Categories: Arthamulla Aanmeegam

உலக வரலாற்றில் முதன்முறையாக 64 சிவ அவதாரங்களின் மந்திர வித்தை | 64 Siva Avathar

64 சிவ அவதாரங்களின் மந்திர வித்தை

உலக வரலாற்றில் முதன்முறையாக 64 சிவ அவதாரங்களின் மந்திர வித்தை (64 Siva avathar)

உலக ஹிந்து மத வரலாற்றில் முதன்முறையாக இதுவரை யாரும் கற்பிக்காத எவரிடமும் இல்லாத மிக மிக ரகசியமான மந்திர சாஸ்திர சக்ரவர்த்தி ராஜராஹவன் உபதேசித்து வழங்கும்
64 சிவ அவதாரங்களின் மந்திர யந்திர முலிகை அஞ்சன வித்யை ஆவாஹனம் பூஜை வழிபாடு பயிற்சி

பலகோடி ஜென்மங்கள் புண்ணியம் செய்திருந்தாலும் சிவனின் முழு அருள் இருக்கும் ஒருவனால் மட்டுமே இந்த ரகசியத்தை அறிந்து 64 சிவ அவதாரங்களையும் பூஜித்து வழிபட முடியும் இதனுடைய பலன்கள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சொல்லாலும் எழுத்தாலும் சொல்லமுடியாது ஈரேழு பதினான்கு லோகங்களிலும் இந்த 64 சிவ அவதாரங்களை பூஜிப்பவனே புண்யசாலி அவனே தெய்வ சக்தி உள்ளவன் அவனே உலகை ஆள்பவன் உலகை வெல்பவன் அவனின் பலகோடி தலைமுறைகளும் புண்ணியம் பெறுவார்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள் சிவலோகத்தை அடைவார்கள்

லிங்கமூர்த்தி

லிங்கமூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து
காவிரி தீர்த்தால் வில்வத்தால் சிவனைப் பூஜித்தால் நம்மிடமுள்ள மும்மலங்களை அகற்றும் வல்லமையுடையவர் இவர். பிரமஹத்தி தோஷம். நீங்கும் வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம் சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும்.

இலிங்கோற்பவ மூர்த்தி

இலிங்கோற்பவ மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து லிங்கோத்பவரை வணங்கினால் நாம் செய்த அனைத்துக் குற்றங்களும் மறைந்து விடும். இனி குற்றம் செய்யும் எண்ணம் வராது. நமக்கு வேண்டிய அனைத்தையும் அளிக்க வல்லவர்.. மேலும் இவரை வணங்க சூரியகிரகணத்தால் உண்டாகும் அனைத்து பிரச்சினைகளும் விலகும். மேலும் வெள்ளை நந்தியாவர்த்தம் மலரால் அர்ச்சனையும், சாதம் அல்லது பால் நைவேத்தியமும் பௌர்ணமி அன்று கொடுக்க சித்தம் தெளிவடையும் .

முகலிங்க மூர்த்தி

முகலிங்க மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து பிரதோஷ காலங்களில் தும்பைப் பூ அர்ச்சனையும், சுத்த அன்னம் நைவேத்தியமும் செய்ய நல்வாழ்வு கிட்டும் என்பது உறுதி. மேலும் முகலிங்க மூர்த்தி மிகுந்த சக்தி வாய்ந்தவர். அவரை சக்கரையால் அபிஷேகம் செய்தால் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்

மகா சதாசிவ மூர்த்தி

மகா சதாசிவ மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இவரை வணங்கினால் சிவ தரிசனம் விரைவில் கைகூடும் மேலும் கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் கருப்பஞ்சாறால் இவரை அபிசேகம் செய்தால் கடும் காய்ச்சல் நீங்கி தேகம் ஆரோக்கியம் பெறும்

உமா மகேச மூர்த்தி

உமா மகேச மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இளநீர், பால், தேன் அபிசேகம் செய்ய கடுமையான குஷ்ட நோயும் தீரும். இறைவனின் மற்றொரு திருநாமம் பூமிநாதர் என்பதாகும். பெயர்க்கேற்றார் போல் எந்த ஒரு தொழில் செய்யும் முன்பும் இந்த பூமிநாதரை வணங்கினால் தொழில் சிறப்படையும். புதன் தோறும் சிவப்பு அல்லிப்பூவால் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் செய்து வழிபட்டால் குடும்ப வாழ்வில் எந்தவொரு பிரச்சனையும் வராது.

சுகாசன மூர்த்தி

சுகாசன மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து சுகாசன மூர்த்தியை மனமுருக வேண்டி அர்ச்சிக்க வியாழன் சார்ந்த அனைத்து குறைகளும் தீரும். மேலும் தொழில் துறை நிர்வாகம் நல்ல முறையில் நடைபெற இவர் நமக்கு அருள்புரிவார். வில்வ அர்ச்சனையும், கற்கண்டு நைவேத்தியமும் சோமவாரங்களில் செய்தோமானால் நிர்வாகம் செழிப்பாகும். சிவபெருமானுக்கு உகந்த அபிசேகம் பலாப்பழத்தால் செய்யப்படுகிறது. இதனால் யோக சித்திகள் கைகூடும்

உமேச மூர்த்தி

உமேச மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வணங்கினால் உமேசமூர்த்தியை காவிரி நீரால் அபிசேகம் செய்தால் குடும்ப வாழ்வு இன்பமயமானதாக அமைய அருள்புரிவார்.இவரை திங்கள் அல்லது புதன் கிழமைகளில் செந்தாமரைப் பூவினால் அர்ச்சனையும், நெய்யன்னத்தால் நைவேத்தியமும் செய்ய கடனில்ல பெருவாழ்வு வாழலாம்.நன்னீர் அபிசேகம் செய்ய அகஉடல் தூய்மையடையும்

சோமாஸ்கந்த மூர்த்தி

சோமாஸ்கந்த மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வணங்கினால் உடல் வலிமை, அறிவு விருத்தி , தந்தைக்கே உபதேசிக்கும் அளவு புத்தி வலுவடையும். மேலும் திங்கள், வியாழக்கிழமைகளில் வில்வார்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் கொடுக்க குரு ஸ்தானம் விரைவில் கைகூடும். எழுத்தாளர்களுக்கு திறமை வளரும்.

சந்திரசேகர மூர்த்தி

சந்திரசேகர மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வழிபட பித்தளையும் வைரமாகும். மேலும் வெண்தாமரை அர்ச்சனையும், நெய்யன்ன நைவேத்தியமும் சோமவாரம், பௌர்ணமி தினங்களில் கொடுக்க அறிவு வளர்ச்சி மிகுவதோடு நினைவாற்றல் பெருகும். மேலும்சிவபெருமானுக்கு குளிர்ந்த சந்தனத்தால் அபிசேகம் செய்தால் நற்புகழ் அடையலாம்.

இடபாரூட மூர்த்தி

இடபாரூட மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வணங்க உடல் நோய் தீரும், குழந்தை பாக்கியம் உண்டாகும், திருமந்திர பொருள் விளங்கும். அருகம்புல் அர்ச்சனையும், தாம்பூல நைவேத்தியமும் பிரதோஷ காலங்களில் கொடுக்க நினைத்தது நடைபெறும். உயர்பதவி கிட்டும். சிவனை வில்வ நீரால் அபிசேகம் செய்ய அடுத்த பிறவியிலும் சிவனின் அருள் பரிபூரணமாய் கிடைக்கும்

இடபாந்திக மூர்த்தி

இடபாந்திக மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இடபாந்திக மூர்த்தியை வணங்குவோமானால் ஊழிக்காலத்தில் நம்முடைய ஆன்மா சிவபெருமானை தஞ்சமடையும் இவருக்கு திங்கள்,வியாழக்கிழமைகளில் வெண்தாமரை அர்ச்சனையும், பசுவின் பால் நைவேத்தியமும் கொடுக்க குரு தோஷ நிவர்த்தியுண்டாகும். மேலும் சிவபெருமானுக்கு வில்வ நீரால் அபிசேகம் செய்தால் மறுபிறவியிலும் சிவனருள் கிடைக்கும்.

புஜங்கலளித மூர்த்தி

புஜங்கலளித மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வழிபட ராகு கிரகத் தொல்லைகள் விலகும், அவரது பார்வை நம்மீது பட்டு நற்பலன்களைக் கொடுக்கும். இவருக்கு நீலமலர் அர்ச்சனையும், பால், பழம், தேன் கொண்டு நைவேத்தியமும் சோமவாரங்களில் கொடுக்க சர்ப்ப கால தோஷம் விலகும். பாம்பு பயம் நிவாரணம் பெறும். இவர்களுக்கு மஞ்சள் நீரால் அபிசேகம் செய்தாலும் சர்ப்பகால, ராகு தோஷம் விலகும் என்பது கண்கூடாகும்.

புஜங்கத்ராச மூர்த்தி

புஜங்கத்ராச மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வணங்கினால் ராகு தோஷம் நிவர்த்தியடையும். இவருக்கு சோமவாரம் அல்லது குருவாரத்தில் வில்வார்ச்சனையும், சம்பா அன்ன நைவேத்தியமும் கொடுக்க கடன் தொல்லை தீரும். சிவபெருமானை மஞ்சள் நீரால் அபிசேகம் செய்ய ராகு கால தோஷம், சர்ப்ப கால தோஷம் விலகும்.

சந்த்யாந்ருத்த மூர்த்தி

சந்த்யாந்ருத்த மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இவரை வணங்குவோமானால் நம் தொழில்களை காப்பதுடன் பலகலைகளில் சிறப்பு பெற உதவுவார். செந்தாமரையால் அர்ச்சனையும், தேங்காய் சாத நைவேத்தியமும் திங்கள், புதன் கிழமை மாலையில் செய்ய தடங்கள் அகழும், விரோதிகள் ஒழிவர். நன்மை பாராட்டுவர். பன்னீரால் அபிசேகம் செய்தால் கல்வியறிவு மேன்மையடையும்

சதா நிருத்த மூர்த்தி

சதா நிருத்த மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து பூஜிக்க கவியாற்றுவதற்கும், வாதப் போர்புரிவதற்கும், தடைபெற்ற தேர் திருவிழா மறுபடியும் நடைபெறவும், இவரை வணங்கினால் தடை நீங்கி நடைபெறும் இவருக்கு முல்லைப்பூ அர்ச்சனையும், வெண்பொங்கல் நைவேத்தியமும் திங்கள், வியாழக் கிழமைகளில் செய்ய விரோதியும் நண்பனாவான்.

சண்ட தாண்டவ மூர்த்தி

சண்ட தாண்டவ மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வணங்கி சிவ தியானம் செய்தால் தாண்டவ ஒலியைக் கேட்கலாம். முல்லைப்பூ அர்ச்சனையும், வெண்சாத நைவேத்தியமும் சோமவாரங்களில் கொடுத்தோமானால் நடனம், பாட்டு, நட்டுவாங்கம், என அனைத்தும் கைவரும். மேலும் கும்பநீரால் அபிசேகம் செய்து வழிபட்டால் பிறவிப் பயன் பெறமுடியும்.

கங்காதர மூர்த்தி

கங்காதர மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து மல்லிப்பூ அர்ச்சனையும், பாலில் செய்த இனிப்பு பண்ட நைவேத்தியமும் சோமவாரத்தில் சந்தியா காலத்தில் செய்தோமானால் செல்வசெழிப்பும் இனியோரு பிறவி இல்லா நிலையும் ஏற்படும். கங்கை நீரை வீட்டில் கலசத்தில் வைத்து வழிபட லஷ்மி கடாட்சம் கிடைக்கும்.

கங்கா விசர்ஜன மூர்த்தி

கங்கா விசர்ஜன மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வெண்தாமரை அர்ச்சனையும், எள்ளோதரை நைவேத்தியமும் அமாவாசை, திங்கள் கிழமைகளில் செய்தோமானால் பிதுர் தோஷம் சரியாகும். அவர்கள் சொர்க்கம் செல்வர் கங்கா நீரை வெள்ளிக்கலசத்தில் வைத்து பூஜிக்க குபேர சம்பத்து கிட்டும்

திரிபுராந்தக மூர்த்தி

திரிபுராந்தக மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து அபிசேகமும் வில்வார்ச்சனையும் செய்ய பகைவர் பகை ஒழிந்து நண்பராவார்கள். சூலை நோய் இருப்பின் இந்த சுவாமியை வழிபட நோய் குறைந்து உடல் நலம் சீராகும். சிவபெருமானுக்கு திருமஞ்சனத்தூள் அபிசேகம் செய்ய எவ்வகை நோயும் குணமடையும்

கல்யாண சுந்தர மூர்த்தி

கல்யாண சுந்தர மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து மல்லிகைப்பூ அர்ச்சனையும், சர்க்ககரைப் பொங்கல் நைவேத்தியமும் திங்கள், குருவாரங்களில் கொடுக்க திருமணத்தடை விலகும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். மேலுமொரு சிறப்பாக கல்யாண சுந்தரருக்கு ரோஜாமாலை அணிவித்துப் பூச்செண்டு கொடுத்தால் கல்யாணம் இளம்பெண்களுக்கு கூடி வரும்.

அர்த்த நாரீஸ்வர மூர்த்தி

அர்த்த நாரீஸ்வர மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து பூஜிக்க கணவன் – மணைவி இருவரும் ஒருவர்க்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி நிலவவும் இந்த மூர்த்தியை வணங்கினால் கைகூடும். வில்வ, தும்பை, கொன்றை மலர் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் (அல்லது) நெய்யன்ன நைவேத்தியமும், திங்கள், பிரதோஷ, பௌர்ணமி தினங்களில் கொடுக்க பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் . சிவபெருமானுக்கு பசும்பால் அபிசேகம் செய்தால் குடும்பம் ஒற்றுமையுடன் காணப்படும்.

கஜயுக்த மூர்த்தி

கஜயுக்த மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து கஜசம்ஹார மூர்த்திக்கு அபிசேக ஆராதனை செய்ய சனீஸ்வர தோஷம் விலகும். ஏழரை சனியின் கொடுமையில் இருந்து தப்பிக்கலாம். 12 அமாவாசை காலையில் தரிசனம் பார்த்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். அருகம்புல் அர்ச்சனையும், பாயாச நைவேத்தியமும் சோம வாரங்களில் கொடுக்க எதிரி தொல்லை தீரும். எழுமிச்சை சாறு அபிசேகம் செய்தால் மரண பயம் தீரும்.

ஜ்வராபக்ன மூர்த்தி

ஜ்வராபக்ன மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து தீராத சுரம் கண்டோர் இந்த வடிவை வணங்க சுரம் குறையும். இவ்வுருவமே ஜ்வராபக்ன மூர்த்தி யாகும். ஜ்வர தேவர் ஆவார். வெப்ப நோயின் தீவிரம் குறையும். வெள்ளை அல்லி அர்ச்சனையும், சுக்கு கசாய நைவேத்தியமும் புதன் சோம வாரங்களில் கொடுக்க நோய் தீரும். மேலும் இறைவனுக்கு பசுந்தயிர் அபிசேகம் செய்ய சுரம் குறையும்.

சார்த்தூலஹர மூர்த்தி

சார்த்தூலஹர மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வழிபட பில்லி, சூனிய செய்வினை முறியும். ஏழு பிரதோஷம் இறைவனுக்கு அபிசேக ஆராதனை செய்ய இழந்த சொத்துக்கள் மீண்டும் கைவரும். தும்பை, வில்வார்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் திங்கள், வியாழக் கிழமைகளில் செய்ய மோட்சம் கிடைக்கும் இம்மூர்த்திக்கு ருத்திராட்ச அபிசேகம் செய்ய செய்வினை அகலும் முடியும்.

பாசுபத மூர்த்தி

பாசுபத மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வணங்கினால் பிறவிப் பெருங்கடல் நீந்தி இறைவனை அடையலாம்.சிவப்பு நிற மலர் அர்ச்சனையும், மஞ்சளன்ன நைவேத்தியமும், வியாழன், செவ்வாய் கிழமைகளில் கொடுக்க எதிரி நீங்குவர், கடன் தொல்லைத் தீரும். கும்பநீரால் அபிஷேகம் செய்ய பிறவிப் பயன் எய்துவர்.

கங்காள முர்த்தி

கங்காள முர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து சுகாசனமூர்த்தியை வணங்கி அர்ச்சித்தால் வியாழன் தொடர்புடைய தோஷங்களும் தீரும். தொழில் வளர்ச்சி பெருகும். நல்ல நிர்வாகத்திறமை வெளிப்படும். இவருக்கு நந்தியவர்த்த அர்ச்சனையும், சித்திரான்ன நைவேத்தியமும் பௌர்ணமி சோம வாரங்களில் கொடுக்க கேது தோஷம் தீரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தர்பை நீரால் அபிசேகம் செய்தால் யோக சித்தி கிடைக்கும்.

கேசவார்த்த மூர்த்தி

கேசவார்த்த மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும், புதன் அல்லது சோமவாரங்களில் செய்ய மறுபிறவியிலும் மோட்சம் கிட்டும். உடல்ஊனமுற்ற சாதுக்களுக்கு அன்னதானம் செய்துவிட்டு இறைவனை வணங்கினால் கடுமையான நோய் விலகும்

பிட்சாடன மூர்த்தி

பிட்சாடன மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இவரை வணங்க பேரின்ப வழியையும், விருப்பு வெறுப்பற்ற வாழ்க்கையயும் அடையலாம். சந்நியாசிகளும், முனிவர்களும், ரிஷிகளும் இந்தப் பிட்சாடனரை மனப்பூர்வமாக வணங்கினால் சித்தி கிடைக்கும். மேலும் வில்வார்ச்சனையும், தேங்காய் நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் செய்ய எதிரிகளின் கர்வம் அழியும். யாரையும் வெல்லும் வசியமுண்டாகும். இந்த பிட்சாடனமூர்த்திக்கு அன்னாபிசேகம் செய்ய பேறு பெற்ற பெருவாழ்வு சித்திக்கும்.

சிம்ஹக்ன மூர்த்தி

சிம்ஹக்ன மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து சரபமூர்த்திக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றி சகஸ்ரநாமம் சொல்ல திருமணம் கைகூடிவரும். தடைகள் விலகிடும். அவர் முன்பு சரப யாகம் செய்தால் எதிரிகள் விலகிடுவர். ஞாயிற்றுக்கிழமை ராகுகாலங்களில் இங்குள்ள சரப மூர்த்தியை வழிபட்டால் நினைத்து நடைபெறுகிறது, பதவி உயர்வு கிடைக்கிறது குடும்ப அமைதி பெருகுகிறது. இவர்க்கு திராட்சை ரச அபிசேகம் செய்ய திடவான உடல்வாகு கிடைக்கும். செந்நிற தாமரைமலர் அர்ச்சனையும், பானக நைவேத்தியமும் பிரதோஷம், திங்ககிழமையில் கொடுக்க வெற்றி, தடை அகன்று விடும். சந்தோஷமான அமைதியான குடும்ப வாழ்வு ஏற்படும்.

சண்டேச அனுக்கிரக மூர்த்தி

சண்டேச அனுக்கிரக மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வணங்க சண்டேசப் பதவியை அளிக்கும் வல்லமை இவர் ஒருவருக்கே உண்டு. சண்டேஸ்வரனை வணங்கினால்தான் சிவ வழிபாடே முழுமையடையும். இவரை வணங்க மனம் ஒருமைப்படும். வில்வார்ச்சனையும் வெண்சாத நைவேத்தியமும் பிரதோஷம், சோமவாரங்களில் கொடுக்க நல்லறிவு, நல்லெண்ணம் வெளிவரும். மேலும் இம்மூர்த்தியை பஞ்சகவ்யம் கொண்டு வழிபட ஆன்மாவானது தூய்மையடையும்.

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இருபத்தி நான்கு நெய் விளக்கு ஏற்ற திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும். வெண்தாமரை அர்ச்சனையுமும் தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க நினைவாற்றல் பெருகும்.இந்த தட்சிணாமூர்த்தி முன் நீர் ஆரத்தி எடுத்து தீபம் ஏற்ற தடைபெற்ற திருமணம் நடைபெறும், புத்திரப் பேறு கிடைக்கும்.

யோக தட்சிணாமூர்த்தி

யோக தட்சிணாமூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வணங்கவும் இவர் கிரகங்களுக்கே அதிபதியாவார். இவர் யோக நிலையில் காணப்படுவதால் பெரும்பலம் பொருந்தியவர். வியாழன்தோறும் விரதமிருந்து இவரை வணங்க பிறவித் துன்பம் தீரும். வெண்தாமரை அர்ச்சனையும், கொண்டைக்கடலை (அ) தயிரன்ன நைவேத்தியமும் வியாழன் தோறும் கொடுக்க கட்டுப்பாடாக, வாழ்க்கை அமையும். பச்சைகற்பூர நீரால் அபிசேகம் செய்ய யோக சித்திகள் வாய்க்கப்பெறும்.

வீணா தட்சிணாமூர்த்தி

வீணா தட்சிணாமூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இவரை வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார். வியாழக்கிழமைகளில் இவர்க்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும். வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும். மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.

காலந்தக மூர்த்தி

காலந்தக மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் என அனைவரும் எமபயம் நீங்க வழிபடுகிறார்கள் செந்தாமரை மலர் அர்ச்சனையும், தேங்காய், மஞ்சள், பூ நைவேத்தியமும் வெள்ளிக்கிழமைகளில் கொடுக்க ஆயுள் அதிகரிக்கும். எமபயம் நீங்கும்.

காமதகன மூர்த்தி

காமதகன மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வணங்கினால் அளவுக்கதிகமான காம உணர்வு அடங்கும். சிவத்தில் ஐக்கியமாக விரும்பும் ஆன்மாக்கள் இவரை வணங்க, காமம் தலைதூக்காது. இவர்க்கு தேனாபிசேகமும், சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொடுக்க உடன் பிறந்தோருடைய அன்பு மேலோங்கும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

இலகுளேஸ்வர மூர்த்தி

இலகுளேஸ்வர மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து அர்ச்சனை செய்ய திருமணத்தடை விலகும். இவர்க்கு
மகாவில்வார்ச்சனையும், முக்கனிப்படையல் நைவேத்தியமும் புதன்கிழமைகளில் செய்ய மும்மலம் மறைந்தோடும் பதவியை தக்க வைக்க முடியும்.

பைரவ மூர்த்தி

பைரவ மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து தேய்பிறை அஷ்டமியில் செவ்வரளியால் சகஸ்ரநாமம் தொடர்ந்து ஆறு தேய்பிறைகள் கூற புத்திரபாக்கியம் கிடைக்கும். பன்னிரெண்டு தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் சகஸ்ரநாமம் கூறி ஜென்ம நட்சத்திரர் அர்ச்சித்து பூந்தியை நைவேத்தியமாகக் கொடுக்க சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டிற்க்கு வரும். தேனாபிசேகம் செய்து நெய்விளக்கிட்டு உளுந்தவடை சாற்றி ஜென்ம நட்சத்திரத்தில் வழிபட வியாபாரம் செழிக்கும், மேலும் நாயுருவி இலை அர்ச்சனையும், சுத்த அன்னம் வெண்ணிற பசுவின் பால் கொண்டு சனிதோறும் நைவேத்தியம் கொடுக்க யமபயம் நீங்கி சுகம் உண்டாகும்.

ஆபத்தோத்தாரண மூர்த்தி

ஆபத்தோத்தாரண மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வணங்கவும் ஆபத்திலிருந்து காக்கும் மூர்த்தி ஆபத்து சமயங்களில் இவரை வேண்ட, இவர் உதவுவார் இவர்க்கு எருக்கு, தும்பைப்பூ, முல்லை அர்ச்சனையும், புனுகு அபிசேகமும் வெள்ளியிரவு 12 மணியளவில் செய்தோமானால் வேண்டிய பலன் உடனே கிடைக்கும் என்பது உறுதி.

வடுக மூர்த்தி

வடுக மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து ஏழரை சனியின் துன்பம் அகல சனிதோறும் வடுகர் முன்பமர்ந்து சகஸ்ரநாமம் சொல்ல வேண்டும். நாள்பட்ட வழக்குகள் வெற்றிபெற பூஜையுடன் தேனாபிசேகம் செய்து 9 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். ஞாயிறு அன்று வடுகருக்கு விபூதியபிசேகம் செய்யத் திருமணம் விரைவில் நடைபெறும். மேலும் வெண்தாமரை அர்ச்சனையும், சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும், புதன் தோறும் கொடுக்க நீள் ஆயுள் கிடைக்கும். ஆரோக்கியம் நிலவும்

சேத்திரபால மூர்த்தி

சேத்திரபால மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து அனைத்து உயிர்களுக்கும் ஊழிக்காலத்தில் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கி அங்கிருந்த உயிர்களை காத்ததால் அவருக்கு சேத்திரபால மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது. இவரை இடைவிடாது தரிசிக்க எதிரிகளிடமிருந்து விடுதலைக் கிடைக்கும். அரக்க குணமுடையவர்களிமிருந்து நம்மையும், நம் சொத்துக்களையும் காப்பவர் இவரே. இவரது படத்தை தொழில் நடைபெறும் இடம், வீடுகளில் வைத்து வழிபட தீயவர்கள் ஓடுவார்கள். இவர்க்கு நவமுக ருத்திராட்ச அர்ச்சனை , இனிப்பு நைவேத்தியமும் சனிக்கிழமைகளில் கொடுக்க நம்முடைய தொழில் விருத்தியடையும்.

வீரபத்திர மூர்த்தி

வீரபத்திர மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வணங்க செவ்வாய்தோஷ நிவர்த்திக்கு வாழ்க்கை முறைக்கு வேண்டிய மனஉறுதியைத் தருபவர் இவரே, சித்திரை மாச செவ்வாய்கிழமைகளில் வீரபத்திர விரதம் மேற்கொள்ள வேண்டும். செந்நிறமலர் அர்ச்சனையும் புளிசாத நைவேத்தியமும் திங்கள் அல்லது வியாழக்கிழமைகளில் கொடுக்க எதிரி புத்தி அதிகரிப்பு, சகோதரபாசம், குடும்ப ஒற்றுமை நீடிக்கும்.

அகோர அத்திர மூர்த்தி

அகோர அத்திர மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து மாசிமாத கிருஷ்ணபட்ச ஞாயிறு இரவு 12 மணிக்கு இவர் தேன்றினார். ஒவ்வொரு ஆண்டும் இதே நேரத்தில் சிறப்பு பூஜை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் அகோர பூஜை செய்ய அவரது பூரண அருள் நமக்குக் கிட்டும். மேலும் வில்வம் அல்லது செவ்வரளி அர்ச்சனையும், பால் நைவேத்தியமும் திங்கள், பிரதோஷம் அன்றுக் கொடுக்க பகைவர் ஒழிவர். நீண்டகால வழக்கு பைசலாகும். தம்பதியருடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

தட்சயக்ஞஷத முர்த்தி

தட்சயக்ஞஷத முர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வில்வார்ச்சனையும், பால் நைவேத்தியமும் திங்கள், பிரதோஷம் அன்று கொடுக்க பகைவர் தொல்லைத் தீரும். கோர்ட் வழக்கு சாதகமாகும். தம்பதியர் ஒற்றுமை ஒங்கும்.

கிராத மூர்த்தி -வேட மூர்த்தி

கிராத மூர்த்தி -வேட மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வில்வார்ச்சனை செய்ய பகையை எதிர் கொள்ளும் ஆற்றல் வரும். மேலும் செவ்வரளி அர்ச்சனையும், வெண்பொங்கல் அல்லது மிளகு அடை நைவேத்தியமும் செவ்வாய் அன்றுக் கொடுக்க பகைமை மறந்து நண்பராகும் பேறும், சொத்துச் சண்டையும் முடிவிற்கு வரும்.

குரு மூர்த்தி

குரு மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வன்னி இலை அர்ச்சனை செய்ய
நமக்கும் உபதேசம் செய்வார் இவரை வெண்தாமரை அல்லது மகாவில்வ இலை அர்ச்சனையும், வாழை, மா, கரும்பு, திராட்சை கொண்டு நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் செய்துவர தொழில் அபிவிருத்தியும், அனைத்துக் கலைகளில் தேர்ச்சியும் திருஐந்தெழுத்தின் மகிமையும் புரியும்.

அசுவாருட மூர்த்தி

அசுவாருட மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இவரை வணங்கினால் பக்தி நமக்கு மேலிடும். இவர்க்கு வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் திங்களன்று கொடுக்க வாகன யோகம், மனம் பக்குவமடையும்.

கஜாந்திக மூர்த்தி

கஜாந்திக மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இவரை வழிபட இந்திரலோக வாழ்வு தித்திக்கும். மேலும் மகாவில்வார்ச்சனையும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் திங்களன்று கொடுக்க, தடைவிலகி எடுத்தக் காரியம் ஜெயமாகும்

சலந்தரவத மூர்த்தி

சலந்தரவத மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து தீராத துயரத்தினையும் தீர்த்து மஞ்சள்நிற மலர் அர்ச்சனையும், புளிசாத நைவேத்தியமும் செவ்வாயன்றுக் கொடுக்க விஷப்பூச்சிகள் அரவம் இவற்றினால் ஏற்படும் தொல்லை அழியும்.

ஏகபாதத்ரி மூர்த்தி

ஏகபாதத்ரி மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து ஏவல், துர்தேவகைள் மனநிலை பிறழ்வு போன்ற நோய்கள் மற்றும் கொடுமைகள் விலகும், இவர்க்கு வில்வார்ச்சனையும், வெண்பொங்கல் நைவேத்தியமும் வெள்ளிக்கிழகைளில் கொடுக்க மூன்று காலத்தையும் அறியும் அறிவு, முப்பிணி அகவல், நீள் ஆயுள் உண்டாகும்.

திரிபாதத்ரி மூர்த்தி

திரிபாதத்ரி மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வழிபட கோடையாயினும் மழை பொழியும். இவர்க்கு தும்பை அர்ச்சனையும், மிளகு அடை நைவேத்தியமும், புதனன்றுக் கொடுக்க அறிவு விருத்தியடையும் முக்காலம் அறியும் ஆற்றல் ஏற்படும்.

ஏகபாத மூர்த்தி

ஏகபாத மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து வழிபடவும் அனைத்து தேவர், மூர்த்திகளும் இவரை வணங்கியே அனைத்து வகையான செல்வங்களையும் பெற்றனர். இவர் உலகின் முதல்வர் முதன்மையானவராவர். இவர் அனைத்துக் காலங்களிலும், எல்லாவுலகமும் தன் திருவடியின் கீழ் இருப்பதால் இவரை நாம் ஏகபாத மூர்த்தி என்கிறோம். ஏகபாத மூர்த்திக்கு செந்தாமரை அர்ச்சனையுடன், நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் திங்கள்தோறும் கொடுத்து, நெய்தீபம் ஏற்றினால் திருமணம் விரைவில் கூடிவரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தடையில்லா செயல் நடைபெறும். மும்மலம் அழியும்.

கௌரி வரப்ரத மூர்த்தி

கௌரி வரப்ரத மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இவர்க்கு வில்வார்ச்சனையும் பழவகை நைவேத்தியமும், வெள்ளிக்கிழமை கொடுத்து நெய் விளக்குப் போட மாங்கல்ய பலம் கூடும். மக்கட் பேறு உண்டாகும். தம்பதியர் ஒற்றுமை ஓங்கும்

சக்கர தான மூர்த்தி

சக்கர தான மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இவர்களை ஆயிரம் தாமரை மலர்களால் சிவராத்திரியில் வழிபட நாம் வேண்டிய வரங்களைத் தருவார், மேலும் வாழக்கைக்குத் தேவையான படிக்காசும் கொடுப்பார். மஞ்சள்நிறபூக்களால் அர்ச்சனையும், பழவகை நைவேத்தியமும் வெள்ளிக்கிழமையில் கொடுக்க, நீடித்த ஆயுள், கல்வியறிவு, உயர்பதவி வாய்க்கப்பெறும்.

கௌரிலீலா சமன்வித மூர்த்தி

கௌரிலீலா சமன்வித மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இறைவனை வணங்க கருங்குஷ்டம் குணமடையும். மேலும் இவர்க்கு மஞ்சள்நிற மலர் அர்ச்சனையும் பழவகை நைவேத்தியமும் நல்லெண்ணைய் தீபமும் வெள்ளிக்கிழமைகளில் கொடுக்க, நீண்ட ஆயுளும், கல்வியறிவும், உயர் பதவியும் கிட்டும்.

விசாபகரண மூர்த்தி

விசாபகரண மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இவர்க்கு செவ்வரளி அர்ச்சனையும், முக்கூட்டு எண்ணெய் என்றழைக்கப்படும் நெய், தேங்காய், எள் நைவேத்தியமும், செவ்வாய் அன்றுக் கொடுக்க விஷ பயம் தீரும், நீள் ஆயுள், குடும்ப அமைதி ஓங்கும்.

கருடன் அருகிருந்த மூர்த்தி

கருடன் அருகிருந்த மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இறைவனுக்கு தும்பை மலர் அர்ச்சனையும் வெண்பொங்கல் நைவேத்தியமும் சனிக்கிழகைளில் கொடுக்க செல்வ செழிப்புண்டாகும். புகழ், அறிவு சார்ந்த மதிநுட்பம் கிடைக்கும்.

பிரம்ம சிரச்சேத மூர்த்தி

பிரம்ம சிரச்சேத மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து சூர்ய சம்பந்தமான தோஷம் விலகும். இவர்க்கு குவளைமலர் அர்ச்சனையும், சக்கரைப் பொங்கல் அல்லது கொண்டைக் கடலை நைவேத்தியம் சனி அல்லது திங்களன்று கொடுக்க திருமணம் கைகூடும் தொழிலில் முன்னேற்றமும், பகைவர் தொல்லையும் தீரும்.

கூர்ம சம்ஹார மூர்த்தி

கூர்ம சம்ஹார மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இவர்க்கு வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும், திங்களன்றுக் கொடுக்க நீர் கண்டம் மறையும் பயம் விலகும். தம்பதியர் ஒற்றுமைப் பெருகும்

மச்ச சம்ஹார மூர்த்தி

மச்ச சம்ஹார மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இவர்க்கு வில்வார்ச்சனையும், புளிசாத நைவேத்தியமும் செவ்வாய் அன்று கொடுத்து, எள் தீபமிட தொழில் விருத்தியடையும். பல புதியத் தொழில்கள் தோன்ற ஏதுவாகும்.

வராக சம்ஹார மூர்த்தி

வராக சம்ஹார மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இவர்க்கு புதன்கிழமைகளில் நெய்விளக்கும், சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் கொடுக்க வியாபாரம் கொழிக்கும் பகைவர் பார்வையால் வளம் பெருகும்.

பிரார்த்தனா மூர்த்தி

பிரார்த்தனா மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இவர்க்கு வெண்தாமரை அர்ச்சனையும், நைவேத்தியமாக சர்க்கரை பொங்கலும் புதன் அன்று கொடுத்து, நெய் தீபமிட்டால் திருமணத்தடை விலகி திருமணம் கைக்கூடி வரும் வேண்டிய செல்வமனைத்தும் கிடைக்கும்.

இரத்த பிட்சா பிரதான மூர்த்தி

இரத்த பிட்சா பிரதான மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து செவ்வரளி அர்ச்சனையும், வாழைப்பழ நைவேத்தியமும், எள் தீபமும் செவ்வாய்கிழமைளில் விளக்கிட பகைவர் தொல்லை மறையும். நாம் செய்த பாவங்கள்
தீரும்.

சிஷ்ய பாவ மூர்த்தி

சிஷ்ய பாவ மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து இறைவனை வணங்க கல்வி மேம்பாடு அடையும். மேலும் இவர்க்கு வில்வார்ச்சனையும், சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியமும், திங்கள் செவ்வாய்களில் கொடுத்து நெய்விளக்கிட கல்வி சிறப்படையும் நீள் ஆயுள் உண்டாகும். அறிவு மேன்மையடையும்.

இப்படிப்பட்ட அதிரகசிய 64 சிவமந்திரம் 64 சிவ மஹா யந்திரத்தை உலகில் முதன் முறையாக மந்திர சாஸ்திர சக்ரவர்த்தி ராஜராஹவன் அவர்களின் மந்திர யந்திர பிரயோக முறைகளால் உருவேற்றி ஆவாஹனம் செய்து உபதேசித்து வைகாசி பௌர்ணமி சனி கிழமை அன்று வழங்கபடுகிறது

(உலகில் முதன் முறையாக இந்த 64 சிவ அவதாரங்களுக்கும் ஒரே இடத்தில் உலகில் ஆலயம் அமைவது இங்கு மட்டுமே )

ஸ்ரீ சக்ராலயம்
மாயா பவுண்டேஷன்
வன துர்க்கா மூலிகை வனம் ,
காமதேனு கோ ஆலயம்
மந்திர சாஸ்திர சக்ரவர்த்தி
ராஜராஹவன்
கொல்லிமலை அடிவாரம்
9994333410 , 9994711110
9994639910

 

சிவபுராணத்தில் மறைந்துள்ள சிவயோக ரகசியம்

96 வகை சிவலிங்கங்கள் பற்றிய ஓர் கண்ணோட்டம்

சிவபெருமானின் தண்டவங்களும், ஆடிய ஸ்தலங்களும்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord Shiva
  • Recent Posts

    சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil

    சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil சந்திரனுக்குக் கிடைத்த சாபம்! ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது,… Read More

    11 hours ago

    விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகள் | Vinayaga 100 special information

    Vinayaga 100 special information விநாயகர் சதுர்த்தி விரதம் சிறப்பு பதிவு. விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகள் .… Read More

    2 days ago

    விநாயகர் அகவல் பாடல் வரிகள் | Vinayagar Agaval Lyrics in Tamil | Vinayagar songs

    Vinayagar Agaval Lyrics in Tamil விநாயகர் அகவல் (Vinayagar Agaval) - ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர்… Read More

    2 days ago

    கணபதியே கணபதியே பாடல் வரிகள்

    ஓம் கணநாதனே போற்றி போற்றி ஓம் ஞான முதல்வனே போற்றி ஓம் வெள்ளை கொம்பனே போற்றி கணபதியே கணபதியே… கணபதியே… Read More

    5 days ago

    Vinayaka Chathurthi Pooja Procedure in Tamil | சதுர்த்தியன்று பூஜை செய்யும் முறை

    Vinayaka Chathurthi Pooja Procedure Tamil விநாயகர் சதுர்த்தி (7/9/2024) வழிபடும் முறைகள் (Vinayagar Chathurthi Pooja Procedure in… Read More

    5 days ago

    வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?

    Vinayagar Statue directions வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்? ⭐ விநாயகர் சதுர்த்தி, விநாயகரின் முக்கியமான விழாவாகும்.… Read More

    5 days ago