Daily Raasi Palan

Today rasi palan 24/04/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் புதன் கிழமை சித்திரை – 11

Today Rasi Palan

Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன்

_

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°
*சித்திரை – 11*
*ஏப்ரல் – 24 – ( 2024 )*
*புதன்கிழமை*
*குரோதி*
*உத்தராயணே*
*வஸந்த*
*மேஷ*
*க்ருஷ்ண*
*ப்ரதமை ( 60.0 )*
*ஸௌம்ய*
*ஸ்வாதி ( 46.53 )*
*ஸித்தி யோகம்*
*பாலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – ப்ரதமை*

_*சந்திராஷ்டமம் – மீன ராசி*_

_பூரட்டாதி நான்காம் பாதம் , உத்திரட்டாதி , ரேவதி வரை ._

_*மீன ராசி* க்கு ஏப்ரல் 23 ந்தேதி காலை 09:56 மணி முதல் ஏப்ரல் 25 ந்தேதி இரவு 07:47 மணி வரை. பிறகு *மேஷ ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:03am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:24pm*_

_*ராகு காலம் – 12:00noon to 01:30pm*_

_*யமகண்டம் – 07:30am to 09:00am*_

_*குளிகன் – 10:30am to 12:00noon*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_* ஸித்த யோகம்*_

இன்றைய ராசிபலன்கள்

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*

*_꧁‌. 🌈 சித்திரை: 11 🇮🇳꧂_*
*_🌼 புதன் – கிழமை_ 🦜*
*_📆  24 – 04- 2024 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*
உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பேச்சுத் திறமைகளின் மூலம் லாபம் அடைவீர்கள். பார்வை தொடர்பான இன்னல் குறையும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் திருப்பம் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்.

⭐️அஸ்வினி : ஆரோக்கியம் மேம்படும்.
⭐️பரணி : லாபகரமான நாள்.
⭐️கிருத்திகை : திருப்பம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_✡ ரிஷபம் ராசி: 🐂 🐂_*
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் அபிவிருத்திக்கான வாய்ப்பு கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்.

⭐️கிருத்திகை : ஆதரவான நாள்.
⭐️ரோகிணி : தாமதங்கள் விலகும்.
⭐️மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மிதுனம் -ராசி: 👫👫_*
அரசுப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பணி நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கலை துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️மிருகசீரிஷம் : தாமதங்கள் விலகும்.
⭐️திருவாதிரை : தெளிவு உண்டாகும்.
⭐️புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கடகம் -ராசி: 🦀 🦀_*
மூலிகை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். கல்வியில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். இறைப்பணிகளின் மூலம் அலைச்சல் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் விரயம் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️புனர்பூசம் : ஆதாயம் அடைவீர்கள்.
⭐️பூசம் : அலைச்சல் ஏற்படும்.
⭐️ஆயில்யம் : விரயம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 சிம்மம் -ராசி:  🦁🦁_*
வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். விவேகத்துடன் செயல்பட்டு எண்ணியதை செய்து முடிப்பீர்கள். வாகனம் மாற்றுவது தொடர்பான சிந்தனை மேம்படும். மனை விருத்தி தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சிறுதொழிலில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️மகம் : விவேகம் வேண்டும்.
⭐️பூரம் : எண்ணங்கள் கைகூடும்.
⭐️உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️ 🧛‍♀️_*
புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.
⭐️அஸ்தம் : கவனம் வேண்டும்.
⭐️சித்திரை : அனுபவம் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 துலாம் -ராசி: ⚖ ⚖_*
பணி நிமிர்த்தமான அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். முயற்சி மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️சித்திரை : அலைச்சல் உண்டாகும்.
⭐️சுவாதி : குழப்பம் நீங்கும்.
⭐️விசாகம் : விவாதங்களை தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 விருச்சிகம்- ராசி: 🦂🦂_*
தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பணி நிமிர்த்தமான அயல்நாட்டு வாய்ப்புகள் சாதகமாகும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளில் விவேகத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிள்ளைகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கவலை விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்.

⭐️விசாகம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
⭐️அனுஷம் : விவேகத்துடன் செயல்படவும்.
⭐️கேட்டை : கருத்து வேறுபாடுகள் விலகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 தனுசு -ராசி: 🏹 🏹_*
கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். சில அனுபவங்களின் மூலம் மனதில் புதிய பாதை புலப்படும். நம்பிக்கையானவர்களின் ஆதரவு கிடைக்கும். வங்கியில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். செய்தொழிலில் மேன்மை ஏற்படும். பொதுப்பணிகளில் லாபம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐️மூலம் : கவனம் வேண்டும்.
⭐️பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
⭐️உத்திராடம் : லாபகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மகரம் -ராசி: 🐴🐴_*
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சில விஷயங்களில் தெளிவான முடிவு பிறக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️உத்திராடம் : ஆதரவான நாள்.
⭐️திருவோணம் : உதவிகள் சாதகமாகும்.
⭐️அவிட்டம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கும்பம் -ராசி. ⚱️⚱_*
வெளிவட்டாரத்தில் சிந்தித்துச் செயல்படவும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனை மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.
⭐️சதயம் : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐️பூரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மீனம் -ராசி: 🐠 🐠_*
உத்தியோகத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்துவது நல்லது. நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.

⭐️பூரட்டாதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
⭐️உத்திரட்டாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
⭐️ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Leave a Comment