Temples

உங்கள் ராசிக்கு எந்த சிவன் கோவில் | 12 rasi sivan temples

12 rasi sivan temples

உங்கள் ராசிக்கு எந்த சிவன் கோவில் (12 rasi sivan temples) | Sivan temples for your zodiac sign – சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் ஒன்று மகாசிவராத்திரி. ஒவ்வோரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் லிங்கத்தில் அருள்பாலிக்கத் தொடங்கியதும், பிரம்மா, விஷ்ணு இருவரும் சிவபெருமானின் அடிமுடி தேடியதும், தேவ அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை அருந்தி சிவபெருமான் உலகைக் காப்பாற்றியதும் இந்த நாளில்தான். மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடவேண்டும்.

 

எந்த ராசியினருக்கு எங்கு சென்று வழிபட்டால் சிவனின் முழு அருளைப் பெறலாம் என்பதைக் காண்போம் :

மேஷம்

மலை மேல் அமர்ந்த சிவனை வழிபடுவது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் வெல்லம் கலந்த நீரை வைத்து வணங்கலாம்.

ரிஷபம்

திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் தயிர் கலந்த நீரை வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

மிதுனம்

திருச்செங்கோடு, சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வரலாம். சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

கடகம்

திருக்கடையூர், திருவானைக்காவல், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச சென்று வழிபடலாம். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் சர்க்கரைக் கலந்த பால் வைத்துப் படைத்து வணங்கலாம்.

சிம்மம்

சிதம்பரம், திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் சிவப்புச் சந்தனம் கலந்த பாலால் அபிஷேகம் செய்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

கன்னி

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடலாம்.

துலாம்

சிதம்பரம், காளஹஸ்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பாலாபிஷேகம் செய்து வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்.

விருச்சிகம்

திருவானைக்காவல், வேலு}ர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்.

தனுசு

திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை சென்று வழிபடுவது நல்லது.

மகரம்

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

கும்பம்

சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய சிவதலங்களுக்குச் சென்று வழிபட்டால், உற்சாகம் தரும் செய்திகள் உங்களை வந்தடையும்.

மீனம்

வேதாரண்யம், ஜலகண்டேஸ்வரர் கோயில், திருவானைக்காவல் சென்று வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். உங்களுக்கு அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பாலில் குங்குமப்பூ கலந்து அபிஷேகம் செய்து வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்..

108 சிவன் போற்றி

108 லிங்கம் போற்றி

சிவபெருமான் பாடல்கள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord Shiva
  • Recent Posts

    Today rasi palan 20/04/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் சனிக் கிழமை சித்திரை – 07

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°°°° *சித்திரை - 07* *ஏப்ரல் -… Read More

    3 hours ago

    Kolaru Pathigam Song lyrics in Tamil | கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

    Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More

    1 day ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    1 day ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    1 month ago

    Gomatha stotram in tamil | பசுமாடு ஸ்தோத்ரம்

    கோமாதா ஸ்தோத்திரம் நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே… Read More

    2 weeks ago

    Asta Kaali Deviyar Varalaru | அஷ்ட காளி தேவியர் வரலாறு

    அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More

    1 month ago