Arthamulla Aanmeegam

ஒரே நாளில் ஓடியே 12 சிவத்தலங்களை தரிசிக்கும் சிவாலய ஓட்டம் | Sivalaya ottam history

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றுதான் இந்த சிவாலய ஓட்டம் Sivalaya ottam

*_ஒரே நாளில் ஓடியே 12 சிவத்தலங்களை தரிசிக்கும் சிவாலய ஓட்டம்._*

மாலையணிந்து விரதமிருந்து மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரியன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிக்கனும். அதுவும் 24 மணிநேரத்தில், சுமார் 110 கி.மீ. தொலைவுக்குட்ட தொலைவுகளிலிருக்கும் கோவில்களில் வீற்றிருக்கும் சிவனை தரிசிப்பதுதான் இந்த ஓட்டத்தின் சிறப்பு.

ஒரே நாளில் ஓடியே 12 சிவத்தலங்களை தரிசிக்கும் சிவாலய ஓட்டம்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றுதான் இந்த சிவாலய ஓட்டம். மாலையணிந்து விரதமிருந்து மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரியன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிக்கனும். அதுவும் 24 மணிநேரத்தில், சுமார் 110 கி.மீ. தொலைவுக்குட்ட தொலைவுகளிலிருக்கும் கோவில்களில் வீற்றிருக்கும் சிவனை தரிசிப்பதுதான் இந்த ஓட்டத்தின் சிறப்பு.

சிவாலய ஓட்டத்தின் வரலாறு…

மனிதத்தலையும், புலி உடம்பையும் கொண்டது புருஷாமிருகம். இவர் சிறந்த சிவபக்தர். . சிவனைத் தவிர, வேறு இறைவனை, இறைவனாய் ஏற்கமாட்டார். விஷ்ணு நாமம், இவருக்குக் கேட்க சகிக்காது! ஆனால் தானும்[ஹரியும்] ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை புருஷாமிருகத்துக்கு உணர்த்த கிருஷ்ணன் விரும்பினார் . பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமனை அழைத்தார். நடைபெறவிருக்கும் குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றிப்பெற வேண்டுமானால், அந்த புருஷாமிருகத்தின் உதவியும் தேவைப்படுகிறது. போர் வெற்றிக்காக நடத்த இருக்கும் யாகத்திற்கு அந்த மிருகத்தின் பாலானது தேவைபடுகிறது. ஆகவே, அதனை சந்தித்து அதன் உதவியைக் கோரி வருமாறு அவர் பீமனை அனுப்பி வைத்தார். கூடவே, அவனிடம் 12 ருத்ராட்சங்களைத் தந்து, தன்னுடைய கோவிந்தா, கோபாலா என்ற பெயர்களை உச்சரித்தவாறே புருஷா (புருடா)மிருகத்தை நெருங்குமாறும் சொன்னார்.

என் பெயரைக் கேட்க விரும்பாத புருஷா மிருகம், உன் மீது பாயும். நீ உடனே ஒரு ருத்ராட்சத்தை அந்த இடத்தில் போட்டுவிடு. அது ஒரு சிவலிங்கமாக மாறிவிடும். அதனைக்காணும் புருஷாமிருகம், அந்த சிவலிங்கத்துக்கு உரிய வழிபாட்டினை செய்த பிறகுதான் மறுவேலை பார்க்கும். அங்கிருந்து நீ ஓடிவிடு. பிறகு அது உன்னைத் துரத்தி வரும். அடுத்த இடத்தில் இன்னொரு ருத்திராட்சத்தைப் போடு. இதுவும் சிவலிங்கமாக மாறும். புருஷாமிருகமும் பூஜை செய்யத் தொடங்கிவிடும். இப்படியே பன்னிரண்டு இடங்களுக்கு ஓடி, ஓடி அதனை அலைக்கழித்தால் பன்னிரண்டாவது ருத்திராட்சம் விழும் இடத்தில் நான், பரமேஸ்வரனுடன் உங்கள் இருவருக்கும் காட்சி தருவேன்’’ என்று விளக்கி, பீமன் நடந்துகொள்ள வேண்டிய முறையை சொன்னார். பீமனும் அவ்வாறே செய்தான்.

அப்படி முதல் ருத்திராட்சம் விழுந்த இடம்தான் திருமலை. பன்னிரண்டாவது விழுந்த இடம் நட்டாலம். நட்டாலத்தில் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கரநாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து, சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்று புருஷாமிருகத்துக்கு மட்டுமல்ல, உலகுக்கே உணர்த்தினார். நடக்கயிருக்கும் யாகத்திற்கு தேவையான பால் தனது மடியில் இருந்து எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தது. புருஷாமிருகத்தின் உதவியும் குருக்ஷேத்திர யுத்தத்திற்குக் கிடைத்தது.

12 சிவாலயங்களும் இறைவனின் திருநாமங்களும்:

1.முஞ்சிறை திருமலை சூலப்பாணி தேவர்.

2.திக்குறிச்சி மஹாதேவர்
3.திற்பரப்பு வீரபத்திர ஜடாதரர்
4.திருநந்திக்கரை நந்தீகேஸ்வரர்
5.பொன்மனை தீம்பிலேஷ்வரர்
6.பன்றிபாகம் கிராத மூர்த்திஷ்வரர்
7.கல்குளம் நயினார் நீலகண்டேஸ்வரர்
8.மேலான்கோடு காலகாலர்
9.திருவிடைக்கோடு சடையப்பர் (ஜாயப்பர்)
10.திருவிதாங்கோடு பரசுபாணிஸ்வரர்
11.திருபன்றியோடு பக்தவச்சலேஸ்வரர்
12.திருநட்டாலம் சங்கர நாரயணர்

இந்த பனிரெண்டு தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பதே சிவாலய ஓட்டம். பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே நீர்மோர், குளிபானங்கள், விசிறி, கால் பாதத்துக்கான வலிநிவாரணி தைலம், பசியாற சாப்பாடு, ஓய்வெடுக்க தற்காலிக குடில்ன்னு வசதிப்படுத்தி கொடுக்கிறார்கள்.

கோவிந்தா… கோபாலா…சிவனே…

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord Shiva
 • Recent Posts

  அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

  அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (20) நாள் 3.5.2021 செவ்வாய்க்க்கிழமை அட்சய திருதியை… Read More

  4 weeks ago

  Today rasi palan 29/5/2022 in‌‍‌ tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை வைகாசி – 15

  Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our WhatsApp group   _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°°°°°… Read More

  11 seconds ago

  Guru Peyarchi Palangal 2022-23 Parigarangal | குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-2023

  Guru Peyarchi Palangal 2022-23 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 (Guru Peyarchi Palangal 2022-23)… Read More

  1 month ago

  Mesha rasi Guru peyarchi palangal 2022-23 | மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

  Mesha rasi guru peyarchi palangal 2022-23 குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22 Mesha rasi guru peyarchi palangal 2022-23… Read More

  1 month ago

  Rishaba rasi Guru peyarchi palangal 2022-23 | ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

  Rishaba Rasi Guru Peyarchi Palangal 2022-23 ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal… Read More

  1 month ago

  Mithuna rasi Guru peyarchi palangal 2022-23 | மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

  Mithuna rasi Guru peyarchi palangal 2022-23 மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Mithuna rasi guru peyarchi palangal… Read More

  1 month ago