ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? Arudra darshan
பிறப்பே எடுக்காத (ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு
உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?
ஆர்த்ரா = திருவாதிரை
ஆஸ்லேஷா = ஆயில்யம்
அனுராதா = அனுஷம்
ஜேஷ்டா = கேட்டை
தனிஷ்டா = அவிட்டம்
புனர்வஸு = புனர் பூசம்
பூர்வ பல்குனி = பூரம்
உத்திர பல்குனி = உத்திரம்
பூர்வா ஷாடா = பூராடம்
பூர்வ பத்ரா = பூரட்டாதி
உத்ர பத்ரா = உத்திரட்டாதி
இவைகள் எல்லாம் தமிழ் நட்சத்திரங்களுக்கு சொல்லப்படும் வட மொழிப் பெயர்களாகும்.
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.
ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் – புனர்பூசம்;
பரதனுக்கு – பூசம்;
லட்சுமணனுக்கு -ஆயில்யம்;
சத்ருக்னனுக்கு- மகம்;
கிருஷ்ணனுக்கு – ரோகிணி;
முருகனுக்கு – விசாகம்.
இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.
ஆனால் பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?
பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்
என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவ பெருமானைக் குறிக்கிறது.
சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.
சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.
ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்
ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.
திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.
அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.
அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்
இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.
சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.
ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம்
சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.
சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும். திருஉத்திரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மற்றும் பல சிவன் கோவிலிகளில் ஆருத்ரா தரிசனம் மிக சிறப்பாக இருக்கும்…
கோவில் கோபுரமும் விமானமும் ஒன்றா
கோவில் அமைப்பில் விமானம் வேறு, கோபுரம் வேறு. கருவறையின் மீது கட்டப்பெறுவது விமானமாகும்.
விமானத்தில் நாகரம், வேசரம், திராவிடம் என்று மூன்று வகை உண்டு என்று சிவஞான முனிவர் காஞ்சிப் புராணத்தில் பாடியுள்ளார்
கோவில் கட்டிட அமைப்பு முறையின்படி இவை வெவ்வேறு அமைப்பு உடையன. விமானம் சதுர அமைப்புக் கொண்டிருந்தால் நாகர விமானம் என்று பெயர் உருண்டுள்ள வட்டமான விமானமாக இருந்தால் வேசர விமானம் என்று பெயர். எட்டுப் பட்டை கொண்ட விமானமாக இருந்தால் திராவிட விமானம் என்று பெயர். ஒரு நிலை (ஏகதள விமானம்), இருநிலை விமானம் (துவிதளம்), மூன்று நிலை விமானம் (திதி தளம்), ஐந்துநிலை விமானம் (பஞ்சதளம்) முதலிய பாகுபாடுகளும் உண்டு.
கோபுரம் என்பது கோவிலின் நுழைவாயிலில் உயர்த்துக் கட்டப் பெறுவதாகும்.
சோழர் காலத்தில் சிதம்பரக் கோவிலுக்குக் கோபுரம் உயர்த்துக் கட்டுவது முதன் முதலில் தொடங்கிற்று. விஜய நகரப் பேரரசு காலத்தில் தான் கோபுரங்கள் அதிகமாகக் கட்டப்பெற்றன. கிருட்டிண தேவராயர் காலத்தில் கோபுரம் கட்டும் பணி செல்வாக்குப் பெற்றது. அதனால் முன் பகுதியில் உயர்த்துக் கட்டப்பெறும் கோபுரத்திற்கு இராய கோபுரம் என்று பெயர் வழங்கலாயிற்று. இராசகோபுரம் என்றும் வழங்கப்பெறும்.
திருவண்ணாமலைக்கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிய இடங்களில் நான்கு திசைகளிலும் கோபுரங்கள் கட்டப்பெற்றன. ஐந்துநிலை, ஏழுநிலை, ஒன்பதுநிலை, பதினொரு நிலை என்ற நிலையில் கோபுரங்கள் உயர்ந்தன. கோபுரங்கள் அகன்று நீள் சதுரமாக அமைந்திருக்கும். மேலே செல்லச் செல்ல அளவு குறைந்து கொண்டே சென்று உச்சியில் கலசங்கள் அமைக்கப்பட்டிருக்கும். எத்தனை நிலை உண்டோ அத்தனை கலசங்கள் உச்சியில் அமைந்திருக்கும்.
கோபுரம் உயர்த்துக் கட்டும்போது அதன் கனத்தைத் தாங்குவதற்கு ஏற்ப அடிப்பகுதியில் ஆழமாகக் குழி எடுத்து மணல் பரப்பி அதன்மேல் கட்டுவதே பண்டைய முறையாகும். அவ்வாறு கட்டப்பட்ட அடிநிலையின் மீதே தற்காலத்தில் மிக உயர்த்தி அவிநாசியிலும், திருவரங்கத்திலும் கோபுரங்கள் கட்டப் பெற்றன.
தற்காலத்தில் விமானம், கோபுரம் வேறுபாடு தெரியாமல் அனைத்தையும் கோபுரம் என்றே அழைக்கின்றனர்.
கருவறையின் மீது அமைந்திருப்பது விமானம். கோவிலின் நுழைவாயிலில் உயர்த்துக் கட்டப் பெறுவது கோபுரம். இரண்டும் வேறு வேறு தன்மையுடையன, அமைப்பிலும் மாறுபாடு உடையன ஆகும்
திருச்சிற்றம்பலம்
திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில்
108 லிங்கம் தஞ்சாவூர் பாபநாசம் ராமலிங்கேஸ்வரர் கோவில்
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_*சித்திரை - 12**ஏப்ரல் - 25 - (… Read More
# 2025-26 தமிழ் புத்தாண்டு: விசுவாவசு வருடத்தின் பஞ்சாங்கக் கணிப்பும் பலன்களும் **தமிழ் புத்தாண்டு** இந்த ஆண்டு ஏப்ரல் 14,… Read More
Panguni Uthiram 2025 11-04-2025 மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.… Read More
Panguni Uthiram Special பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள்... Panguni Uthiram special அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திரம்… Read More
Rama Navami ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான்,… Read More
வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும். நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு… Read More