்பு வரும்; ஏற்றுக் கொள்ளலாம்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி எதிர்பாராத முன்னேற்றத்தையும் அதிரடி வளர்ச் சியையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: பூசம் நட்சத்திர நாளில் காஞ்சி அருகிலுள்ள தக்கோலத்துக்குச் சென்று, அங்குள்ள ஈசனையும் ஶ்ரீதட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள். முதியோருக்கு உதவுங்கள்; உங்கள் வாழ்வில் நல்லது நடக்கும்.

திருவையாறுக்கு அருகிலுள்ள திருப்பழனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள். சாதித்துக் காட்டுவீர்கள்

நன்றி: விகடன் மற்றும் இந்து தமிழ்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-23

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha

    மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha information *மஹாளய பட்சம்* (30.9.2023… Read More

    22 hours ago

    Sivapuranam lyrics Tamil | சிவபுராணம் பாடல் வரிகள் | Manickavasagar Tiruvasagam Tamil

    Sivapuranam lyrics Tamil - சிவபுராணம் பாடல் வரிகள் சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த… Read More

    22 hours ago

    Aadi Pooram | ஆடிப்பூரம் | Aadi pooram Festival | Aadi Pooram 2023 Date

    Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More

    2 months ago

    நம: பார்வதீ பதயே என்பது என்ன?

    ஓம் நமசிவாய... ஓம் சக்தி.... நம: பார்வதீ பதயே என்பது என்ன? சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல,… Read More

    3 months ago

    உங்கள் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful shiva mantras tamil

    சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful Shiva Mantras Tamil Powerful shiva mantras tamil |… Read More

    2 months ago

    Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

    பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

    4 months ago