இன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 28.6.2020 ஞாயிற்றுக்கிழமை ஆனி – 14 | Today rasi palan

இன்றைய ராசிபலன்⬇️

பஞ்சாங்கம்

🚩
*காலை தரிசனம் !*
*ஆனி உத்திர தரிசனம் !!*

இன்று
ஞாயிற்றுக்கிழமை !

சார்வரி வருடம் : ஆனி மாதம் :
14 ஆம் தேதி !

ஜூன் மாதம் : 28 ஆம் தேதி !
(28-06-2020)

சூரிய உதயம் :
காலை : 05-56 மணி அளவில் !
(மிதுன லக்கனம்)

இன்றைய திதி : வளர்பிறை :
#அஷ்டமி !

அஷ்டமி..
பின் இரவு 12-24 மணி வரை ! அதன் பிறகு நவமி !

இன்றைய நட்சத்திரம் :

உத்திரம்..
காலை 09-01 மணி வரை ! அதன் பிறகு அஸ்தம் !!

யோகம் :
அமிர்தயோகம் !

இன்று
மேல் நோக்கு நாள் !!

சந்திராஷ்டமம் :
பூரட்டாதி !

ராகுகாலம் :
மாலை : 04-30 மணி முதல் 06-00 மணி வரை !!

எமகண்டம் :
மாலை : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !!

குளிகை :
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!

சூலம் :
மேற்கு : பரிகாரம் : வெல்லம் !

கரணம் :
பகல் : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !

நல்ல நேரம் :

காலை : 07-45 மணி முதல் 08-45 மணி வரை !!
10-45 மணி முதல் 11-45 மணி வரை !!

மாலை : 03-15 மணி முதல் 04-15 மணி வரை !

இன்றைய சுப ஓரைகள் :

சுக்ர ஓரை :
காலை : 07-00 மணி முதல் 08-00 மணி வரை !!

புதன் ஓரை :
காலை : 08-00 மணி முதல் 09-00 மணி வரை !!

சந்திர ஓரை :
காலை : 09-00 மணி முதல் 10-00 மணி வரை !!

இன்றைய சிறப்புகள் :

இன்று முற்பகல்
ஆனி உத்திர தரிசனம் !

இன்று
சகல சிவாலயங்களிலும் ஆனி உத்திர தரிசனம் !

(வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் முக்கிய ஆலயங்களை காணலாம் !)

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிப்பலன் 28.6.2020 ஆனி ( 14 ) ஞாயிற்றுக்கிழமை

மேஷம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது.

கடகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். மன மகிழச்சி ஏற்படும்.

சிம்மம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

கன்னி
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திடீர் தனவரவு உண்டாகும்.

துலாம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். வியாபார ரீதியான செயல்களில் சற்று நிதானம் தேவை. பிள்ளைகளால் அனுகூலங்கள் உண்டாகும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

விருச்சிகம்
இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் உடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.

தனுசு
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளி பயணங்களில் புதிய நபருடன் நட்பு ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

மகரம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.

கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் தள்ளி வைப்பது மிகவும் நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை.

மீனம்
இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினைகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் பெருகும்…

 


Leave a Comment