Arthamulla Aanmeegam

ஆடிப்பெருக்கு விழா | aadi perukku festival | aadi 18

ஆடிப்பெருக்கு:  3/8/2021 aadi perukku

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இதனால் ஆடி மாதம் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிவன், பார்வதி வீற்றிருக்கும் சிவாலயங்கள் மற்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவது வழக்கமான ஒன்றாகும். ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது.

Mariamman

இந்த வருடம் ஆடிப்பெருக்கு ( ஆடி 18 ) 03/08/2021 செவ்வாய்க்கிழமை வருகிறது. அன்றைய தினம் விரதமிருந்து வழிபாடு செய்தால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் .

தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புது தாலிமாற்றிக்கொள்வர்.
இந்த நன்னாளில் புதுமண பெண்ணிற்கு தாலி பிரித்து கோர்ப்பர் . எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால் , அந்த காரியம் மேலும் மேலும் பெருகும் என்பது ஐதீகம் .

புண்ணியம் பெருகும் ஆடிப்பெருக்கு!


ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு என்று தமிழக மக்கள் விமரிசையாக கொண்டாடுகிறார்கள். 18ம் பெருக்கு என்றும் சிலர் குறிப்பிடுவார்கள். பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.
இந்த முறையிலேயே, நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நமது முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் அந்தக் காவிரி அன்னைக்கு, ஆடிப் பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடினார்கள்.

ஆடிப்பெருக்கன்று காவிரிக்கரையில் இளம் பெண்களும், புதுமண தம்பதிகள் மற்றும் திருமணமான பெண்கள் புத்தாடை உடுத்திக் கொண்டு பழங்கள், அவல், ஊறவைத்த இனிப்பு கலந்த அரிசி, புதிய மாங்கல்ய மற்றும் மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து மஞ்சள் மற்றும் மணலால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் முன் படையல் செய்து வழிபடுவார்கள். சிறுவர்கள் படையலிட்ட மஞ்சள் கயிற்றினை கழுத்து மற்றும் கைகளில் ஒருவருக்கொருவர் உற்சாகத்துடன் கட்டிக் கொள்வார்கள்.

தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகரிக்கும். விவசாயம் செய்வதற்கு ஏதுவாக, நதிகளும் நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், காவிரிக்கென பிரத்யேகமான விழாவாக ஆடிப்பெருக்கு விழா உள்ளது. தமிழ் மாதமான ஆடி 18ம் நாள் பெருக்கெடுத்து வரும் காவிரித் தாயை மலர்தூவி வரவேற்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. காவிரியாறு தமிழ்நாட்டில் நுழையும் பகுதி ஒகேனக்கல். இங்கு மாநில அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா நடத்தப்பட்டு வருகிறது.

சூரியன் தென்திசை நோக்கிப் பயணப்படுவதை, தட்சிணாயன புண்ணிய காலம் என்று குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணி களைத் தொடங்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வதுண்டு. இந்த நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம்.

ஆடி 18ம்தேதி காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் இந்த நாளில் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வது வழக்கம். ஆறு மற்றும் நீர் நிலைகளின் ஓரம் தான் என்று இல்லை, வீட்டிலேயே கூட எளிமையான முறையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடலாம்.

காவிரி அன்னை, ரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறாள். ஆடிப்பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு, ரங்கநாதர் எழுந்தருள்வார். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும், புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து அம்மா மண்டபம் படித் துறைக்குக் கொண்டு வருவார்கள். பெருமாள் முன் அந்தச் சீர்வரிசைகளை வைத்து ஆராதனைகள் செய்த பின் அவற்றை காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள்.

தென்னிந்தியாவில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது, பவானி கூடுதுறை. இங்குள்ள சங்க மேஸ்வரர் கோவில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலையில் திறக்கப்படும். கூடுதுறையில் நீராடிவிட்டு பக்தர்கள், இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

அட்சய திரிதியை தினத்தை விட, ஆடிப்பெருக்கு சிறப்பான நன்னாளாகும். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். ஒருவர் செய்யும் நற்செயல்களால், எவ்வாறு புண்ணியம் பெருகுகிறதோ, அதுபோல் இந்த நாளில் தொடங்கும் எந்தக் காரியமும் நன்மை அளிக்கும் வகையிலேயே நிறைவுபெறும் என்பது நம்பிக்கை..

ஆறுகளில் புது வெள்ளம் பாயும். புதிய விளைச்சலுக்குக் கட்டியம் கூறும். வளமையின் அடையாளமான அந்த வெள்ளப் பெருக்கை மக்கள் படையல் இட்டு வரவேற்கிறார்கள். இந்த வரவேற்பு வைபவம்தான் தமிழ்நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பதினெட்டாம் பெருக்கு.

ஆடிப் பதினெட்டு என்னும் ஆடிப் பெருக்கு புராண காலத்திலேயே போற்றப் பட்டிருக்கிறது.ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், “அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, `தட்சிண கங்கை’ என்று பெயர்.அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்” என்று கூறினார். அதன்படி ராமபிரான் காவிரியில் நீராடிய நாள் `ஆடிப்பெருக்கு’ என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
வருணனையும் தேவதைகளையும் வழி படும் நாள் என்றும்; நீருக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் இந்நாள் கருதப்படுகிறது.

உலகத்தில் எத்தனையோ புனித நதிகளும் தீர்த்தங்களும் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் இல்லாத தனிச்சிறப்பாக காவேரி நதிக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பதினெட்டாம் நாளன்று “பதினெட்டாம் பெருக்கு’ என்னும் விழாவானது தமிழகத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். ஆடி மாதம் இந்த 18 படிகளும் மூழ்கிவிடும் அளவுக்கு புது வெள்ளம் கரை புரண்டு ஓடும்.அந்த புது வெள்ளத்தை வரவேற்று ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற பண்டைய தமிழரின் எண்ணத்தில் உருவானதே ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற ஆடிப்பெருக்கு.

காவேரி நதியின் இருகரைகளிலும் பதினெட்டு முக்கியமான இடங்கள் உண் டென்றும்; அங்கே பதினெட்டு யோகியர்களும் மகரிஷிகளும் சித்த புருஷர்களும் பூமியினடியில் பிருத்வி யோகம் பூண்டு தவம் செய்கிறார்கள் என்றும் கூறுவர். அவர்கள் ஆடிப் பதினெட்டு அன்று யோகத்திலிருந்து மீண்டு, காவேரி நதியில் நீராடி, தங்கள் தவப்பயனை காவேரி நதியில் கலக்கும்படிச் செய்கிறார்களாம். சித்த புருஷர்களின் சக்தி பதினெட்டாம் பெருக்கு நாளில் காவேரியில் கலந்திருப்பதால், காவேரியானவள் அதிக சக்தி யையும் புனிதத்தையும் பெறுகிறாள். ஆகவே, ஆடிப்பெருக்கு அன்று காவேரியில் நீராடி வழிபட்டால் புனிதம் பெறுவதுடன் நாம் செய்த பாவங்களும் நீங்கும் என்று சாஸ்திரங் கள் சொல்கின்றன.

வளம் பெருக்கும் திருநாள்:

ஆடிப்பெருக்கு அன்று துவங்கும் தொழில்கள் பலமடங்கு செல்வத்தை தரும் என்பது ஐதீகம்.
அட்சய திரிதியையை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பலமடங்காய் பெருகும் என்பர்.ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் துவங்குவதில்லை என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு நன்னாள் மட்டும் அதற்கு விதிவிலக்காக உள்ளது.

மறக்காம கோலம் போடுங்க!

ஆடிப்பெருக்கன்று மாலையில் திருவிளக்கேற்றும் முன், வாசலில் பசுஞ்சாண நீர் தெளித்து, மாக்கோலம் இட வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டில் திருமகள் நித்யவாசம் செய்வாள்.

ஆடிப்பெருக்கு அன்று வீட்டின் மூத்த பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆறு குளம் நதி ஆகிய முக்கிய நீர்நிலைகளில் நீராடுவதைப் பெரும் பேறாகக் கருதுவர்.புது மணப்பெண்கள் அணிந்திருக்கும் தாலியை மாற்றி புதிய மஞ்சள் கயிற்றுடன் புதியதாக மாற்றிக் கொள்வர். பெரும்பாலும் மூத்த சுமங்கலிகள் புதிய மஞ்சள் சரடு அணிவிப்பர்..

சில இடங்களில் மாலை நேரத்தில் – விளக்கேற்றி பூஜை செய்து – தாமரை இலையில் விளக்கினை வைத்து – காவிரியில் மிதக்க விடுவர்.

காவிரி பெருகி வரக் காரணமான விநாயகருக்கு பூஜை செய்வதும் பூஜையில் தேங்காய் பால் பொங்கல் நைவேத்யம் மற்றும் தேங்காய், புளி, தயிர் சாதங்கள் என சித்ரான்னம் படைத்து வழிபடுவதும் உண்டு.

இதற்கெல்லாம் சிகரம் வைத் ததுபோல் ஸ்ரீரங்கம் கோவிலின் தென்புறத்திலுள்ள அம்மா மண்டபத்தினையொட்டி ஓடும் காவேரி நதிக் கரையில், ஸ்ரீரங்கநாதர் ஆடிப்பெருக்கன்று எழுந்தருள்வார். அன்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காவேரித் தாயாருக்கு சீர்வரிசைகளை யானைமீது கொண்டு வருவார்கள். அந்தச் சீர் வரிசைகளில் விதவிதமான மங்கலப் பொருட் கள், மாலைகள், புதிய ஆடைகள் ஆகியவற்றுடன் தாலிப்பொட்டு ஒன்றும் இருக்கும். இதனை அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் முன் னிலையில் அங்குள்ள காவேரித் தாயாருக்குப் படைத்து, காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள்.
காவிரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் இக்காட்சியைக் கண்டால் `கோடி புண்ணியம்’ கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்பின், பெருமாள் பல்லக்கில் ஏறி கோவிலை நோக்கிச் செல்வது வழக்கம். அன்று அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை விழாக்கோலம் காணும்.

பெருமாள் கோவிலில் நுழையும்போது, வெளியில் உள்ள ஆண்டாள் சந்நிதிக்கு முன் எழுந்தருள்வார். அங்கே ஸ்ரீஆண்டாளும் பெருமாளும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். மங்கல வாத்தியங்களும் வேத கோஷங்களும் முழங்கும். இந்த அற்புத மான காட்சியை ஆடிப் பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்பொழுது தம்பதியர் தரிசித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்!..

ஆடிப்பெருக்கு பூஜையை காவிரிக் கரையில் செய்ய இயலாதவர்கள் வீட்டில் எளிய முறையில் செய்யலாம்.

வீட்டில் பூஜை செய்யும் இடத்தில் திருவிளக்கேற்றி வைக்கவும். ஒரு செம்பில் – அரைத்த மஞ்சளை சிறிதளவு போட்டு சுத்தமான தண்ணீரால் நிறைத்து அதனை விளக்கின் முன் வைத்து தண்ணீரில் வாசமுள்ள பூக்களை இடவும்.
ஏதாவது ஒரு சித்ரான்னம் செய்து நிவேதனமாக வைத்து சாம்பிராணி தூபம் நெய் தீபம் காட்டி கற்பூர ஆரத்தி செய்யவும். கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை, பொருணை எனும் புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து வழிபடவும். பின் செம்பிலுள்ள வீடு முழுதும் மாவிலை கொண்டு தெளித்து உள்ளங்கை அளவு தீர்த்தப் பிரசாதமாக அருந்தவும். புனித நீர் மீதமிருந்தால் – செடி, கொடிகளின் வேரில் ஊற்றி விடவும்.

சீரும் சிறப்பும் பெற்ற காவிரி – வரும் ஆண்டுகளில் – முன்பு போல பொங்கிப் பெருகி வர வேண்டும். என்றும் குன்றாத செல்வச் செழிப்புடன் மக்கள் வாழ்வதற்கு காவிரியே கதி..

நடந்தாய் வாழி காவேரி !
நாடெங்குமே செழிக்க….. நன்மையெல்லாம் சிறக்க…..
நடந்தாய் வாழி காவேரி

Aadi perukku:

Aadiperukku Festival (Mulaipari and Aadiperukku),,,,,,,,,,,,,,,,,,,

Mulaipari (Sprouting or Germination of Nine Grains or Navadhanyam in a basket or clay mud pots) is a very important ritual which takes place at almost every village Goddess celebration. In its most original form, it is an exclusively women’s ritual and is of great importance for the whole village. The participants of the processions carry earthen pots with nine different types of grains inside on their heads and walk towards a river where the content is dissolved. This ritual is very elaborate. Before the procession starts, a special song and dance are performed. The original meaning of the ritual performance is a request to the village Goddess for rain for fertility of land, in order to secure a rich harvest. The women are involved in large groups significantly implying the fertility of women also ensuring continuation of human race with peace and harmony through empowered women.

On this auspicious day, Goddess Parvathi Devi is worshipped by offering different rice dishes. People celebrate this occasion by offering chitranna or rice cooked in different flavors, colors and ingredients to the river-goddess. Usually mixed rice dishes like Sweet Pongal, Coconut rice, Lemon rice, Ellu Sadam-Sesame Seed Rice,Tamarind rice and Bahala bath or curd rice are prepared. Offerings of flowers, Akshata and rice offerings are done into sacred rivers like Cauvery. As per Purana, Parvathi devi meditated upon Lord Siva to see the divine vision and Lord Siva appeared as Shanka-Naraya swami. Aadiperukku is a festival of fertility and people of Tamil Nadu especially women offer prayers. They wear new clothes and perform abhishekham for Kaveri amman.

 

Share
ஆன்மிகம்

Leave a Comment

View Comments

Published by
ஆன்மிகம்
Tags: aadi masam
 • Recent Posts

  108 Ayyappan Saranam | 108 Saranam in Tamil | 108 ஐயப்பன் சரணம்

  108 Ayyappan Saranam in tamil 108 ஐயப்ப சரண கோஷம் 1.  ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 2.… Read More

  2 weeks ago

  சக்தி வாய்ந்த ஐயப்பன் ஸ்வாமியின் அனைத்து ஸ்லோகங்கள் | ஐயப்பன் ஸ்லோகம் | Ayyappan slokam

  ஐயப்பன் ஸ்லோகம் - சக்தி வாய்ந்த ஐயப்பன் ஸ்வாமியின் அனைத்து ஸ்லோகங்கள் - Ayyappan slokam‌ ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம்:… Read More

  2 weeks ago

  லோக வீரம் மஹா பூஜ்யம் பாடல் வரிகள்!!! Loka veeram mahapoojyam lyrics in Tamil

  *சாஸ்தா சதகம்* -லோக வீரம் மஹா பூஜ்யம் - Loka veeram Lyrics ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி சுவாமியே சரணமய்யப்பா… Read More

  2 weeks ago

  பள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | pallikattu sabarimalaiku lyrics Tamil

  Pallikattu sabarimalaiku lyrics Tamil பள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்... pallikattu sabarimalaiku lyrics Tamil இருமுடி தாங்கி… Read More

  2 weeks ago

  ஹரிவ ராஸனம் பாடல் வரிகள் | Harivarasanam song lyrics tamil and video

  Harivarasanam song lyrics in Tamil, ஹரிவ ராஸனம் பாடல் வரிகள்... கம்பங்குடி சுந்தரம் குளத்து அய்யர் பிரசுரித்த சாஸ்தா… Read More

  2 weeks ago

  கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்!! Kandha sasti kavasam lyrics in Tamil

  Kandha sasti kavasam lyrics Tamil கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் Kandha sasti kavasam lyrics in… Read More

  3 weeks ago