Temples

கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை | Kumbakonam temples

கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை | Kumbakonam temples

*படிக்க புண்ணியம் வேண்டும்*

நிச்சயம் உங்கள் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான், இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருந்து இருக்கும். மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை ..!

Kumbakonam temples

இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!

*இழந்த செல்வம் மீட்டு தரும்* ” தென்குரங்காடுதுறை ”

சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் ” ஆபத்சகாயேஸ்வரர் ” இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் ” தென்குரங்காடுதுறை ” என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.

*செல்வம் பெற வணங்க வேண்டிய தலம்* “திருவாடுதுறை”

கும்பகோணம் – மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் “திருவாடுதுறை”. ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

செல்வ வளம் பெருக சம்பந்தர் அருளிய பதிகம்
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!

இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே..!

*கடன், சங்கடங்கள் போக்கும்* ” திருபுவனம் சரபேஸ்வரர் ”

தீராத கடன் தொல்லைகள் தீர, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து விடுபட, வழக்குகளில் வெற்றி பெற, கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை வழித் தடத்தில் அமைந்துள்ள “திருபுவனம் ” சென்று அங்கு தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் “சரபேஸ்வரரை” வழிபடலாம். பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம். வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர். துயர் துடைப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபரை 11 விளக்கு, 11 சுற்று, 11 வாரம் என தரிசனம் செய்ய வழிபடுபவரது சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். ஞாயிற்று கிழமைகளின் ராகு கால வேளை சரபர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நேரம்.

*வறுமை நீக்கும் கடன் நிவர்த்தி தலமாம்* “திருச்சேறை”

ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள ” ரிண விமோஷன லிங்கேஸ்வரர் “. கும்பகோணம் – திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது தனி சிறப்பு..!

 

*பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர* “வாஞ்ஸ்ரீசியய்ம்”

மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள “ஸ்ரீவாஞ்சியம்”. காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வார்கள்.

*பிதுர் தோஷம் நீக்கும்* ” ஆவூர் பஞ்ச பைரவர்கள் “கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர்.

இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. ( ஆ என்றால் பசு ).
இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது. இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த “பிதுர் தோஷ நிவர்த்தியாகும்”.
சிலர் நல்ல சம்பாத்தியம் பெறுவர். ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகளை கொண்டிருப்பார்கள். ஆனால் சரியான வேலையோ அல்லது சம்பாத்தியமோ இருக்காது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம் “பிதுர் தோஷமே “. பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம்.

*மரண கண்டம் நீக்கும்* ” திருநீலக்குடி ”
ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள் தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக் கோயில், கும்பகோணம் – காரைக்கால் சாலயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள, திருநீலகண்டராய் சிவ பெருமான் அருளும் “திருநீலக்குடியாகும்”. மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும். ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத் தலத்தில் தானம் செய்ய வேண்டும். எம, மரண பயங்கள் நீங்க இத் தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.

*மாங்கல்ய தோஷம் நீக்கும்* ” பஞ்சமங்கள ஷேத்திரம் திருமங்கலக்குடி”
நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள “திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்”. இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.

இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள். மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி. இதனால் இவள் ” மங்களாம்பிகை” எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் “பிராண வரதேஸ்வரர் ” எனவும் வழிபடலாயினர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும். வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் ” பஞ்ச மங்கள ஷேத்திரம் ” எனப்படுகிறது.

*கிரக தோஷங்கள் விலக்கும்* ” சக்கரபாணி ”

ஆயுதமேந்திய எட்டு திருக்கரங்களுடன், சக்கர வடிவ தாமரை பூவுடன் கூடிய அறுகோண யந்திரத்தில், நின்ற திருக் கோலத்தில் காட்சி தரும் ” சக்ககரபாணி ” வழிபாடு கிரக தோஷங்கள் நீக்கும். நவக்கிரக நாயகனான சூரிய தேவனே வழிபட்டு தன் தோஷம் நீக்கியதால், இத் தலம் கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை கேது புத்தி போன்ற நவக்கிரக தோஷங்களால் அவதிப்படுபவர்கள் இத் தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும். சக்கரபாணி, ருத்ராம்சம் கொண்டு விளங்குவதால், வன்னி மற்றும் வில்வ இலைகள் அர்ச்சனையும் சிறப்பே.

*பெண் பாவம் தீர்க்கும்* ” திருவிசநல்லூர் ”
திருவியலூர் எனப்படும் ” திருவிசநல்லூரில் “சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார். இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப் பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும். பெண்களின் பாவதிற்க்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்த இத் தலம் ” மரண பயம் ” நீக்கும் திருத் தலமாகும்.
[24/10, 22:47] ssudarsan2004: *தேவாரம் பெற்ற தலங்கள்*

1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் — 44
2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள் — 52
3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள் — 13
4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள் —- 02
5. சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள் —- 111
6. அப்பர் மட்டும் பாடிய தலங்கள் —- 28
7. சுந்தரர் மட்டும் பாடிய தலங்கள் —– 25

மொத்தம் 275
இவற்றுள்
மாணிக்கவாசகர் பாடிய தலங்கள் 25

சிவஸ்தலத் தொகுதிகள்

வீரச் செயல்கள் புரிந்த தலங்கள்

1. *அட்ட வீரட்டத் ஸ்தலங்கள்*

1. திருக்கண்டியூர் —- பிரமன் சிரம் கொய்தது
2. திருக்கோவலூர் —- அந்தகாசுரனைச் சங்கரித்தது
3. திருஅதிகை —- திரிபுரத்தை எரித்தது
4. திருப்பறியலூர் — தக்கன் சிரங்கொய்தது
5. திருவிற்குடி —- சலந்தராசுரனைச் சங்கரிதத்து
6. வழுவூர் (வைப்புத்தலம்) — யானையை உரித்தது
7. திருக்குறுக்கை — காமனை எரித்தது
8. திருக்கடவூர் —- யமனை உதைத்தது

2. *பன்னிரு ஜோதிலிங்கத் ஸ்தலங்கள்*

1. கேதாரம் (இமயம்) —- கேதாரேஸ்வர்ர்
2. சோமநாதம் (குஜராத்) —- சோமநாதேஸ்வரர்
3. மகாகாளேசம் (உஜ்ஜயினி) —- மகாகாளேஸ்வரர்
4. விசுவநாதமே (காசி) —- விஸ்வநாதேசுவரர்
5. வைத்தியநாதம் (மகாராஷ்டிரம்) —- வைத்திநாதேசுவரர்
6, பீமநாதம் (மகாராஷ்டிரம்) —- பீமநாதேசுவரர்
7. நாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்) —- நாகநாதேசுவர்ர்
8. ஓங்காரேஸ்வரம் (மத்தியப் பிரதேசம்) — ஓங்காரேசுவரர்
9. த்ரயம்பகம் (மகாராஷ்டிரம்) — த்ரயம்பகேசுவரர்
10. குசமேசம் (மகாராஷ்டிரம்) —- குஸ்ருணேச்சுவர்ர்
11. மல்லிகார்சுனம் ஸ்ரீசைலம் (ஆந்திரம்) — மல்லிகார்ச்சுனர்
12. இராமநாதம் (அராமேஸ்வரம்) —- இராமநாதேஸ்வரர்

*முக்தி அளிக்கும் ஸ்தலங்கள்*

1. திரு ஆரூர் —- பிறக்க முக்தி தருவது
2. சிதம்பரம் —– தரிசிக்க முக்தி தருவது
3. திருவண்ணாமலை —- நினைக்க முக்தி தருவது
4. காசி —- இறக்க முக்தி தருவது

*பஞ்சபூத ஸ்தலங்கள்*

1. திரு ஆரூர் அல்லது காஞ்சிபுரம் —- பிருதிவி (நிலம்)
2. திரு ஆனைக்கா —– அப்பு (நீர்)
3. திருவண்ணாமலை —– தேயு (தீ)
4. திருக்காளத்தி —– வாயு (வளி)
5. சிதம்பரம் —- ஆகாயம் (விசும்பு)

*நடராஜருக்கான பஞ்ச சபைகள்*

1. திருவாலங்காடு — இரத்தின சபை
2. சிதம்பரம் — கனகசபை (பொன்னம்பலம்)
3. மதுரை — ரஜதசபை (வெள்ளியம்பலம்)
4, திருநெல்வேலி — தாமிர சபை
5, திருக்குற்றாலம் — சித்திர சபை

*(வியாக்ரபாதர் வழிபட்டவை) புலியூர்கள்*

1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
2. திருப்பாதிரிப்புலியூர்
3. ஓமாம்புலியூர்
4. எருக்கத்தம்புலியூர்
5. பெரும்புலியூர்

*சப்த (ஏழு)விடங்க ஸ்தலங்கள்*

முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரன் அளித்த தியாகராஜர் உருவங்களை நிறுவிய தலங்கள்.

இந்தத் தியாகர் உருவங்கள் தனிப் பெயர்களைப் பெற்றுத் தனிப்பட்ட நடனங்களை யாடுவார்கள்.

1. திருஆரூர் — வீதிலிடங்கள் — அசபா நடனம்
2. திருநள்ளாறு — நகர (நசு) விடங்கர் — உன்மத்த நடனம்
3. திருநாகைக்ரோணம் — சுந்தரவிடங்கர் — வீசி நடனம்
4. திருக்காறாயில் — ஆதிவிடங்கர் — குக்குட நடனம்
5. திருக்கோளிலி — அவனிவிடங்கர் — பிருங்க நடனம்
6. திருவாய்மூர் —- நீலவிடங்கர் — கமல நடனம்
7. திருமறைக்காடு — புவனிலிடங்கர் — கம்சபாத

*சிறப்புத் தாண்டவத் ஸ்தலங்கள்*

1. தில்லைச் சித்திரக் கூடம், பேரூர் —- ஆனந்த தாண்டவம்
2. திரு ஆரூர் —- அசபா தாண்டவம்
3. மதுரை —- ஞானசுந்தர தாண்டவம்
4. புக்கொளியூர் —-. ஊர்த்துவ தாண்டவம்
5. திருமுருகன் பூண்டி —- பிரம தாண்டவம்

*சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற ஸ்தலங்கள்*

1. கச்சி ஏகம்பம்
2. திருக்காளத்திங
3. கோகர்ணம்
4. திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)
5. திருவைகாவூர்

*காசிக்கு ஈடான ஸ்தலங்கள்*

1. திருவெண்காடு
2. திருவையாறு
3. மயிலாடுதுறை
4. திருவிடை மருதூர்
5. திருச்சாய்க்காடு
6. திருவாஞ்சியம்

*நந்தியுடன் தொடர்புடைய ஸ்தலங்கள்*

1. நந்தி சங்கம தலம் — கூடலையாற்றூர் திருநணா (பவா நிகூடல்)
2. நந்தி விலகியிருந்த தலங்கள் —- பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக), திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி(அப்பர்,சம்பந்தருக்காக).
3. நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் — திருவெண்

பாக்கம்
4. நந்திதேவர் நின்ற திருக்கோலம் — திருமாற்பேறு
5. நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் — திருமழபாடி
6. திருக்கீழ்வேளூர் – ஒரு பக்தையின் பொருட்டு
7. திருநள்ளாறு – ஒரு இடையனுக்காக

*சப்த ஸ்தான (ஏழூர் விழா) தலங்கள்*

1. திருவையாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிகுடி
5. திருக்கண்டியூர்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்
திருவையாற்றைச் சுற்றியமைந்துள்ளன.

*திருமால் சந்நிதி உள்ள சிவாலயங்கள்*

1. திருவோத்தூர் — ஆதிகேசவப் பெருமாள்
2. கச்சி ஏகம்பம் —- நிலாத்துண்டப் பெருமாள்
3. கொடிமாடச் செங்குன்றூர் — ஆதிகேசப் பெருமாள்
4. சிதம்பரம் — கோவிந்தராஜப் பெருமாள்
5. திருநணா — ஆதிகேசவப் பெருமாள்
6. சிக்கல் — கோலவாமனப் பெருமாள்
7. திருநாவலூர் — வரதராஜப் பெருமாள்
8. திருநெல்வேலி — நெல்லை கோவிந்தர்
9. திருப்பழனம் — கோவிந்தர்
10.பாண்டிக் கொடுமுடி — அரங்கநாதர்
11. திருப்பத்தூர் — அரங்கநாதர்
12. திருவக்கரை — அரங்கநாதர்

*ஒரே கோயிலில் இரு பாடல் பெற்ற கோயில்கள்*

உட்கோயில் கோயில்

1. திருவாரூர் அரநெறி —- திருவாரூர்
2. திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் — திருப்புகலூர்
3. மீயச்சூர் இளங்கோயில் —- மீயச்சூர்

*காயாரோகணத் தலங்கள்*

1. கச்சிக்காரோணம் (வைப்புத் தலம்)
2. சூடந்தைக் காரோணம்
3. நாகைக் காரோணம்

*மயானத் தலங்கள்*

1. கச்சி மயானம்
2. கடவூர் மயானம்
3. நாலூர் மயானம்

*கைலாயத் தலங்கள் தெட்சண கைலாசம்*

1. திருக்காளத்தி
2. திருச்சிராப்பள்ளி
3. திரிகோணமலை (இலங்கை)

*பூலோக கைலாசம்*

1. திருவையாறு
2. திருக்குற்றாலம்
3. சிதம்பரம்

*அழகிற் சிறந்த கோயில்கள்*

1. தேரழகு — திருவாரூர்
2. வீதி அழகு — திருஇடை மருதூர்
3. மதிலழகு — திருவிரிஞ்சை
4. விளக்கழகு — வேதாரண்யம்
5. கோபுரமழகு — திருக்குடந்தை
6. கோயிலழகு – காஞ்சி

*பூசாகாலத்தில் சிறப்பு வழிபாடு*

1. திருக்குற்றாலம் — திருவனந்தல் சிறப்பு
2. இராமேச்சுரம் — காலை பூசை சிறப்பு
3. திருஆனைக்கா — மத்தியான பூசை சிறப்பு
4. திரு ஆரூர் — சாயுங்கால பூசை சிறப்பு
5. மதுரை — இராக்கால பூசை சிறப்பு
6. சிதம்பரம் — அர்த்தசாம பூசை சிறப்பு

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்து வாழ்ந்த நாயன்மார்கள்

குங்கிலியக்கலயர், முருகர், குலச்சிறை, அப்பூதி, நீலநக்கர், சிறுத்தொண்டர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசி, திருநீலகண்டயாழ்பாணர்.

நடராசர் அபிஷேக நாட்கள் 6

மார்கழி = ஆதிரை , சித்திரை = ஓணம், ஆனி = உத்திரம் மாசி = ஆவணி
புரட்டாசி ஆகிய மூன்றும் நட்சத்திர அடிப்படையிலானவை. ஏனைய மூன்றுக்கும் சதுர்த்தசி திதி அடிப்படை.

ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ள சிலஸ்தலங்கள்

மதுரை, சிதம்பரம், இராமேஸ்வரம்.

ஒரே ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் அமைந்து காணப்பெறும் ஒரே தேவாரத் திருத்தலம்

திருநல்லூர்த் திருத்தலம்.

அமர்ந்த நிலையிலான அர்த்தநாரீஸ்வர வடிவம்

“திருகண்டியூர் வீரட்டம்” என்னும் திருத்தலத்தில் மட்டுமே அமையப்பெற்றுள்ளது.

திருஞான சம்பந்தருக்காக நந்தி விலகிய தலங்கள் இரண்டு.

திருப்பட்டீச்சரம், திருப்பூந்துருத்தி.

*சிவன் சிறப்புத் தேவாரத் தாண்டவத் தேவாரத்தலங்கள் ஆறு*

1. மயூர தாண்டவம் – மயிலாடுதுரை
2. அஞ்சிதபாத கரண தாண்டவம்- செங்காட்டங்குடி
3. கடிசம தாண்டவம்- திருவக்கரை
4. சதுர தாண்டவம்- திருநல்நூர்
5. சுந்தரத் தாண்டவம்- கீழ்வேளூர்
6. லதா விருச்சிக தாண்டவம்- திருமழபாடி

அறுபத்து மூன்று நாயன்மாரில் குருவருளால் முக்தி பெற்றோர்.

சம்பந்தர், நாவுக்கரசர், திருமூலர், நின்றசீர் நெடுமாறன், அப்பூதி, சோமாசிமாறர், மங்கையர்கரசி, நீலகண்டயாழ்பாணர், மிழலைக்குறும்பர், கணநாதர், குலச்சிறை என 11 பேர் ஆவார்.

*பெரிய கோபுரத் தலங்கள்*

திருவண்ணாமலை
மதுரை
தில்லை
திருமுதுகுன்றம்
திருச்செந்தூர்
இராமேஸ்வரம்
குடந்தை
காளையார் கோவில்
தென்காசி

*மண்டபங்கள் சிறப்பு*

வேலூர் – கல்யாண மண்டபம்
கிருஷ்ணாபுரம் – சபா மண்டபம்
பேரூர் – கனக சபை
தாரமங்கலம் – குதிரை மண்டபம்
புகழ் பெற்றவை மட்டுமில்லாமல் இம்மண்டபங்கள் கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டானவைகளாகும்.

*யானை ஏறாத மாடக் கோயில்கள் சில*

1. திருவானைக்காவல்
2. ஆக்கூர்
3. திருத்தேவூர்
4. திருக்கீழ்வேளூர்
5. சிக்கல்
6. வலிவலம்
7. அம்பர்மகாளம்
8. தண்டலை நீள் நெறி
9. திருநறையூர்
10. பழையாரை
11. திருமருகல்
12. வைகல்மாடக் கோயில்
13. நன்னிலம்(மதுவனம்)
14. குடவாசல்
15. புள்ளமங்கை
16. திருத்தலைச்சங்காடு
17. நல்லூர்
18. திருநாலூர்
19. திருச்சாய்க்காடு
20. திருவக்கரை
21. திருநாங்கூர்
22. திருப்ராய்த்துறை
23. ஆவுர்
24. திருவெள்ளாறை
25. திருவழுந்தூர்
26. நாகப்பட்டினம்
27. பெருவேளூர்
28. கைச்சின்னம்
29. சேங்கனூர் இவ்விதம் எழுபதுக்கும் மேல்…….

*பெரிய லிங்கம்*

கங்கை கொண்ட சோழபுரம் – இங்குள்ள மூலஸ்தான மூர்த்திக்கு இலிங்கத் திருஉருவைச் சுற்ற 15 முழமும், ஆவுடையார்க்கு 54 முழமும் பரிவட்டம் வேண்டும்.

திருப்புனவாயில் – இத்தலத்து மூல லிங்கம் மிகப் பெரியது. இலிங்க வடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுடையாருக்கு முப்பது முழம் பரிவட்டமும் தேவை “மூன்று முழம் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று ”என்பது பழமொழி.

*பெரிய நந்தி*

தஞ்சை நந்தி மிகப் பெரியது தான். அதனினும் பெரியது லேபாட்சி வீரபத்திரர் சுவாமி கோயிலில் உள்ள நந்தியாகும்.

*புகழ்பெற்ற கோயில்கள்*

கோயில் – சிதம்பரம்
பெரியகோயில்- தஞ்சை
பூங்கோயில் – திருவாரூர்
திருவெள்ளடை- திருக்குருகாவூர்
ஏழிருக்கை-சாட்டியக்குடி
ஆலக்கோயில்-திருக்கச்சூர்
கரக்கோயில்- திருக்கடம்பூர்
கொகுடிக் கோயில்- திருப்பறியலூர்
மணிமாடம்- திருநறையூர்
தூங்கானைமாடம்- திருப்பெண்ணாடகம்
அயவந்தீச்சரம்-திருச்சாத்தமங்கை
சித்தீச் சுரம்- திருநறையூர்.

*நால்வர் இறையருளில் கலந்த தலங்கள்*

1. திருஞானசம்பந்தர் – ஆச்சாள் புரம்
2. திருநாவுக்கரசர் – திருப்புகலூர்
3. சுந்தரர் – திருவஞ்சைக்களம்
4. மாணிக்கவாசகர் – தில்லை

*சந்தானக்குரவர் அவதரித்த தலங்கள்*

1. மெய்கண்டார்- திருப்பெண்ணாடகம்
2. அருள் நந்திதேவ நாயனார் – திருத்துறையூர்
3. மறைஞானசம்பந்தர்- பெண்ணாடகம்
4. உமாபதி சிவம்- சிதம்பரம்.

*சந்தானக்குரவர் முக்தி அடைந்த தலங்கள்*

1. மெய்கண்டார்- திருவண்ணாமலை
2. அருள் நந்திதேவ நாயனார் – சிர்காழி
3. மறைஞானசம்பந்தர்- சிதம்பரம்
4. உமாபதி சிவம்- சிதம்பரம்

பக்தர்கள் பொருட்டு

திருவிரிஞ்சியுரம்- பக்தனுக்காக இறைவன் தன் முடியை சாயத்து அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார்.

திருப்பனந்தாள் – பக்தைக்காக இறைவன் தன் முடியை சாய்த்து பூமாலையை ஏற்றிக் கொண்டருளினார்.

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord Shiva
  • Recent Posts

    Today rasi palan 19/04/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் வெள்ளிக் கிழமை சித்திரை – 06

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _* *பஞ்சாங்கம் ~ க்ரோதி ~ சித்திரை ~… Read More

    13 hours ago

    Kolaru Pathigam Song lyrics in Tamil | கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

    Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More

    14 hours ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    14 hours ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    1 month ago

    Gomatha stotram in tamil | பசுமாடு ஸ்தோத்ரம்

    கோமாதா ஸ்தோத்திரம் நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே… Read More

    2 weeks ago

    Asta Kaali Deviyar Varalaru | அஷ்ட காளி தேவியர் வரலாறு

    அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More

    1 month ago