Raksha Raksha Jagan Matha Lyrics Tamil

ஜெய துர்கா ஸ்துதி – ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா பாடல் வரிகள் ( Raksha Raksha Jagan Matha) இந்த பதிவில் உள்ளது… மேலும் நீங்கள் காண இந்த பாடலின் காணொளியும் கொடுக்கப்பட்டுள்ளது…

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
மங்கள வாரம் சொல்லிட வேண்டும்
மங்கள கண்டிகை ஸ்லோகம் இதை
ஒன்பது வாரம் சொல்லுவதாலே
உமையவள் திருவருள் சேரும்

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா

படைப்பவள் அவளே காப்பவள் அவளே
அழிப்பவள் அவளே சக்தி அபயம்
என்று அவளை சரண் புகுந்தாலே
அடைக்கலம் அவளே சக்தி ஜெய ஜெய
சங்கரி கௌரி மனோகரி அபயம் அளிப்பவள்
அம்பிகை பைரவி

சிவ சிவ சங்கரி சக்தி மஹேஸ்வரி திருவருள் தருவாள் தேவி

திருவருள் தருவாள் தேவி

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா

கருணையில் ககை கண்ணணின் தங்கை
கடைக்கண் திறந்தால் போதும்
வருகின்ற யோகம் வளர்பிறை யாகும்
அருள்மழை பொழிவாள் நாளும்
நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்
காளி எனத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா….

Video Song

ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகள்

துர்க்கை அம்மன் 108 போற்றி

துர்க்கை அம்மன் – 20 வழிபாட்டு குறிப்புகள்

காமாட்சி அம்மன் விருத்தம் வரிகள்

 

 

Leave a Comment