Rishabam sani peyarchi palangal 2025-27
சனிப்பெயர்ச்சியால் யோகங்களை பெற உள்ள ரிஷப ராசி (Rishabam rasi sani peyarchi palangal)
ரிஷப ராசி ( லாப சனி 95% )
சனி பகவான் 2025 புத்தாண்டில் மார்ச் 29, 2025 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம்பெயரவுள்ளார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார்
அந்த வகையில், ரிஷபம் ராசியின் சனிப்பெயர்ச்சி பலன்களை இந்த பதிவில் காணலாம்.
ரிஷபராசிக்காரர்களுக்கு சனிபகவான் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வீட்டிற்கும் அதிபதியாகும், இந்த பெயர்ச்சியின் போது உங்கள் பதினொன்றாவது வீட்டில் நுழையும். இந்த பெயர்ச்சி உங்களுக்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும்.
கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்தை குறிக்கும் கிரகமான சனி, ஒரு நபர் தனது வாழ்க்கையை அதுவரை எவ்வாறு வாழ்ந்தார் என்பதன் அடிப்படையில் பலன்களை அளிப்பார். ஒரு நபர் ஒழுக்கமாகவும் கடினமாகவும் உழைத்திருந்தால், சனி தனது நற்பலனை அளிக்கும் தருணமாக இது இருக்கலாம். சனி ‘டாஸ்க்மாஸ்டர்’ கிரகம் என்று அழைக்கப்படுகிறது, எனவே உங்கள் வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் தடைகள் மற்றும் பின்னடைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். இது தொழில், நிதி, உறவுகள் அல்லது ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். எனவே, உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும். சுயமாக தொழில் செய்யும் நபர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் அதிக ஊக்கத்தையும் ஈடுபாட்டையும் அனுபவிக்கலாம். இருப்பினும், இது அதிக பணிச்சுமைக்கு வழிவகுக்கும். அழுத்தம் இருந்தபோதிலும், வெற்றி மற்றும் நிதி வெகுமதிகள் வரலாம். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுஅத்தி சிறப்பாகச் செயல்பட முயலுங்கள். முன்னேற்றத்தை பாதிக்கக்கூடிய தடைகளுக்கும் தயாராக இருங்கள், ஆனால் நினைவில் கொள்ளுங்கள், சவால்கள் இருந்தாலும் அது உங்கள் இலக்குகளை அடைய வழி வகுக்கும். விடாமுயற்சி மற்றும் கவனத்துடன், செயல்பட வேண்டும்.
இந்த பெயர்ச்சி காலத்தில் நீங்கள் சமூக ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். அதிக நபர்களுடன் தொடர்பு கொள்வீர்கள். இளம் வயதினர் மனதில் காதல் அரும்பு மலரலாம். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையைக் காணும் வாய்ப்பு உள்ளது. மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு இருக்கும். குழந்தைகளுடன் சில கருத்து வேறுபாடுகள் எழலாம். இந்த சூழ்நிலையில் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலமும் வெளிப்படையான தகவல் தொடர்பு கொள்வதன் மூலமும் உறவை வலுப்படுத்திக்கொள்ள இயலும். சனியின் பாதகமான பார்வை காரணமாக அவ்வப்போது சில கருத்து வேறுபாடுகள் எழலாம். இதனால் குடும்பச் சூழலில் அமைதியின்மை நிலவலாம். எனவே புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதும், அனுசரித்து நடந்து கொள்வதன் மூலமும் சுமுக நல்லுறவு காணலாம்.
சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாம் வீட்டில் (லாபம் மற்றும் ஆதாயத்தைக் குறிக்கும் வீட்டில்) சஞ்சரிப்பதன் காரணமாக பொருளாதார ரீதியாக நேர்மறையான பலன்கள் கிட்டும் வாய்ப்பு உள்ளது. நிதி முன்னேற்றங்கள் காணப்படலாம். என்றாலும் வெற்றியை அடைவதற்கு விடாமுயற்சி, திட்டமிடல் மற்றும் வெளிப்படையான நிதி இலக்குகள் தேவை. உங்கள் பண வரவில் தாமதங்கள் இருக்கலாம் என்றாலும் அவை நிச்சயம் உங்களுக்கு வந்து சேரும். யதார்த்தமாகவும் தெளிவான கண்ணோட்டத்துடனும் செயல்படுவதன் மூலம் சாதகமான விளைவுகளைக் காணலாம்.
இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் மாணவர்கள் கவனமுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடன் விடா முயற்சி செய்து படிப்பதன் மூலம் வெற்றி காணலாம். வெளிப்புறக் காரணிகள் உங்கள் படிப்பை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெளி நாடு சென்று கல்வி பயில வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் தங்கள் எண்ணங்கள் ஈடேறக் காண்பார்கள். மொத்தத்தில் இந்த பெயர்ச்சிக் காலத்தில் மாணவர்களுக்கு விடா முயற்சியும் அர்ப்பணிப்பு உணர்வும் அவசியம்.
இந்த பெயர்ச்சி காலத்தில் அதிக பணிகள் இருந்தாலும் ஓய்விற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற் பயிற்சி மேற்கொள்வது நல்லது. நடைப்பயிற்சி, மிதிவண்டி, நீச்சல் அல்லது நடனப் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம். உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.. உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
பரிகாரம்: துர்கா தேவியின் பீஜ் மந்திரத்தை உச்சரிப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்
மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | விருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | தனுசு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | மகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | கும்பம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | மீனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027