துலாம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்..
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020
உங்கள் ராசி நாதன் சுக்கிரன்… எனவே சுக்கிரனுடைய குணங்கள் உங்களுக்கு இருக்கும்.. சுகவாசி நீங்கள்… கொஞ்சம்கூட கஷ்டப்படுவதை விரும்ப மாட்டீர்கள் …சிறு துன்பத்தையும் உங்களால் தாங்க முடியாது.. உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால் சுக்கிரன் உலக இன்பங்களுக்கு அதிபதி. காமத்துக்கு அதிபதி. செல்வத்துக்குஅதிபதி.. மனை என்று சொல்லப்படக்கூடிய சொந்த வீட்டுக்கு காரகன். சுகத்துக்கு காரகரன்.. வாகன காரகன்.
உலகத்தின் ஒட்டுமொத்த சுகங்களை எல்லாம் குத்தகைக்கு எடுத்துள்ள சுக்ரனின் ராசியில் பிறந்த நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பீர்கள்??
வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழவேண்டும் என்ற எண்ணம் உள்ள சுக்கிரனின் வீட்டில் பிறந்த நீங்கள், வாழ்க்கை வாழ்வதற்கே !! என்னத்த கொண்டு வந்தோம்? என்னத்த கொண்டு போகப் போகிறோம் ?நாம நமக்காக வாழனும் ..ஊர் என்ன சொன்னா என்ன? மண்ணு திங்கற உடம்ப மனுசன் தின்னா என்ன?? என்ற ரீதியில் இவர்களுடைய சிந்தனை செயல் இருக்கும்…
ஆடம்பரப் பிரியர்கள்… உங்கள் ராசியின் சின்னம் தராசு ..தராசுவை சின்னமாக கொண்ட துலாம் ராசிக்காரர்கள், எதிலும் கணக்குப் பார்த்து செலவு செய்வார்கள்… ஆனால் பெண்கள் என்று வந்துவிட்டால் அவர்கள் மெச்ச வேண்டும் என்று அவர்களுக்கு அதிகம் செலவு செய்வார்கள்.. இவர்கள் விளம்பரப் பிரியர்கள்… அதாவது ஏதாவது ஒரு பொது சேவை செய்தாலும் அதிலேயும் விளம்பரம் செய்து தன்னுடைய பெயரை காப்பாற்றிக் கொள்வார்கள்..
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சனி பல சகாயங்களை,,நன்மைகளை சாதகமான பலன்களை கொடுத்து வந்த நிலையில் அடுத்து நான்காம் இடமான அஷ்டம சனியாக சனி பெயர்ச்சி அடையும் போது உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் இருக்கும்??
🙏🏼சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் ஜனவரி 24ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 26ம் தேதியும் பெயர்ச்சி ஆக உள்ளனர். அர்த்தாஷ்டம் சனியில் துலாம் ராசிக்கும், சித்திரை, சுவாதி, விசாகம் 1,2,3 பாதங்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்….
♎ சனி பெயர்ச்சி பலன்கள்
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப் பெயர்ச்சி வரும் ஜனவரி24ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மகர ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனிபகவான் துலாம்ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தர உள்ளார் என்பதை பார்ப்போம்.
♎ ராசிக்கு 4ம் இடத்தில் சனி சஞ்சரிக்கிறார் அவரின் பார்வை துலாம் ராசியில் விழுவதால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைக்கும்.
சனி 4,5ஆம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலை
சனியின் 3ம் பார்வை மீனத்தைப் பார்ப்பதால், அதாவது உங்கள் ராசிக்கு 6ம் இடம் என்பதால் இதுவரை இருந்த எதிரிகளின் பிரச்னை தீரும். போட்டிகளில் நீங்கள் முன்னேற்றம் பெறுவீர்கள். அதே போல் 7ம் இடத்தை பார்ப்பதால் தொழில், வியாபாரம் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள். இல்லறத்தில் மகிழ்ச்சியும் காதலும் கூடும்.
மாத்ரு ஸ்தானம்
உத்தியோகத்தில் நீங்கள் நினைத்த இடத்திற்கு இடம் மாற்றாம் கிடைக்கவும். உத்தியோக உயர்வு பெற நல்ல காலம். நிதி, நீதி துறை முன்னேற்றமடையும்.
வெளிநாடு செல்லும் யோகமும், அதனால் நல்ல லாபம் ஏறபடும், மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை அடைவார்கள்.
திருமணம் பாக்கியம், தனவரவு
♎ ராசியினர் எதிர்பார்த்த எல்லா நற்காரியங்களும் நிறைவேறும் வகையில் பலன் இருக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடத்தலும், வீடு, மனை வாங்குதல், பழைய வீட்டை புதுப்பித்தல் நடக்கும்.
இதுவரை வாரா கடனாக இருந்த பணம் வந்து சேருவதோடு, சிறப்பான லாபம் சேமிப்பாக மாறும். போட்ட முதலீடுகள் நல்ல லாபத்தை தரத் தொடங்கும்.
அர்த்தாஷ்டமச் சனி
அர்த்தாஷ்டம சனி என்பது ஒரு குறைப்பாட்டை சரி செய்வது போன்ற செயலாகும். இதுவரை உங்கள் ராசிக்கு இருந்த குறைப்பட்டை வெளிக்கொண்டு வந்து அதன்றாக வழிமுறையை தேடுவது போல் இருக்கும்.
இந்த காலத்தில் உடல் நலப் பிரச்னைகள் தெரிந்து அதற்கான சிகிச்சை வெற்றி அடையும். வேலை, தொழில், வாகனத்தில் இருந்த பிரச்னைகளை சரிசெய்வீர்கள்.
பொது பலன்கள்:
சனியின் 3,7, 10 பார்வை மிக சிறப்பான பலன்களை தரும். 3ம் பார்வையால் உங்களுக்கு எந்த செயலிலும் நம்பிக்கையையும் வேகத்தையும் தருவார்.
7ஆம் பார்வையால் வெளியூர், வெளிநாடு பயணங்கள் ஏற்படும். அதில் நல்ல அனுகூலம் ஏற்படும்.
10ஆம் பார்வையாக தொழில் இருந்த பிரச்னை தீர்ந்து மன நிம்மதியும், முன்னேற்றத்தையும் தருவார்.
சித்திரை நட்சத்திரத்திற்கான பலன்கள்:
இந்த சனிப்பெயர்ச்சி சித்திரை நட்சத்தினருக்கு விருப்பங்களை நிறை வேற்றிக் கொள்ள சிறந்த காலம். உங்களின் சாமர்த்திய பேச்சு கைக்கொடுத்தாலும், எதிலும் கவனமாக இருப்பது அவசியம்.
எதிர்பார்த்த தொழில் வியாபாரம் முன்னேற்றம் இருக்கும். இதனால் லாபமும், நிறைவும் ஏற்படும். அதிக பயணங்கள் ஏற்படக்கூடும்.
சுவாதி நட்சத்திரம்
உத்தியோகம், தொழிலில் அனுசரித்து செல்வதால் அனுகூலம் ஏற்படும். மேலதிகாரிகளின் சொல்லை கேட்டு நடந்தாலே நன்மை ஏற்படும். இல்லாவிட்டால் கருத்து மோதல் ஏற்படக் கூடும். குடும்ப ஒற்றுமை பெற அமைதியாக இருப்பதே நல்லது.
பேச்சில் கவனம் இருத்தல் அவசியம். வீண் வார்த்தை பகையை ஏற்படுத்தக் கூடும். கடன் கொடுத்தலும் வாங்குவதும் தவிர்க்க நன்மையை பெற முடியும்.
விசாகம் நட்சத்திரம்
எதிலும் லாபம் காணும் காலம். தொழில், வியாபாரம் மட்டுமல்லாமல் உத்தியோகத்திலும் சிறப்பான லாபம் தேடி வரும். சவாலான விஷயங்களை எளிதாக செய்து நற்பெயர் பெறக் கூடிய அமைப்பு உண்டு. உடல் நலம் மேம்படுவதால் மருத்துவ செலவு குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். எந்த வேலையையும் சரியான முடிக்கும் திறனும் வேகமும் பெறுவீர்கள்.
முழுபலன்:
எந்த ஒரு கிரக பெயர்ச்சி பலன்களின் முழுமையான பலனை பெறவோ அறியவோ விரும்பினால் உங்கள் ராசிக்கான பலனைப் பார்ப்பதோடு, உங்களின் லக்கினத்திற்கான பலனையும் பார்ப்பதால் உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும். இரண்டிற்கான பலனை ஒப்பிட்டு அதன் படி நடந்து கொள்ள உங்களுக்கு சாதக நிலை உருவாகும்.
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவதும். அனுமனை வழிபடுவதும், உங்கள் செயலுக்கு பல மடங்கு பலனைத் தரும்.
ஏழை பிள்ளைகளின் கல்விக்கு உதவி செய்வதும், ஏழை பெண்களின் திருமணத்திற்கு பொருளாதார உதவி செய்வதும் நல்லது.
ஞாயிற்றுக் கிழமைகளில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவதால் உங்களின் நம்பிக்கையும், முயற்சியும் அதிகரிக்கும்
மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | விருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | தனுசு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கும்பம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மீனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_°°°°°°°°°°°°°°°*சித்திரை - 09**ஏப்ரல் - 22 - (… Read More
# 2025-26 தமிழ் புத்தாண்டு: விசுவாவசு வருடத்தின் பஞ்சாங்கக் கணிப்பும் பலன்களும் **தமிழ் புத்தாண்டு** இந்த ஆண்டு ஏப்ரல் 14,… Read More
Panguni Uthiram 2025 11-04-2025 மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.… Read More
Panguni Uthiram Special பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள்... Panguni Uthiram special அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திரம்… Read More
Rama Navami ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான்,… Read More
வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும். நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு… Read More