Arthamulla Aanmeegam

அனுமன் ஜெயந்தி ஸ்பெஷல் | Hanuman jayanthi special info

🔱அனுமன் ஜெயந்தி ஸ்பெஷல்🔱

இடது கையில் மலையும், வலது கையில் தண்டாயுதமும் கொண்டவரே! பிரகாசிக்கும் குண்டலம் அணிந்தவரே! அனுமனே! உம்மை வணங்குகிறேன்

பட்டாடை அணிந்தவரே! மான்தோல் போர்த்தியவரே! பிரகாசிக்கும் கூந்தலை முடிந்தவரே! உம்மைச் சரணடைகிறேன்

ஆபத்தில் சிக்கியவர்களின் மனக்கவலையை போக்குபவரே! எதிர்பாராமல் வந்து உதவுபவரே! விபத்துகளில் இருந்து பாதுகாப்பு தருகிறவரே! உம்மை பணிகிறேன்

சீதையைப் பிரிந்த ராமனின் சோகம், பயத்தைப் போக்கியவரே!, ஆசைகளை விரட்டுபவரே! உம்மை நமஸ்கரிக்கிறேன்

கவலை, வியாதி, கிரகபீடைகளைப் போக்குகிறவரே!, அசுரர்களைக் கொன்று அடக்குகிறவரே! ராமனின் உயிருக்கும் உயிராக விளங்கும் அனுமனே! உம்மை வணங்குகிறேன்

செயல்பாடுகளை தடங்கல் இன்றி சாதிக்க உதவுபவரே! மிருகங்கள், திருடர்களால் ஏற்படும் தொல்லைகளைத் தவிர்ப்பவரே! வாயுவின் பிள்ளையே! வானரங்களுக்கு உயிரானவரே! அஞ்சனை மைந்தரே! உமக்கு என் பணிவார்ந்த வணக்கம்

கருணை நிறைந்தவரே! கெட்டவர்க்கு கெட்டவரே!, அனைத்து செல்வங்களையும் தருபவரே! எனக்கு வெற்றியும், புகழும் அருள வேண்டுகிறேன்

அனுமனே! பயணம் செய்யும் போதும், தேசத்திற்காகப் போராடும்போதும், என்னை நோக்கிவரும் ஆபத்தைத் தடுத்து உதவ பிரார்த்தனை செய்கிறேன்

வஜ்ராயுதம் போன்ற சரீரமும், அளவற்ற தேஜஸும் உள்ளவரே! போர்க்களத்தில் அக்னியாய் திகழ்பவரே!, பிரம்மாஸ்திரத்தையே ஸ்தம்பிக்கச் செய்பவரே! ருத்ரமூர்த்தியே! உமக்கு நமஸ்காரம் செய்கிறேன்

அளவற்ற உற்சாகம் கொண்டவரே! எதிரிகளைச் சம்ஹாரம் செய்பவரே! உமது பக்தனாகிய எனக்கு தைரியத்தை தந்தருளும்

சுத்தமான மனதுடையவரே! ராமதூதர்களில் முதல்வரே! பாலசூரியனுக்கு ஒப்பான முகத்தை உடையவரே! கருணை பொங்கும் கண்களை உடையவரே! யுத்தத்தில் இறந்த வீரர்களை சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து பிழைக்கச் செய்தவரே! புகழத்தக்க மகிமை உள்ளவரே! அஞ்சனாதேவி செய்த புண்ணியத்தால் அவதரித்த அனுமனே! உம்மை தரிசித்து மகிழ்கிறேன்

எல்லா ஆசையையும் துறந்தவரே! தாமரை போல பெரிய கண்களும், சங்கு கழுத்தும், அழகும் பொருந்தியவரே! அனுமனே! உம்மைச் சரணடைகிறேன்

சீதையின் கஷ்டங்களை விலக்கியவரே! ராமனின் நினைவை உருவாக்குபவரே! துன்பப்படுபவர்களை காப்பாற்றுபவரே! ஆஞ்சநேயப் பெருமானே! இந்த ஸ்தோத்திரத்தைப் படித்த எங்களுக்கு நீண்ட ஆயுளையும், செல்வத்தையும் தருவீராக

ஏழு சிரஞ்சீவிகள்:

ஏழுபேர் சிரஞ்சீவிகளாய்(அழியாப்புகழ் உள்ளவர்கள்) உள்ளனர். ராவணனின் தம்பி விபீஷணன் உறவென்றும் பாராமல், நியாயத்தின் பக்கம் நின்றார். மகாபலி, பெருமாளுக்காக தன் உயிரையே அர்ப்பணித்தவர். மார்க்கண்டேயர் சிவன் மீது கொண்ட உண்மை பக்தி காரணமாக எமனையே வென்றார்

மகாபாரதம் என்னும் அழியாகாவியத்தை எழுதி அதைப்
படிப்போரின் பாவங்களைப் போக்கி அருளினார் வியாசர். தாயையே கொன்று, தந்தை சொல் காத்ததுடன் தாயையும் உயிர்ப்பித்தார் பரசுராமர். துரோணரின் மகன் அஸ்வத்தாமன் கடைசி வரை கட்சி மாறாமல், கவுரவர்களுக்காக தனது வீரத்தைக் காட்டினான். இவர்களுடன், யாரென்றே தெரியாத ராமனுக்கு, எந்த வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்த அனுமனும் சிரஞ்சீவி பட்டியலில் சேருகிறார்

அனுமன் பெற்ற அவார்டு: இலங்கையிலிருந்து அயோத்திக்கு வந்து சேர்ந்ததற்கு முழுமுதல் காரணம் அனுமன் தான் என்று நன்றியுணர்வோடு ராமபிரானிடம் சொன்னாள் சீதை. ராமபிரானும் சீதாதேவியிடம்,”” நாம் இருவரும் அனுமனுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்,” என்றார். பட்டாபிஷேக ஞாபகார்த்தமாக பரிசுப்பொருள்களை ராமன் பலருக்கும் கொடுத்தார். அப்போது சீதை, “”பிரபு! அனுமனுக்கு ஏதாவது செய்து நம் நன்றியுணர்வைத் வெளிப்படுத்த வேண்டும்,” என்றாள். ராமன் தான் அணிந்திருந்த முத்துமாலையை சீதையின் கையில் கொடுத்துவிட்டு, மவுனமாக இருந்தார்

சீதையும் ராமனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவளாய், “”பிரபு! முத்தாரத்தை உங்கள் பரிவாரத்தில் இருக்கும் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை உங்கள் திருவாயாலேயே சொல்லி விடுங்கள்!” என்று வேண்டுகோள் விடுத்தாள். அப்போது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, “”பராக்கிரமம்,புத்தி, பணிவு யாருக்குப் பூரணமாக இருக்கிறதோ, அவருக்கு கொடு!” என்றார். உடனே, சீதாதேவி அனுமனிடம் முத்தாரத்தைக் கொடுத்தாள். அனுமனுக்கு கிடைத்த இந்த “அவார்டு’ அவரே ராமாயணத்தின் அச்சாணி என்பதை தெளிவுபடுத்துகிறது

பிரபல அனுமன் கோயில்கள்

1.சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் 18 அடி உயர ஆஞ்சநேயர்

2. தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் – 77 அடி உயர ஆஞ்சநேயர்

3.புதுச்சேரி பஞ்சவடி – 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர்

4.திண்டுக்கல் சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஹஸ்த ஆஞ்சநேயர்

5.திண்டுக்கல் நிலக்கோட்டை அணைப்பட்டி ஆஞ்சநேயர்

6.கோவை அஷ்டாம்ச ஆஞ்சநேயர், மேட்டுப்பாளையம் சிறுமுகை ஆஞ்சநேயர்

7.மதுரை சிம்மக்கல் ஆஞ்சநேயர்

8.நாமக்கல் ஆஞ்சநேயர்

9.சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர்

10.திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர், கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர்

11.திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) பெருமாள் கோயில் வீர ஆஞ்சநேயர்

12.நாகப்பட்டினம் அனந்தமங்கலம் அஷ்டதசபுஜ வீர ஆஞ்சநேயர்

13. கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் காட்டுவீர ஆஞ்சநேயர்

14.வேலூர் சோளிங்கர் யோக ஆஞ்சநேயர்

15. தஞ்சாவூர் மூலை அனுமார்

அனுமன் பெற்ற அற்புத வரங்கள்

அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் சுந்தரகாண்டம்

ஆஞ்சநேயர் வழிபாடு பலன்கள்

அனுமான் 108 போற்றி

♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻
🍁 ஶ்ரீஆஞ்சநேய ஜெயந்தி ஸ்பெஷல் 🍁
🍎 #சுந்தர_வாழ்வருளும் 🍎
🌞 #சுந்தரகாண்டம் .🌞
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌹யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா

🌹லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்

🌹 அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:

🌹 தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே🌹

🌹தினமும் காலையிலும், மாலையிலும் கூறிவந்தால் சுந்தர காண்டத்தை முழுவதுமாகப் பாராயணம் செய்த பலன்
கிடைக்கும் ..🌹

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

🌹போகிற உயிரைத் தடுத்து நிறுத்தும் சக்தி சுந்தரகாண்டத்திற்குள் பொதிந்திருக்கும் காண்டத்தின் சிறப்பை சொற்களால் விளக்க முடியாது.🌹

🌹‘ராம’நாமம் எங்கு ஒலித்தாலும் ஆஞ்சநேயர் அங்கே
பிரஸன்னமாவார் என்பது ஐதிகம்.🌹

🌹ஆகவே சுந்தர காண்டம் பாராயணம் செய்யும்போது, அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை – சுத்தமான விரிப்பு போட்டு வைக்க்கிறோம் .🌹.

🌹ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சகல சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். 🌹

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

🌹இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார். 🌹

🌹அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்🌹

🌹கற்பின் கனலியான சீதை அக்னியில் இரண்டு முறை இறங்கியவள்🌹

🌹ஆபத்தில் சிக்கும் உயிர்களைக் காப்பாற்றுபவன் ஆச்சார்யன் என்ற குரு. ஒரு நல்ல குரு இறைவனை அடையும் வழியைச் சொல்லித் தந்து விடுவார்.🌹

🌹சீதையாகிய ஜீவாத்மாவை, ராமனாகிய பரமாத்மாவிடம் சேர்க்கும் திவ்ய பணியைச் செய்ய ஆஞ்சநேயர் கிளம்புகிறார் இலங்கை நோக்கி!🌹

🌹இதனால் தான் ஸ்ரீராமனின் அருளைப் பெற ஆஞ்சநேயரை வணங்கினாலே போதும்! ஸ்ரீராமஜெயம் என்று சொன்னாலே போதும். அவர் அங்கே வந்து நின்று விடுவார்.
ஆஞ்சநேயர் அளவற்ற உயரம் உடைய விஸ்வரூபம் எடுத்தார்.🌹

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

🌹 ஜயத்யதிபலோ ராமோ லஷ்மணஸ்ச மஹாபல

🌹 ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலித

🌹 தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மன

🌹 ஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்த்ர மாருதாத்மஸ

🌹 ராவண ஸஹஸ்ரம்மே யுத்தே ப்ரதி பலம் பவேத்

🌹 ஸலாபிஸ்து ப்ரஹரத பாத வைச்ச ஸஹஸ்ரஸ.🌹

🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕
– 🌹சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலை தாண்டுவதற்கு முன் சொன்ன வரிகள்

🌺 ஸ்ரீ ஜெய பஞ்சகம் எனப்படும்.
இதைச் சொல்லி வழிபட்டால் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும். 🌹

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

🌹கருணாமூர்த்தி ராமர் உலகிலுள்ள ரிஷிகளெல்லாம் தன்னைத் தரிசிக்க வேண்டுமென்பதற்காக, காட்டிற்கு போகக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டவனது கண்களில் கருணை சிந்துமாமே!🌹

🌹ராமபிரான் குழந்தையாக இருந்த போது, அவரை அடிக்கடி அழைத்துப் பார்ப்பாராம் தசரத மகாராஜா.
கருணை பொங்கும் அவரது கண்ணழகை ரசிக்க…சிறிது நேரம் பார்த்து விட்டு, திரும்பிப்போ என்பாராம்.
ராமனும் செல்வாராம். அப்போது பின்னழகை ரசிப்பாராம்.🌹

🌹இப்படி முன்னால் கண்ணழகு, பின்னால் நடையழகு என மாறி மாறிபகவானை அனுபவித்த பாக்கியசாலி அவர்.🌹

🌹கருணைக் கண்களுக்கு சொந்தக்காரரான ராமரின் பக்தராகியஆஞ்சநேயரை குருவாகக் கொள்ளலாம்.🌹

🌹சீதையாகிய ஜீவாத்மாவை ராமனாகிய பரமாத்மாவுடன் சேர்த்து வைத்த கருணை குருவாக அவர் விளங்குகிறார்.🌹

🌹ஆச்சார்ய, சிஷ்ய சம்பந்தம் சுந்தரகாண்டத்தில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.🌹

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌹மூச்சுத்திணறல் போன்ற சிரமப்படுத்தும் வியாதிகள் இருந்தால் அஞ்சிலே ஒன்று பெற்றான் என்ற பாடலை ஆஞ்சநேயர் படத்தின் முன்னால் அமர்ந்து பாடினால் சரியாகி விடும் என்பது நீண்டகால
நம்பிக்கை.🌹

🌹ஏனெனில், தன் புத்திரனை வணங்குவோருக்கு வாயு பகவான் நிச்சயம் கருணை செய்வார்.🌹

🌹அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

🌹 அஞ்சிலே ஒன்றாராகஆரியர்க்காக ஏகி

🌹 அஞ்சிலே ஒன்று பெற்றஅனங்கைக் கண்டு அயலார் ஊரில்

🌹 அஞ்சிலே ஒன்றை வைத்தான்!அவன் நம்மை அளித்துக் காப்பான்!🌹

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

🌹பாடலில் நிலம்,நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் இடம் பெற்றிருக்கின்றன.🌹

🌹இயற்கையின் சீற்றத்தில் இருந்து விடுபட இந்த் பாடலைப் பாடி
அனுமனை வழிபடலாம்.🌹

🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊

🌹ஆஞ்சநேய தரிசனம் கடலினும் ஆழமான கவலைகளைக் கூட கரைத்து ஆனந்தமளிக்கும் என்பதற்கு மைநாக மலையின் கதையே உதாரணம்.🌹

🌹தன்னைத் தாண்டிச் செல்பவர்கள் யாராயினும் வாயில் புகுந்து வெளியேறிச் செல்ல வேண்டும். என்றாள். 🌹

🌹இருவரும் மாறி மாறி அளவைக் கூட்ட ஆஞ்சநேயர் திடீரென தன் அளவை மிகமிகச் சுருக்கி கட்டை விரல் அளவுக்கு மாறி, அவள் காது வழியே வெளிப்பட்டார்.🌹

🌹சுரஸை தன் சுயரூபமான தேவமங்கை வடிவம் காட்டி, ஆஞ்சநேயனே! நீ மாபெரும் வீரன். நீ செல்லும் காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன், என ஆசிர்வதித்து வழியனுப்பி வைத்தாள்.🌹

🌹வீட்டில் குழந்தைகளிடம் பூதம் வருகிறது, பேய் வருகிறது, பிசாசு வருகிறது என்றெல்லாம் நாம் பயமுறுத்தக்கூடாது. அவை வந்தாலும், நாம் எதிர்த்து நிற்க வேண்டுமெனக் கற்றுத்தர வேண்டும்.🌹

🌹ஆஞ்சநேயர் சுரஸையிடம் தப்பித்துச் சென்ற இந்த வரலாறைக் குழந்தைகளுக்கு எளிய முறையில் கற்றுக் கொடுத்தால் அவர்களின் ஆற்றல் மட்டுமின்றி, கல்வியறிவும் விருத்தியடையும்.🌹
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

🌹சுந்தரகாண்டம் எந்த நோயையும் தீர்க்கும் மாமருந்து.🌹

🌹எந்த கிரக தோஷத்தையும் அது நீக்கி விடும்.🌹

🌹குழந்தைகளுக்கு தைரியத்தையும், கல்வி நலனையும் தரும்.🌹

🌹திருமணமாகாத கன்னிகள் இந்த அத்தியாயங்களைச் சேர்த்து வைத்து நாளுக்கு ஒன்று வீதம் படித்தால், ஸ்ரீராமன் போல் நல்ல மணவாளன் அமைவார்.🌹

🌹அத்தனை காண்டங்களின் சாரமும் சுந்தரகாண்டத்திலே விரவிக்கிடக்கிறது.🌹

🌹ஆஞ்சநேயர், தான் சந்திக்கும் நபர்களிடம் எல்லாம், ராமனைப் பற்றியும், சீதையைப் பற்றியும், தசரதரைப் பற்றியும் விலாவாரியாகச் சொல்கிறார்.🌹

🌹இதிலேயே பிற காண்டங்களின் சாரம் அடங்கி விடுகிறது.🌹

🌹சுந்தரகாண்டம் படித்தால் மொத்த ராமாயணத்தையும் படித்த திருப்தி ஏற்படுகிறது. பல படிப்பினைகளைத் தருகிறது.
🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

🌹 அவரது வாலை யாராலும் வெல்ல முடியாத சிலம்பக்கம்பு என்று கூறுவர். .அது சுழன்றடித்தால் அதன் அருகே நிற்கும் சக்தி யாருக்கும் கிடையாது. 🌹

🌹அதில் இருக்கும் ஒவ்வொரு ரோமமும் ராமநாமம் சொல்வதால், அதற்குள் மந்திர சக்தி வெகுவாக பரவியிருக்கிறது.🌹

🌹அவரது வாலுக்கு பூஜை செய்தால், ஸ்ரீராமஜெயத்தை எழுதிய பலன் கிடைக்கும் ..
அவரது வாலிலுள்ள ரோமங்கள் சொல்லும் ராமநாமமே எண்ணிக்கையற்றதாகும்.🌹

🌹சுந்தரகாண்டம் படிப்பதன் நோக்கமே பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வதற்குத்தான். பிரிந்தாலும், சேர்ந்திருந்தாலும் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதையே நமக்கு வலியுறுத்துகிறது.🌹

🌹ராமனும், சீதையும் பிரிந்திருந்த நிலையிலும் கூட மனதாலும், நினைவாலும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக, மிகவும் பிரியமாக இருப்பது கண்டு ஆஞ்சநேயர் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தார்.🌹

🌹பெண்கள் கஷ்ட காலத்தில் மிகுந்த தைரியத்துடன் இருக்க வேண்டும் என்பதை சுந்தரகாண்டத்தின் வரிகள் எடுத்துச் சொல்கின்றன ..🌹
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

🌹சூரியனை சுவர்ச்சலாதேவியும்,

🌹 இந்திரனை இந்திராணியும்,

🌹 வசிஷ்டரை அருந்ததியும்,

🌹 சந்திரனை ரோகிணியும்,

🌹 அகத்தியரை லோபாமுத்திரையும்,

🌹 ச்யவனரை சுகன்யாவும்,

🌹 சத்யவானை சாவித்திரியும்,

🌹 சவுதாசனை மதயந்தியும்,

🌹 கபிலரை ஸ்ரீமதியும்,

🌹 சகரனை கேசினியும்,

🌹 நளனை தமயந்தியும்,

🌹 அஜனை இந்துமதியும்

பின்தொடர்வது போலவும்,
மனமொத்த தம்பதிகளுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுவது போலவும், நானும் என் கணவனுடன் வாழ்ந்து காட்டுவேன், என்றாள்.🌹

♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻

🌹எவ்வளவு பெரிய உத்தம ஆத்மாக்களின் பெயர்களையெல்லாம் படிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது ..!🌹

🌹இவர்களது பெயரைச் சொன்னாலே மகா புண்ணியம்! குடும்ப ஒற்றுமைக்கு சுந்தரகாண்டத்தை தவிர மாமருந்து வேறு ஏதுமில்லை.🌹

🌹சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.🌹

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

🌹அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்
அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்
விடை கொடுத்து வழியனுப்பினரே!🌹

🌹வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து🌹

🌹சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.
இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.🌹

🌹அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்
இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.
கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்
சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.🌹

🌹ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க
கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்🌹

🌹அன்னையின் கண்ணீர் கொண்டு, அரக்கர் மேல் கோபம்
கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் பெயர் சொல்ல🌹

🌹வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ
வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே
இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட
அனுமானும் அன்னை ஜானகியிடம்

🌺 அனுமதி பெற்றுக் கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்

🌺 “கண்டேன் சீதையை’ என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக்
கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை🌹

🌺 மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ
அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான்🌹

🌹அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர்
அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண்
அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.
எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே🌹

🌹சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!
உன்னைப் பணிகிறோம்🌹

⚡ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ⚡
🌺 ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் 🌺

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord Hanuman
 • Recent Posts

  மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha

  மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha information *மஹாளய பட்சம்* (30.9.2023… Read More

  1 hour ago

  Sivapuranam lyrics Tamil | சிவபுராணம் பாடல் வரிகள் | Manickavasagar Tiruvasagam Tamil

  Sivapuranam lyrics Tamil - சிவபுராணம் பாடல் வரிகள் சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த… Read More

  1 hour ago

  Aadi Pooram | ஆடிப்பூரம் | Aadi pooram Festival | Aadi Pooram 2023 Date

  Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More

  2 months ago

  நம: பார்வதீ பதயே என்பது என்ன?

  ஓம் நமசிவாய... ஓம் சக்தி.... நம: பார்வதீ பதயே என்பது என்ன? சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல,… Read More

  3 months ago

  உங்கள் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful shiva mantras tamil

  சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful Shiva Mantras Tamil Powerful shiva mantras tamil |… Read More

  2 months ago

  Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

  பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

  4 months ago