Arthamulla Aanmeegam

பெருமாளை ஏன் கோவிந்தா என்று தெரியுமா? Govindha name history and meaning

பெருமாளை ஏன் கோவிந்தா என்று தெரியுமா? Govindha name history and meaning

*புரட்டாசி சிறப்பு பகிர்வு*

*கோவிந்தா! கோவிந்தா!!*

*திருமலை-திருப்பதியில், நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் *திருவேங்கடமுடையானுக்கு*  *பல திருநாமங்கள். அதில் சிறப்பு மிக்க திருநாமமாக போற்றப்படுவது *கோவிந்தா* *என்னும் நாமமே*!

*பாகவதத்தில், பகவான் கிருஷ்ணனுக்கு பட்டாபிஷேகம்போது சூட்டப்பட்ட திருநாமம் கோவிந்தா*!

*ஆதிசங்கரர் தனது பஜகோவிந்தத்தில் முன்னிலைப்படுத்துவதும் கோவிந்த நாமத்தையே*!

*ஆண்டாள், குறையொன்றும் இல்லாத கோவிந்தா!* *என்று திருப்பாவையில் போற்றுகிறாள்*

*இத்தகைய சிறப்புமிக்க கோவிந்த நாமத்திற்கு  புராண சம்பவமும் ஒன்று!*…

*மஹாவிஷ்ணு கலியுகத்தில் அவதரிக்க, மனித வடிவில் திருப்பதி பகுதியில் தோன்றினார்*. *அங்கே அருகிலுள்ள அகஸ்திய முனிவர் ஆஸ்ரமத்தில்- கோசாலைக்குள் சென்று*
*முனிவரே! நான் கலியுகத்தில் சில செயல்களை முடிக்கத் திருவுளம் கொண்டு இங்கு யாம் வந்துள்ளோம்*. *உம்முடைய கோசாலையிலிருந்து ஒரு பசு தானமாக  வேண்டினார்*.

*ஐயனே! பசுவினை பிரம்மச்சாரிக்கு தானம் செய்ய இயலாது  என்பதை தாங்கள் அறியாததல்ல*
*கலியுகத்தில் தாங்கள் அவதரித்ததுபோல், மஹாலக்ஷ்மியும் அவதரித்திருக்கிறாள்*.
*நீர் அன்னையின்* *கரம்பற்றி தம்பதி* *சமேதராய் வந்து பசுவினை பெற்றுக் கொள்ளலாமே என்று வேண்டினார்*!

*அதன்படியே வேங்கடவன், பத்மாவதியை திருமணம் செய்துகொண்டு தனது வாசஸ்தலமான திருமலைக்கு செல்லும் முன் அகஸ்தியரிடம் இருந்து பசுவினை பெற்றுச் செல்ல ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அங்கே முனிவரது சீடர்கள் மட்டுமே இருந்தனர்*

*அவர்களிடம் பெருமான், அகஸ்தியரிடம் இருந்து பசுவினை பெற்று செல்ல வந்துள்ளோம் எனக்கூற, முனிவர் வந்தவுடன் பெற்றுச் செல்லலாம், அதுவரை நாங்கள் தங்களுக்கு பணிவிடை செய்து பாக்யமாவோம் என்றனர் சீடர்கள்*.

*தாமதமாகையால், சீடர்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள்*. *சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு வந்த அகஸ்தியர் நடந்தவற்றை கேட்டு, உலகையே காக்கும் பரந்தாமனை ஒரு பசுவிற்காக அலைக்கலித்ததை நினைத்து வருத்தமுற்றார்*

*காமதேனு போன்ற பசு ஒன்றினை அவிழ்த்துக் கொண்டு அவர்கள் சென்ற வழியைத் தேடி நடந்தார். ஒரு வழியாக அவர்கள் செல்லும் வழியைக் கண்டுபிடித்து, எம்பெருமானை நோக்கி குரல் கொடுத்தபடியே சென்றார். *ஸ்வாமி, கோவு-இந்தா* *என்று சப்தமிட்டார்*!
*தெலுங்கில் *கோவு* –  *பசு*
*இந்தா* – *எடுத்துக்கொள்* *என்று பொருள்*
*ஆனால் ஸ்வாமிக்கு இவர் குரல்* *கேட்கவில்லை போலும். மீண்டும் மீண்டும் இதையே சொல்லி பின் தொடர்ந்தார்*.

*அகஸ்தியரோ, தன் குரலை உயர்த்தி கோவு இந்தா* *கோவு இந்தா* *என்று வேகமாக உச்சரிக்க, அது கோவிந்தா! கோவிந்தா!* *என்று ஆனது*

*கோவிந்தா! கோவிந்தா! என்று அவர் 108 முறை அழைத்ததும் பெருமாள் நின்றார்!  ஓடோடி வந்த அகஸ்தியரிடம் பசுவினை பெற்றுக்கொண்டு, நீர் சொன்ன இந்த கோவிந்த நாமமே எமக்கு உகப்பாயிருக்கிறது!*
*இனி யாரெல்லாம் என்னை கோவிந்தா என்ற நாமத்தை சொல்லி* *அழைக்கிறார்களோ, நான் அவர்களை நோக்கி அனுக்ரஹம் செய்வேன்* *என்று திருமலையில் குடிபுகுந்தான் வேங்கடவன்!*

*கோவிந்தா*! 🙏
*கோவிந்தா*!!🌹

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord perumal
  • Recent Posts

    நவராத்திரி 2024 சிறப்பு பதிவு | Navaratri festival 2024

    நவராத்திரி 2024 சிறப்பு பதிவு கொலு வைக்க உகந்த நேரம்: 03.10.2024 புரட்டாசி 17 ஆம் தேதி வியாழக்கிழமை முதல்… Read More

    4 days ago

    Today rasi palan 06/10/2024 in tamil | இன்றைய ராசிபலன் புரட்டாசி – 20 ஞாயிற்றுக் கிழமை

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _ _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *புரட்டாசி -… Read More

    9 hours ago

    கார்த்திகேய ப்ரபாவம் எனும் சண்முக போற்றி மந்திரம் | Shanmuga Potri Mantram Tamil

    கார்த்திகேய ப்ரபாவம் எனும் சண்முக போற்றி மந்திரம் | Shanmuga mantram lyrics tamil மஹா பாரதத்தில் வன பர்வத்தில்… Read More

    2 weeks ago

    ஆத்மா, அனாத்மா, பரமாத்மா | Athma and Anathma

    Athma and Anathma ஆத்மா, அனாத்மா, பரமாத்மா பற்றிய அழகிய விளக்கம் - Athma and Anathma ஆத்மா, அனாத்மா,… Read More

    2 weeks ago

    மகாளய பக்ஷ தர்ப்பண ஸங்கல்பம் செய்யும் முறை | Mahalaya Patcham Tharpanam procedure

    மகாளய பக்ஷ தர்ப்பண ஸங்கல்பம் செய்யும் முறை 18-09-2024 (ப்ரதமை திதி) புதன் கிழமை ஆசமனம். அச்சுதாய நம: அனந்தாய… Read More

    3 weeks ago

    மகாளய பித்ரு பக்ஷ கேள்வி பதில்கள் | Mahalaya Patcham Questions

    மகாளய பித்ரு பக்ஷ கேள்வி பதில்கள் | Mahalaya Patcham Questions 18/09/24 - 03/10/24 - தர்ம சாஸ்த்ரம்… Read More

    3 weeks ago