Categories: Lyrics

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா | idhayam endrum unakkaga ayyappa lyrics in tamil

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ….
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா

நிதமும் உந்தன் நாமம் சொல்வேன் ஐயப்பா
உனை நினைந்து நினைந்து உருகிட வேண்டும் ஐயப்பா

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ….
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா

கேரள பாண்டிய இராஜகுமாரா சரணம் ஐயப்பா …. ஐயப்பா
நாரண சங்கரன் மகிழும் செல்வா சரணம் ஐயப்பா .. …ஐயப்பா

ஆரதமுதம் நீ பேரழகன் நீ
ஆரியங்காவில் வாழ்பவனும் நீ

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ….
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா

அபயம் தந்திட சபரிமலை உண்டு ஐயப்பா
ஆறுதல் கூறிட உன் அருள் உண்டு ஐயப்பா

வேதமும் நாடும் வினைகளும் ஓடும்
எங்கள் நாவும் பாடும் ஞானமும் கூடும்

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ….
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா

பண்ணமுதம் தந்தவனே சரணம் ஐயப்பா …. ஐயப்பா
கண்ணழகு கொண்டவனே சரணம் ஐயப்பா …. ஐயப்பா

விண்ணவரின் கண்மணியே சரணம் ஐயப்பா
எண்ணமதில் வந்திடுவாய் சரணம் ஐயப்பா

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ….
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா …

ஹரிஹர சுதனே ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
ஹரிஹர சுதனே ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
ஹரிஹர சுதனே ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord Ayyappa
  • Recent Posts

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More

    4 weeks ago

    ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

    🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More

    4 weeks ago

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More

    1 month ago

    Guru Peyarchi Palangal 2023-24 Parigarangal | குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-2024

    Guru Peyarchi Palangal 2023-24 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 (Guru Peyarchi Palangal 2023-24)… Read More

    1 month ago

    Mesha rasi Guru peyarchi palangal 2023-24 | மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

    Mesha rasi guru peyarchi palangal 2023-24 குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-24 Mesha rasi guru peyarchi palangal 2023-24… Read More

    1 month ago