Subscribe for notification
Lyrics

ஸ்ரீமஹாகணபதி மங்களமாலிகா ஸ்தோத்திரம் | Ganapathi mangala malika stotram in tamil

ஸ்ரீமஹாகணபதி மங்களமாலிகா ஸ்தோத்திரம்- | Ganapathi mangala malika stotram in tamil

நீங்கள் நினைத்த காரியங்கள் சீக்கிரம் நிறைவேறச் செய்யும் விநாயகருக்குரிய ஸ்ரீமஹாகணபதி மங்களமாலிகா ஸ்தோத்திரம் இதோ! (Ganapathi managala malika stotram)

1.ஸ்ரீ கண்டப்ரேம புத்ராய கௌரீவாமாங்க வாஸிநே
த்வாத்ரிம் ஸத்ருபயுக்தாய ஸ்ரீகணேசாய மங்களம்.

2. ஆதி பூஜ்யாய தேவாய தந்தமோதக தாரிணே!
வல்லபா ப்ராணகாந்தாய ஸ்ரீகணேசாய மங்களம்.

3. லம்போதராய ராந்தாய சந்திரகர்வாபஹாரிணே
கஜாநநாய ப்ரபவே ஸ்ரீ கணேசாய மங்களம்!!

4. பஞ்சஹஸ்தாய வந்திதாய பாராங்குபர தராயச
ஸ்ரீமதே கஜகர்ணாய ஸ்ரீகணேசாய மங்களம்!!

5. த்வை மாதுராய பாலாய ஹேரம்பாய மஹாத்மனே
விகடாயா குவாஹாய ஸ்ரீகணேசாய மங்களம்

6.ப்ருபர்னியர்ருங்காயாஜிதாய க்ஷிப்ராபீஷ்டார்த்த தாயினே
ஸித்தி புத்தி ப்ரமோதாய ஸ்ரீகணேசாய மங்களம்.

7.விலம்பியக்ஞஸுத்ராய ஸர்வ விக்னநிவாரிணே
தூர்வாதள ஸுபூஜ்யாய ஸ்ரீகணேசாய மங்களம்

8. மஹாகாயாய பீமாய மஹாஸேநாக்ரஜன்மனே
த்ரிபுராரிவோத் தர்த்ரே ஸ்ரீகணேசாய மங்களம்

9. ஸிந்தூர ரம்ய வர்ணாய நாகபத்தோ தராயச
ஆமோதாய ப்ரமோதாய ஸ்ரீகணேசாய மங்களம்

10. விக்னகர்த்ரே துர்முகாய விக்னஹர்த்ரே பரிவாத்மனே
ஸுமுகாயைகதந்தாய ஸ்ரீகணேசாய மங்களம்

11. ஸமஸ்த கணநாதாய விஷ்ணவே தூமகேதவே
த்ரியக்ஷாய பாலசந்த்ராய ஸ்ரீ கணேசாய மங்களம்

12. சதூர்திபராய மான்யாய ஸர்வவித்யாப்ரதாயினே
வக்ரதுண்டாய குப்ஜாய ஸ்ரீகணேசாய மங்களம்

13. துண்டினே கபிலாக்யாய ஸ்ரேஷ்டாய ருணஹரிணே
உத்தண்டோத்தண்டரூபாய ஸ்ரீகணேசாய மங்களம்

14. கஷ்ட ஹர்த்ரே த்விதேஹாய பக்தேஷ்ட ஜயதாயினே
விநாயகாய விபவே ஸ்ரீகணேசாய மங்களம்

15. ஸச்சிதா நந்த ரூபாய நிர்குணாய குணாத்மனே
வடவே லோக குரவே ஸ்ரீகணேசாய மங்களம்

16. ஸ்ரீ சாமுண்டா ஸுபுத்ராய ப்ரஸன்னவதனாயச
ஸ்ரீராஜ ராஜ ஸேவ்யாய ஸ்ரீகணேசாய மங்களம்

17. ஸ்ரீ சாமுண்டாக்ருபா பாத்ர ஸ்ரீக்ருஷ்ணேந்தர விநிர்மிதாம்
விபூதி மாத்ருகாரம்யாம் கல்யாணைஸ்வர்ய தாயி நீம்

18. ஸ்ரீமஹா கணநாதஸ்ய ஸ்ரீபாம் மங்கள மாலிகாம்
ய: படேக் ஸததம் வாணீம் லக்ஷ்மீம் ஸித்தி மவாப்நுயாத்

ஸ்ரீமஹா கணபதி மங்கள மாலிகா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

ஸ்ரீமஹா கணபதி மங்கள மாலிகா ஸ்தோத்ரம் பாடல் பொருள்:
1. பொருள் விளக்கம்:
ஸ்ரீநீலகண்டரின் பிரிய புத்திரனும், ஸ்ரீஅம்பாளின் இடது மடியில் வசிப்பவரும், முப்பத்திரண்டு ரூபங்கள் உள்ளவருமான ஸ்ரீமகாகணபதிக்கு மங்களம் உண்டாகட்டும்.

2. பொருள் விளக்கம்:
முதலில் பூஜிக்கத் தகுந்தவரும், தேவரும், தந்தம், கொழுக்கட்டை ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டிருப்பவரும், ஸ்ரீவல்லபா தேவியின் நாதனுமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.

3. பொருள் விளக்கம்:
தொங்குகின்ற வயிற்றை உடையவரும், சாந்தமூர்த்தியும், சந்திரனின் கர்வத்தைப் போக்கியவரும், யானை முகத்தை உடையவரும், பிரபுவுமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.

4. பொருள் விளக்கம்:
ஐந்து கைகளை உடையவரும், எல்லோராலும் நமஸ்கரிக்கத் தக்கவரும், பாசம்- அங்குசம் நன்றி விகடன் ஆகியவற்றைத் தரித்தவரும் ஸ்ரீமானும் யானையின் காதுகளை உடையவருமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.

5. பொருள் விளக்கம்:
துர்கை, சாமுண்டா தேவி இரண்டுபேரும் வளர்த்ததால், இரண்டு தாய்களை உடையவரும், சிறுவனும், ஹேரம்பனும் (ஹே- மஹேஸ்வரனின் அருகில், ரம்பதே – இருக்கிறார்) மஹாத்மாவும், விரிந்த கன்னத்தை உடையவரும், மூஞ்சூரை வாகனமாக கொண்டவருமான கணபதிக்கு மங்களம்.

6. பொருள் விளக்கம்:
ஒளியுள்ள தந்தத்தை கொண்டவரும், ஒருவராலும் ஜெயிக்க படாதவரும், பிரார்த்தித்து வேண்டிக்கொண்ட பொருளை சீக்கிரம்அளிப்பவரும், ஸித்தி- புத்தி என்ற இரண்டு மனைவிகளுக்கு சந்தோஷத்தை அளிப்பவருமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.

7. பொருள் விளக்கம்:
பூநூலை அணிந்தவரும், இடையூறுகளை நீக்குகிறவரும், அருகம்புல்லால் பூஜிக்கத் நன்றி விகடன் தக்கவருமான ஸ்ரீ கணபதிக்கு மங்களம்.

8. பொருள் விளக்கம்:
பெரிய சரீரத்தை உடையவரும், பயங்கரமானவரும் சுப்ர மணியருக்கு முன்னதாகப் பிறந்தவரும், ஸ்ரீபரமசிவனிடம் வரம் பெற்றவருமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.

9. பொருள் விளக்கம்:
குங்குமப்பூவைப் போல் அழகிய நிறத்தை கொண்டவரும், நாகத்தை வயிற்றில் கட்டிக்கொண்டவரும், சந்தோஷ ரூபியும், ஆனந்தரூபியுமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.

10. பொருள் விளக்கம்:
மாறுபாடான முகம் கொண்டவரும், விக்னங்களை போக்கு கின்றவரும், சிவபுத்ரனும் மங்களமான முகத்தை உடையவரும், ஒரு தந்தத்தை உடையவருமான ஸ்ரீ கணபதிக்கு மங்களம்.

11. பொருள் விளக்கம்:
எல்லா கணங்களுக்கும் தலைவரும், எங்கும் வியாபித்தவரும், பாபிகளுக்கு இடையூறின் உருவமாக இருப்பவரும். முக்கண்ணனும் நெற்றியில் சந்திரனை தரித்தவருமான ஸ்ரீ கணபதிக்கு மங்களம்.

12. பொருள் விளக்கம்:
சதுர்த்தி திதிக்கு நாயகனும், பூஜிக்கத் தக்கவரும். எல்லா வித்தைகளையும் கொடுப்பவரும், வளைந்த நன்றி விகடன் துதிக்கையை உடைய வரும், குள்ளமாக இருப்பவருமான ஸ்ரீ கணபதிக்கு மங்களம்.

13. பொருள் விளக்கம்:
நர்த்தனம் செய்கின்றவரும், கபில கணபதி என்ற பெயரை உடையவரும், கடனைப் போக்குகிறவரும், மிகப் பயங்கரமான ரூபமுடையவருமான ஸ்ரீ கணபதிக்கு மங்களம்.

14. பொருள் விளக்கம்:
கஷ்டங்களைப் போக்குகின்றவரும், யானை, மனிதன் ஆகிய இரண்டு உருங்களாக இருப்பவரும், பக்தர்கள் கோரிய ஜயத்தை அளிப்பவரும், விநாயகரும், ப்ரபுவுமான ஸ்ரீ கணபதிக்கு மங்களம்.

15. பொருள் விளக்கம்:
ஸத், சித், ஆனந்தம் இந்த உருவாக இருப்பவரும் முக்குணம் அற்றவரும், கல்யாண குணங்கள் நிரம்பியவரும், பிரும்மசாரி ரூபியும் உலகங்களுக்கு ஆசார்யருமான கணபதிக்கு மங்களம்.

16. பொருள் விளக்கம்:
ஸ்ரீசாமுண்டா தேவியின் மங்கள புத்திரரும், யானை முகத்தை உடையவரும், ஸ்ரீ குபேரன் முதலியவர்களால் சேவிக்கத் தகுந்தவருமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.

17,18 பொருள்விளக்கம்:
ஸ்ரீதுர்காதேவியின் கருணைக்குப் பாத்திரமான… ஸ்ரீக்ருஷ்ணேந்திந்ராள் என்ற ஸந்நியாஸியால் செய்யப்பட்டதும், அஷ்ட ஸித்திகள் மற்றும் சப்த மாத்ருகைகளின் பிரசாதத்தையும் அளிப்பதால் ரமணீயமாக உள்ளதும், கல்யாணங்களையும் ஐஸ்வர்யங்களையும் அளிக்கக்கூடியதும், மங்களத்தை அளிக்கக் கூடியதுமான ஸ்ரீமஹா கணபதியின் மங்கள மாலிகா ஸ்தோத் திரத்தை எவன் எப்போதும் படிக்கிறானோ, அவன் சகல சௌபாக்கியங்
களையும் அடைவான்.

மகாகணபதியாக மக்களுக்கு அருள்பலிக்கும் ஸ்ரீ மஹா கணபதியின் இந்த மங்கள ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் துதித்து விட்டு செல்வது நல்லது.

புதன் மற்றும் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி இந்த ஸ்தோத்திரத்தை துதிப்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படாது.

திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். உடலில் ஏற்பட்டிருக்கும் நோய்கள் முற்றிலும் நீங்கி உடல் நலம் மேம்படும்.

ஸ்ரீசாமுண்டா தேவியின் மங்கள புத்திரரும், யானை முகத்தை உடையவரும், ஸ்ரீ குபேரன் முதலியவர்களால் சேவிக்கத் தகுந்தவருமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.

ஸ்ரீதுர்காதேவியின் கருணைக்குப் பாத்திரமான ஸ்ரீக்ருஷ்ணேந்திந்ராள் என்ற ஸந்நியாஸியால் செய்யப்பட்டதும், அஷ்ட ஸித்திகள் மற்றும் சப்த மாத்ருகைகளின் பிரசாதத்தையும் அளிப்பதால் ரமணீயமாக உள்ளதும், கல்யாணங்களையும் ஐஸ்வர்யங்களையும் அளிக்கக்கூடியதும், மங்களத்தை அளிக்கக் கூடியதுமான ஸ்ரீமஹா கணபதியின் மங்கள மாலிகா ஸ்தோத்திரத்தை எவன் எப்போதும் படிக்கிறானோ, அவன் சகல சௌபாக்கியங்களையும் அடைவான் என்பது உறுதி.

செயல்படுவதற்காகவே பிறந்தவன் மனிதன்.

அப்படி மனிதன் தனது மற்றும் தன்னை சார்ந்தவர்களின் மேன்மைக்காக பல விதமான காரியங்களை மேற்கொள்கிறான்.

அவற்றில் அவன் வெற்றி பெறுவதால் மட்டுமே அவனுக்கு நன்மைகள் கிடைக்கும்.

மனிதர்களின் எத்தகைய முயற்சிகளும் வெற்றியடையவும், அவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படவும் முழு முதற் கடவுளான விநாயகர் அருள் வேண்டும்.

108 விநாயகர் போற்றி

விநாயகர் அகவல்

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    அன்பெனும் பிடியுள் பாடல் வரிகள் | Anbenum pidiyul lyrics in tamil

    Anbenum pidiyul lyrics in tamil வள்ளலாரின் புகழ் பெற்ற பாடல் வரிகள் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும்… Read More

    6 hours ago

    சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்

    சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்!!.. சென்னைக்கு அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் நவக்கிரக ஸ்தலங்களை அமைத்துள்ளனர். சென்னைக்கு அருகிலுள்ள… Read More

    4 days ago

    தை அமாவாசை தினத்தின் சிறப்பு | thai amavasai special

    தை அமாவாசை முன்னிட்டு  செய்ய வேண்டிய பித்ரு கடமைகள் thai amavasai special...   அமாவாசை தினம் நமது சமயத்தில்… Read More

    2 weeks ago

    தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி?

    தைப்பூசம் தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி? 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔… Read More

    2 weeks ago

    Today rasi palan 9/2/2025 in tamil | இன்றைய ராசிபலன் சனிக்கிழமை தை – 26

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *தை - 27*… Read More

    53 minutes ago

    தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் – தைப்பூச விரதமுறை | Thaipusam 2025

    Thaipusam 2025 - தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் தைப்பூசம் / Thaipusam என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும்… Read More

    2 weeks ago