மாசி மாத சங்கடஹர சதுர்த்தி | maasi month sangada hara chaturthi

மஞ்சள்கயிற்றை மாற்றி சுமங்கலி வரத்தை பெறுங்கள்

28-02-2024

*மகிமை நிறைந்த மாசி சங்கடஹர சதுர்த்தி விரதம்.. நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்*

பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. அதிலும், ஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும்.

*சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி ஆகும். பௌர்ணமிக்கு அடுத்ததாக நான்காம் நாள் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது*

சங்கடஹர சதுர்த்தி விரதமுறை மற்றும் பலன்கள்

சதுர்த்தி விரத பலன்கள்

சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விரதமிருந்து வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் விலகிவிடும். அதுவும் மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று இருக்கும் விரதம் துன்பங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை உடையது.

சங்கடஹர சதுர்த்தி விரதத்தினை தொடங்குபவர்கள் மாசி சங்கடஹர சதுர்த்தியிலிருந்தோ, ஆவணி சங்கடஹர சதுர்த்தியிலிருந்தோ ஆரம்பித்து கடைபிடித்து வந்தால் விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறலாம்.

மாசியில் தாலிக்கயிறு

இம்மாதத்தில் சக்தி சிவத்தோடு ஐக்கியமாவதால் இம்மாதத்தில் திருமணம் நடத்தப் பெற்ற தம்பதியர்கள் நீண்ட ஆயுளோடு நிறைந்த திருமண வாழ்வினைப் பெறுவர். இதனை மாசிக்கயிறு பாசி படியும் என்ற பழமொழி மூலம் உணரலாம். திருமணமானப் பெண்கள் இம்மாதத்தில் தாலிக்கயிற்றினை மாற்றிக் கொள்கின்றனர்.

சனி தோஷம் விலகும்

இவ்விரதத்தை கடைபிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் குறையும்.

*மஹா சங்கடஹர சதுர்த்தியான அன்று விரதமிருந்து.. மஞ்சள் கயிற்றை மாற்றி.. காலம் முழுவதும் சுமங்கலியாக வாழும் வரத்தைப் பெறுங்கள்*

ஒன்பது கோளும் பாடல் வரிகள்

விநாயகர் துதிகள் பாடல் வரிகள்

சங்கடஹர சதுர்த்தி விரதமுறை