Simma rasi guru peyarchi palangal 2020-21

சிம்ம ராசி பலன்கள் – 65/100 – சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Simma rasi guru peyarchi palangal 2020-21

சவால்களை வென்று… சாதனை படைக்கும் சிம்ம ராசி அன்பர்களே…!!

நடைபெற இருக்கின்ற குருப்பெயர்ச்சியில் குருவானவர் சிம்ம ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்திற்கு அதாவது ரண ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார். குருதேவர் தான் நின்ற இடத்திலிருந்து ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பன்னிரெண்டாம் இடமான அயன சயன போக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

 

குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த சில விஷயங்களுக்கு தெளிவும், புத்துணர்ச்சியும் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் பெறுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற செலவுகள் எதுவென்று அறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

பெண்களுக்கு :

புதிய நபர்களின் மூலம் ஏற்பட்டிருந்த சில பிரச்சனைகள் நீங்கி தெளிவு கிடைக்கப் பெறுவீர்கள். வாரிசுகளிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து நடந்துகொள்வது நன்மையை உண்டாக்கும். பெற்றோர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.

மாணவர்களுக்கு :

கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்துவந்த குறைபாடுகள் அகலும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உயர்கல்வி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு மறைமுகமாக இருக்கக்கூடிய சில விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

விவசாயிகளுக்கு :

மருத்துவ பயிர்கள் மற்றும் பருத்தி தொடர்பான விளைச்சல்களின் மூலம் லாபம் உண்டாகும். கிழங்கு வகைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். விவசாயத்தில் நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். பால் மற்றும் தயிர் விற்பனைகளின் மூலம் லாபங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்விற்கான வாய்ப்புகள் சற்று காலதாமதமாக கிடைக்கும். சோர்வின்றி செயல்படுவதன் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கேளிக்கை தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

வியாபாரிகளுக்கு :

கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். எதிர்பாராத நண்பர்களின் உதவிகள் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டிற்கு பயன்படக்கூடிய உபகரணங்கள் தொடர்பான வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவுகளும் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு :

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகளும், அதை சார்ந்த முயற்சிகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் மனமகிழ்ச்சியை உண்டாக்கும். இழந்த இடத்தினை மீண்டும் அடைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

 

அரசியல்வாதிகளுக்கு :

சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மனதில் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முயற்சிகள் மற்றும் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி எதிர்பாராத செலவுகள், அலைச்சல்களோடு குறிப்பிடத் தகுந்த வெற்றிகளை அளிப்பதாகவும் அமையும்.

ருண ரோக சத்ரு குரு குரு பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு வருகிறார். வேலை தொழில் ரீதியான விசயங்களில் முன்னேற்றம் நிகழும். கடன் எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும். கடன் தொந்தரவு அதிகமாகும் உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படும். மனஸ்தாபங்களும் பிரச்சினைகளும் நிகழும். பெரிய அளவில் தொழில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது. கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம்.

வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் மலைமேல் அமைந்திருக்கும் சித்தர்களை வெள்ளை மற்றும் நீலநிற பூக்களால் வழிபாடு செய்துவர பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகளும், உத்தியோகத்தில் இருந்துவந்த தடைகளும் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்

கருவூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீபசுபதீஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூத்தியையும் பூரட்டாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Leave a Comment