வீட்டில் தெய்வ சக்திகளும், பறவைகளும்:
❂ வீட்டில் தெய்வ சக்தி அதிகம் இருந்தால் கெட்டது விலகும், நல்லது விளையும், யாருடைய கண் திருஷ்டியும், பில்லி சூனியமும், நம்மை ஒன்றும் செய்யாது. சில செயல்கள் செய்வதன் மூலம் தெய்வ சக்தி கூடும் என சில கூற்றுகள் கூறுகின்றன.
பறவைகள் :
வீட்டில் அணில், சிட்டுக்குருவி, புறா, போன்ற பறவைகள் மற்றும் விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த உயிரினங்களுக்கு தெய்வ சக்தி அறியும் ஆற்றல் உள்ளது எனவும் சொல்லப்படுகிறது.
ஜீவசக்தி :
புதிதாக குடிபோகும் வாடகை வீடு அல்லது சொந்த வீட்டிற்கு தெய்வ சக்தியினை கொண்டு வர ஜீவசக்தி கொண்ட ஏதாவது ஒரு உயிரினத்தை கொண்டு செல்ல வேண்டும். மனிதர்களை காட்டிலும் பறவைகளிடம் இந்த ஜீவசக்தியானது அதிகமாக உள்ளது.
நெற்கதிர் :
உங்கள் வீட்டு வாசலில் நெற்கதிரை கட்டி தொங்கவிடுவதால் குருவி, புறா போன்ற பறவைகள் அதை உண்ண வந்து செல்லும். இந்த சந்தர்ப்பத்தில் அவை அங்கேயே கூடு கட்டி வாழ்ந்து குஞ்சு பொரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. புறா, குருவி போன்ற பறவைகள் கூடு கட்டினால் அதனை கலைக்கக்கூடாது. தெய்வ சக்தி கொண்டு வரும் திறன் கொண்டவை இவை என்பதால், இவற்றின் கூட்டை கலைப்பது, வீட்டிற்கு கெட்ட சகுனமாக அமையலாம். இது போன்ற உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவற்றை விரட்ட வேண்டாம். இவை நமது வீட்டிற்கு வந்து போனாலே நமக்கு நல்லது நடக்கும்.
ஜீவன் என்றால், மனிதன் மட்டுமல்ல, மனிதனைத்தாண்டி சிட்டுக் குருவி போன்றவற்றிற்கெல்லாம் ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது. புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெல்லாம் சாதகமான சக்திகளை கொண்டு வருவதற்கான ஆத்மாக்கள் இவைகளெல்லாம். இது போன்ற சாதகமான சக்தியைக் கொண்டு வருவனவற்றை நாம் விரட்டக்கூடாது, இவையெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்.
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_°°°°°°°°°°°°°°°*சித்திரை - 09**ஏப்ரல் - 22 - (… Read More
# 2025-26 தமிழ் புத்தாண்டு: விசுவாவசு வருடத்தின் பஞ்சாங்கக் கணிப்பும் பலன்களும் **தமிழ் புத்தாண்டு** இந்த ஆண்டு ஏப்ரல் 14,… Read More
Panguni Uthiram 2025 11-04-2025 மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.… Read More
Panguni Uthiram Special பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள்... Panguni Uthiram special அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திரம்… Read More
Rama Navami ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான்,… Read More
வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும். நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு… Read More