சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 2018 – ஆம் ஆண்டுக்கான மாதாந்திர நடை திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அட்டவணையை, திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு வெளியிட்டுள்ளது. sabarimala 2018 opening dates
நிகழாண்டு மண்டல பூஜை மஹோத்சவத்திற்காக வரும் நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்; டிசம்பர் 26 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். மண்டல பூஜை —டிசம்பர் 26. மகரவிளக்கு பூஜைக்காக வரும் டிசம்பர் 31 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்; அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 20 – ஆம் தேதி காலை 7 மணி வரை நடை திறந்திருக்கும். ஜனவரி 14 -ம் தேதி மகரவிளக்கு (ஜோதி) இடம்பெறும். ஜனவரி 18-ஆம் தேதி காலை வரை மட்டும்தான் நெய் அபிஷேகம் நடைபெறும்.
பிப்ரவரி: பிப்ரவரி 12 மாலை 5 மணியில் இருந்து பிப்ரவரி 17 ஆம் தேதி இரவு வரை நடை திறந்திருக்கும்.
மார்ச்: மார்ச் 14 மாலை 5 மணியில் இருந்து மார்ச் 19 – ஆம் தேதி இரவு வரை நடைதிறந்திருக்கும். உற்சவத்திற்காக மீண்டும் மார்ச் 20 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, 30 ஆம் தேதி பங்குனி உத்திரம் ஆராட்டு பூஜை முடிந்து இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
ஏப்ரல்: ஏப்ரல் 10 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 18 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். இதில் 15 -ஆம் தேதி விஷூ கணி தரிசனம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மே மாதம்: மே 14 மாலை 5 மணியில் இருந்து 19 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். பிரதிஷ்டா தின மஹோத்சவத்துக்காக மே 24 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 25 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
ஜூன் : ஜூன் 14 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 19 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
ஜூலை: ஜூலை 16 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 21 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
ஆகஸ்ட்: ஆகஸ்ட் 16 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 21-ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். ஓணம் பண்டிகைக்காக 23 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 27 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
செப்டம்பர்: செப்டம்பர் 16 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 21 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
அக்டோபர்: அக்டோபர் 16 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 21-ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
நவம்பர்: ஸ்ரீ சித்ர ஆட்ட திருநாளுக்காக நவம்பர் 5 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 6 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். 2018 -ஆம் ஆண்டின் மண்டல பூஜைக்காக, நவம்பர் 16 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து டிசம்பர் 27 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது
அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (20) நாள் 3.5.2021 செவ்வாய்க்க்கிழமை அட்சய திருதியை… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our WhatsApp group *_📖 பஞ்சாங்கம்: ~_*… Read More
Guru Peyarchi Palangal 2022-23 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 (Guru Peyarchi Palangal 2022-23)… Read More
Mesha rasi guru peyarchi palangal 2022-23 குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22 Mesha rasi guru peyarchi palangal 2022-23… Read More
Rishaba Rasi Guru Peyarchi Palangal 2022-23 ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal… Read More
Mithuna rasi Guru peyarchi palangal 2022-23 மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Mithuna rasi guru peyarchi palangal… Read More
Leave a Comment