கந்தசஷ்டி கவசத்தின் விளக்கம் உங்களுக்கு தெரியுமா? Kanda sashti kavacham meaning
கந்தசஷ்டி கவசத்தின் விளக்கம்
💥 கந்தசஷ்டி கவசத்தில் கவசம் என்றால் நம்மைத் தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றக் கூடிய ஒரு பொருள் என்று கூறலாம். இது முருகனின் அருளைப் பெறுவதற்காக இயற்றப்பட்டது. கந்தசஷ்டி கவசத்தை இயற்றிய ஸ்ரீதேவராய ஸ்வாமிகள் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிக எளிய முறையில் நமக்கு கந்தசஷ்டி கவசத்தை அளித்துள்ளார்.
💥 இந்த சஷ்டி கவசத்தை தினம் இருவேளை அதாவது காலையிலும், மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு ஆகியவைகளைக் குறிக்கும். நாம் அந்த திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.
💥 கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? என இந்திரன் மற்றும் எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறார்கள்.
💥 முருகன் வந்து விட்டான், இப்போது என்னை காக்க வேண்டும். பன்னிரெண்டு விழிகளும், பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னை காக்க வேண்டும். அவர் அழகை வர்ணிக்கும் போது, பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திருநீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்தின மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் முருகனை ஸ்ரீதேவராயர் வர்ணிக்கிறார்.
💥 வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்கு கதிர்வேல், நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல், மார்பிற்கு ரத்தின வடிவேல்.
💥 இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல், பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிற்றுக்கு வெற்றிவேல், சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர்வேல், ஐந்து விரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல், முப்பால் நாடியை முனைவேல், எப்போதும் என்னை எதிர்வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனையவேல் போன்ற பல்வேறு விதமான வேல்கள் நம்மைக் காக்கின்றன.
💥 அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்ல பூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி இவைகள் அனைத்தும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.
💥 அடுத்து, புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும், பாம்பும் செய்யான், பூரான், ஆகியவைகளால் ஏற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்றும் கூறுகிறார்.
💥 வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் கந்தசஷ்டி கவசத்தைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். மேலும் இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
💥 பின் சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள் என்றும் முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்றும் அப்பாடலில் கூறப்பட்டுள்ளது. எனவே நாள்தோறும் கந்தசஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றி வணங்குங்கள்!! நீங்கள் பட்ட கஷ்டம் எல்லாம் விலகி ஓடிவிடும்.
பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிருங்கள்….
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா….
கந்த சஷ்டி கவசம்
சஷ்டி கவசத்தில் புதிரான ஒரு வரியில் அபூர்வமான ஒரு ஒரு ரகசிய மந்திரம் உண்டு
கந்தசஷ்டி கவசம் பாடும்போது,
“ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும், உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும், கிலியும்சௌவும் கிளரொளி ஐயும் நிலைபெற்று என் முன் நித்தமும் ஒளிரும்” என்ற வரிகள் வருகின்றன.
இதன் பொருள் பலருக்கும் தெரியவில்லை. *ஐயும்*(ஐம்), *கிலியும்*(க்லீம்) *சௌவும்*(ஸெளம்) ஆகியவை “பீஜாக்ஷரங்கள்’ எனப்படும். இதை “பீஜம்+அட்சரம்” என பிரிப்பர்.
“பீஜம்” என்றால் “உயிர்ப்புள்ள விதை”‘.
“அட்சரம்”என்றால் “எழுத்து”.
“உயிர்ப்புள்ள எழுத்து விதைகள்” ஒன்று சேர்ந்தால் அது “மந்திரம்”ஆகிறது.
அந்த மந்திர விதைகள் நம் மனதில் தூவப்பட்டால் அது வளர்ந்து பக்தியின் , சித்தியின் , முக்தியின் , ஞானத்தின் உச்சத்தை எட்ட முடியும். பக்தியின் உச்சத்துக்குச் செல்பவன் இறைவனின் காலடியை அடைவான்.
“ஐம், க்லீம் என்ற மந்திர எழுத்துக்களும், உயிர்களை எல்லாம் உய்விக்கும் ஒளிபொருந்திய “ஸெளம்” என்ற மந்திர எழுத்தும், எழுச்சி மிகுந்த ஒளிமயமான ஐயும்…
இப்படி பல்வேறு முறைகளில் ஓதப்பெறும் ஆறெழுத்து மந்திரத்தின் (சரவணபவ, குமாராயநம) மூலாதார எழுத்துக்குரிய நாத தத்துவமாய் விளங்கும் ஆறுமுகனே! என் மனக்கண் முன், தினமும் நிலையாக நின்று ஒளிர வேண்டும். என்பது இந்த வரிகளின் பொருள்.
முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான “சரவணபவ” உடன்
“ஓம் ஐம் சரவணபவாய நம”,
“ஓம் க்லீம் சிகாயை வஷட்”,
“ஓம் ஸெளம் சுப்ரமண்யாய நமஹ”
என்று மந்திரங்களைச் சேர்த்துச் சொல்லும்போது, அதன் சக்தி மிக மிக அதிகமாகிறது. ஆனால், இதை எல்லாரும் சொல்லக்கூடாது. ஒரு குருவின் மூலம் உபதேசம் பெற்று, முறையாக சொன்னால் நினைக்க முடியாத சித்திகளை எல்லாம் முருக பெருமான் அருளினால் வாரங்களாக பெறலாம்.
இது சத்தியம். கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராயசுவாமிகள், தனது பாடல் வரிகளில் இந்த மந்திரச் சொற்களைச் சேர்த்து விட்டார்.
இந்த வரிகளைச் சொன்னால், நாம் நியமத்துடன் மேற்கண்ட மந்திரங்களைச் சொன்னதாக அர்த்தமாகிறது. நமது முக்திக்காக நம் மகான்கள் செய்த நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல!
ஜெபம் செய்ய ஆரம்பியுங்கள்
மந்திரம் இதோ:-
*******************
ஓம் ஐம் க்லீம் சௌம் சரவண பவாய குமார தேவாய நமஹ
பசு வழிபாட்டின் மகத்துவம். பசு வழிபாட்டின் மகத்துவம் - (Benefits of worshipping cow) இந்துக்களுக்குரிய வழிபாடுகளில் பசு வழிபாடு… Read More
வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More
108 Murugar Names tamil | 108 முருகர் போற்றி 108 murugar names ஓம் அழகா போற்றி ஓம்… Read More
Kandha guru kavasam lyrics கந்த குரு கவசம் பாடல் வரிகள்... Kandha guru kavasam கலியுகத் தெய்வமே கந்தனுக்கு… Read More
அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (20) நாள் 3.5.2021 செவ்வாய்க்க்கிழமை அட்சய திருதியை… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our WhatsApp group _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°°°°° *ஆனி… Read More
View Comments
அருமையான பதிவு
the meaning is simple and superb
Thank you so much sir. Your support is motivating us in a big way. Keep supporting.
நடுப்பகுதியில் வரும் ரரரர, ரிரிரிரி, டிகு, டிகு,. போன்ற எழுத்துக்கள் அல்லது அந்த சொற்றொடர் எதற்காக அப்படி படைக்கப்பட்டுள்ளது.......
அருமையான பதிவு
Thank you!
Thank you sir for explaining in detail.