இன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 27.6.2020 சனிக்கிழமை ஆனி – 13 | Today rasi palan

இன்றைய ராசிபலன்⬇️

பஞ்சாங்கம்

🚩
*காலை தரிசனம் !*
*நட(ன)ராஜர் தரிசனம் !!*

“ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது…!”

இன்று
சனிக்கிழமை !

சார்வரி வருடம் : ஆனி மாதம் :
13 ஆம் தேதி !

ஜூன் மாதம் : 27 ஆம் தேதி !
(27-06-2020)

சூரிய உதயம் :
காலை : 05-55 மணி அளவில் !
(மிதுன லக்கனம்)

இன்றைய திதி : வளர்பிறை :
#ஸப்தமி !

ஸப்தமி..
மாலை 02-49 மணி வரை ! அதன் பிறகு அஷ்டமி !

இன்றைய நட்சத்திரம் :

பூரம்..
காலை 10-33 மணி வரை ! அதன் பிறகு உத்திரம் !!

யோகம் :
காலை 10-33 மணி வரை சித்தயோகம் ! அதன் பிறகு நன்றாக இல்லை !

இன்று
கீழ் நோக்கு நாள் !!

சந்திராஷ்டமம் :
சதயம் !

ராகுகாலம் :
காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!

எமகண்டம் :
மாலை : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !!

குளிகை :
காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !!

சூலம் :
கிழக்கு : பரிகாரம் : தயிர் !

கரணம் :
பகல் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !

நல்ல நேரம் :

காலை : 07-30 மணி முதல் 08-30 மணி வரை !!

பகல் : 10-30 மணி முதல் 11-30 மணி வரை !!

மாலை : 04-30 மணி முதல் 05-30 மணி வரை !

இரவு : 09-30 மணி முதல் 10-30 மணி வரை !!

இன்றைய சுப ஓரைகள் :

குரு ஓரை :
காலை : 07-00 மணி முதல் 08-00 மணி வரை !!

சுக்ர ஓரை :
காலை : 10-30 மணி முதல் 11-00 மணி வரை !!

புதன் ஓரை :
காலை : 11-00 மணி முதல் 12-00 மணி வரை !!

இன்றைய சிறப்புகள் :

இன்று
ஆனித் திருமஞ்சனம் !

இன்று
ஆனி உத்திர அபிஷேகம் !

நாளை
உத்திர தரிசனம் !!

“இன்று
ஆடல்வல்லானின் ஆனி திருமஞ்சன வழிபாடு..!”

திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருளாகும். !

ஆடலரசரான நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை மட்டுமே மகா அபிஷேகம் செய்யப்படுகிறது..!

மாசி சதுர்த்தசி, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி,

புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை

ஆகியவையே அந்த 6 அபிஷேக நாட்கள் ஆகும்.!

இந்த 6 நாட்களில் மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம் ஆகிய இரு நாட்களில் நடைபெறும் அபிஷேகம்,

சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலையிலேயே நடராஜருக்கு..

அபிஷேக ஆராதனைகள் நடத்துவார்கள்.!

அதிலும், ஆனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் மிக மிக சிறப்பு வாய்ந்தது.!

ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனம் என்பதால் இந்த நாள், ஆனி உத்திரம் எனவும்…

ஆனித்திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது.!

இன்று தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பல்வேறு …

சிவன் கோயில்களிலும் ஆனி திருமஞ்சன விழா நடைபெறுகிறது..!

இதை தவிர தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில்களாக கருதப்படும் சிதம்பரம், திரு ஆலங்காடு, குற்றாலம் , மதுரை,

திருவெண்காடு, திருநெல்வேலி, உத்தரகோசமங்கை உள்ளிட்ட பல்வேறு நடராஜர் ஆலயங்களிலும் ..

ஆனி திருமஞ்சன விழாக்கள் சிறப்பாக நடைபெறும் !

சிதம்பரத்தில் ஒவ்வோர் ஆண்டும் அதிகாலை வேளையில் இந்த அபிஷேகத்தைச் செய்வது வழக்கம்..

அதன்படி, நாளை 28.6.20 அன்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கும் இந்த அபிஷேகம்,

காலை 7 மணி வரை நீடிக்கும். வழக்கமான நாள்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஆனால், இந்த முறை பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆகம முறைப்படி திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும்”

இன்று
நடராஜர் அபிஷேகம் ..மனக் கண்ண்ணால்காண வேண்டிய நாள் !!

*ஆடல் வல்லான் அருளாளே இன்றைய நாளும் திருநாளாகட்டும்..!*

இன்று
சகல சிவாலயங்களிலும் நடராஜர் அபிஷேகம் !

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிப்பலன் 27.6.2020 ஆனி ( 13 ) சனிக்கிழமை

மேஷம்
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

ரிஷபம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

கடகம்
இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிலும் நிதானம் தேவை.

சிம்மம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகி லாபம் பெருகும்.

கன்னி
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் விரயங்கள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

துலாம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். தெய்வீக ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

விருச்சிகம்
இன்று வீட்டில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும்.

தனுசு
இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சிறு தடங்கல்கள் ஏற்படலாம். வேலை விஷயமாக செல்லும் பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை நிலவ அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

மகரம்
இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்படலாம். மன நிம்மதி குறையும். உங்கள் ராசிக்கு மாலை 3.50 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கும்பம்
இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 3.50 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்கன் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

மீனம்
இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவார்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்…


Leave a Comment