Arthamulla Aanmeegam

Motcha Deepam in Tamil | மோட்சதீபம் ஏற்றுவதன் முக்கியத்துவம்

Motcha Deepam

*மஹாளயம்: மஹா பரணி சிறப்பு வழிபாடு..!!*

*மஹா பரணியில் மோக்ஷ தீபம்..!!*

● தற்போது மஹாளய பக்ஷத்தில் வருகிற 2021 செப்டம்பர் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி பரணி நக்ஷத்திர நாள் மஹா பரணி வருகிறது.

● கோள்களில் சனீஸ்வர பகவானான அதாவது சனி கிரஹத்தின் அதிபதியான யமனுக்கு உகந்த பொழுது.

● பொதுவாக மஹாபரணியிலும் தீபாவளிக்கு முந்தைய நாளும் யம தீபமேற்றி யமதர்ம ராஜனைப் போற்றி அபஸ்மாரம் வாராமல் காத்துக் கொள்ள ப்ரார்த்தித்து யம தீபம் ஏற்றுவர்.

● மஹாபரணி அன்று காலையிலோ அல்லது சந்தி வேளையிலோ நம் வீட்டு பூஜையறையிலேயே ஒரு பலகையில் கோலமிட்டு அதன் மேல் ஓர் தனி அகலில் நெய் தீபமேற்றி பித்ருக்களுக்கும் மோக்ஷம் கிட்ட வேண்டி ப்ரார்த்திப்பது நல்ல பலனைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

● நம் குல பித்ருக்கள் மட்டுமின்றி லோக பித்ருக்கள் எல்லோருக்குமாக ப்ரார்த்தித்துக் கொண்டு தீபமேற்றி, எள், வெல்லம், நெய் கலந்த சாதம் நைவேத்யம் செய்து (காலை வேலையில்) காகத்துக்கும் அன்னமிட்டு வழிபட பித்ருக்கள் ப்ரீதி அடைவார்கள். விவாஹத் தடை, புத்திர பாக்கியம், தம்பதி ஒற்றுமை, கல்வி மேன்மை, யமபயம் நீங்கி ஆயுள் வ்ருத்தி உண்டாக்கும்.

● எள்ளை நன்றாக அலம்பி சற்று உலர வைத்துவிட்டு, லேசாக சூடுபடுத்திக் கொண்டு, அதனுடன் சிறிதளவு ஏலக்காய் சேர்த்து தேவையான அளவுக்கு வெல்லம் சேர்த்துக்கொண்டு அரைத்து பொடிசெய்து, ஒரு பாத்திரத்தில் நெய்யூற்றி சாதமிட்டு அதனுடனாக இந்த எள்ளுப்பொடியைக் கலந்து எள் சாதமாக்கி அதனை நைவேத்யம் செய்வார்கள் என அறியமுடிகிறது.

*பித்ரு ஸ்துதி*

● இது ஓர் ஸ்துதியாக இருப்பதால் ஆடவர் பெண்டிர் அனைவரும் பாராயணம் செய்யலாம்.

● நம் குல பித்ருக்கள் ப்ரீதி அடைந்து அவர்களுடைய ஆசிகளிலே எல்லோருடைய வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும்.

*பித்ரு ஸ்துதி :*

பித்ரு ஸ்துதி (தமிழ்)

ப்ருஹத் தர்ம புராணத்தில் அமைந்துள்ளது இந்த ஸ்தோத்ரம்

ஸ்ரீ பிரம்மா உவாச

ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச
ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே

ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே
ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச

நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம:
ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச

துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:
ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:

தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம்
மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:

யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம்
அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:

*பல ச்ருதி :*

இதம் ஸ்தோத்ரம் பிது: புண்யம் ய: படேத் ப்ரயதோ நர:
ப்ரத்யஹம் ப்ராதருத்தாய பித்ரு ஸ்ராத்த தினே s பி ச

ஸ்வ ஜன்ம திவஸே ஸாக்ஷாத் பிதுரக்ரே ஸ்திதோபி வா
ந தஸ்ய துர்லபம் கிஞ்சித் ஸர்வஜ்ஞதாதி வாஞ்சிதம்

நானாபகர்ம க்ருத்வாதி ய: ஸ்தௌதி பிதரம் ஸுத:
ஸ த்ருவம் ப்ரவிதாயைவ ப்ராயஸ்சித்தம் ஸுகீ பவேத்

பித்ரு ப்ரீதி கரோ நித்யம் ஸர்வ கர்மாண்யதார்ஹதி

● எல்லாம் வல்ல தேவாதி தேவர்களும் ஒன்றடங்கிய கோமாதாவுக்கு ஆஹாரம் ஈவது நற்சிறப்பை உண்டாக்கும்.

● இயன்றளவு பசுவுக்கான தானியத்தையோ கீரை வகைகளையோ வாங்கித் தாருங்கள்.

● பசியோடிருப்பவர்களுக்கு உண்ண உணவு அளியுங்கள். அல்லது உணவுக்கென உங்களால் இயன்ற பணத்தை கஷ்டப்படுபவர்களுக்குக் கொடுத்து உதவுங்கள்.

● பக்ஷிகளுக்கு தானியமிடுங்கள். அசாத்திய புண்ணியப் பொழுதிலே முன்னோர்கள் கூற்றின்படியாக நல்லதைச் செய்வோம்.

*முன்னோர்களால் நமக்கு நன்மையே பயக்கும்.*

*சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து…*

மோட்சதீபம் (Motcha Deepam) ஏற்றுவதன் முக்கியத்துவம்!

(சித்தர் அகத்தியர்) 21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும்.

ஒருவர் இறந்துவிட்டாலோ, அல்லது மருத்துவ துறையில் இருப்பவர்கள், கண்டிப்பாக “மோக்ஷ தீபம்” கோவிலில் ஏற்ற வேண்டும் என ஒரு தொகுப்பில் அகத்தியப் பெருமான் கூறியிருந்தார்.

பலரும் அது சம்பந்தமாக விசாரிக்க, தேடியும் கிடைக்கவில்லை. சமீபத்தில், நான் அகத்தியர் பெருமானின் ஜீவநாடியை எனக்கு வந்த தொகுப்பை படித்த பொழுது, அதற்கான பதில் கிடைத்தது. இன்று சித்தர்களின் குரலில் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே அதை தருகிறேன்.

இறந்தவர்கள் ஆன்மா நல்லகதிக்கு /மேல்நிலைக்கு..

உய்யும் பொருட்டுக்
கோயிற் கோபுரத்தில்
ஏற்றும் விளக்கு தான் “மோட்சவிளக்கு”

அகால மரணம்,
விபத்து மரணம்,
குழந்தை மரணம்,
மருத்துவரால்
சிகிச்சை மரணம்,
தீராதுன்பதுடன் மரணம்,
தீராஆசையுடன்/கவலையுடன்
மரணம்….

ஆகியவற்றால்..
பூத உடலை நீங்கிய
“ஆன்மாக்கள் நற்கதி அடைவதற்காக”

வாரிசுகளால்/ மற்றவர்களால் “மோட்ச தீபம்” ஏற்றப்படும் ஒரு வழிமுறை தான்..
“இறை பெரியோர்களால்” பரிந்துறைக்கப்பட்டு,

இன்றும்
“பாரம்பரிய நம்பிக்கையாக..”
நம் மண்ணில் கடைப்பிடிக்கப்
பட்டு வரும் ஒரு “அற்புத பலனளிக்கும் நடைமுறையாகும்.”

ஏதேனும் அருகேயுள்ள
சிவன் /காலபைரவ
ஆலய கோயில் “கோபுரத்தில்/சந்நிதியில்”
இத்தீபம் வைக்கப்படும்.

நாம் வாழும் காலத்திலேயே நமக்காக நாமே “மோட்ச தீபம்” ஏற்றலாம்.

அந்த வகையில் “அமாவாசையன்று,”
இன்றும் வயோதிகர்களும்,
வாரிசு இல்லாதவர்களும், தங்களுக்காக “மோட்ச தீபம்” ஏற்றுவதைக் காணலாம்.

ஒருவர் குறைவயதில்
இறந்துவிட்டாலோ, அல்லது மருத்துவ துறையில் மனித உயிர் நீங்க காரணமாக இருப்பவர்கள், வாகன ஓட்டிகளினால் இறப்பு செய்பவர்கள் கண்டிப்பாக “மோக்ஷ தீபம்”
கோவிலில் ஏற்ற வேண்டும்.
என ஒரு
ஜீவநாடி வாக்கியத்தில்
“அகத்தியப் பெருமான்” கூறியிருந்தார்.

ஏனெனில்..
அவ்ஆத்மாக்கள்
“ஆற்றாமையுடன்..”
நமது வாழ்வின்
“இயல்பான போக்கை”
இடையூறும்,
“துன்பமும் செய்யாமல்”
நற்கதி செல்ல
“ஆற்றல்/ விசை”
கொடுப்பது இது போன்ற
“பரிகாரங்களே” ஆகும்.

அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே அதன் விபரம் தந்துள்ளோம்.

தேவையானவை:-
——————————–

வாழை இலை
பச்சை கற்பூரம்
சீரகம்
பருத்திக் கொட்டை
கல் உப்பு
மிளகு
நவதான்யங்கள்
கோதுமை நெல் (அவிக்காதது)
முழு துவரை முழு பச்சை பயிறு கொண்ட கடலை மஞ்சள் (ஹைப்ரிட் அல்லாதது) முழு வெள்ளை மொச்சை கருப்பு எள் முழு கொள்ளு முழு கருப்பு உளுந்து விளக்கு (200 மில்லி கொள்ளளவு) – 42 தூய பருத்தி துணி – கை குட்டை அளவு – 21

செய்யும் முறை:-
—————————

எல்லா பொருட்களையும் சுத்தமான நீரில் கழுவி
(உப்பு உட்பட, பூ தவிர)
நல்ல வெயிலில் காய
வைக்க வேண்டும்.

துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நனைத்து காய வைக்க வேண்டும்.
தீபம் ஏற்ற உகந்த நேரம் அமாவாசை மாலை 6 மணி.

எல்லா விளக்குகளையும் நன்றாக கழுவி,
நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.

மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும்.
எந்த ஆலயத்தில் தீபம் எற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி அனுமதி பெற வேண்டும்.
எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம்.

முடிந்த வரை ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் ஏற்றுவது சிறப்பு.
முதலில் திரி தயாரிக்க வேண்டும்.
நல்ல சுத்தமான பருத்தி துணியில் பச்சை கற்பூரம், கருப்பு எள், சீரகம், பருத்தி கொட்டை, கல் உப்பு, மிளகு ஆகியவற்றை முடிச்சுப்போட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த முடிச்சின் மறுமுனைதான் நமக்கு திரியாக பயன்படப் போகிறது.

ஆலயத்தில் இதற்கு என்று தேர்வு செய்யப் பட்ட இடத்தில், தலை வாழை இலையினை வைக்க வேண்டும்.
அதன் மேல் நவ தானியங்களை பரப்ப வேண்டும். பிறகு 21 விளக்குகளையும் தனித்தனியாக வைத்து அதனுள் எள் நிரப்ப வேண்டும்.அதன் மேல் ஒவ்வொரு விளக்குக்கும்,
ஒரு விளக்காக மீதம் உள்ள விளக்குகளையும் வைக்க வேண்டும். நெய் நன்றாக நிரப்பப்பட வேண்டும்.
பின்னர் முன் செய்த திரியினை இதனுள் நன்றாக நனைக்க வேண்டும்.
சரியாக நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் மேல் நோக்கி மட்டுமே எரிய வேண்டும். (எந்த திசை நோக்கியும் இருக்க கூடாது). பார்ப்பதற்கு லிங்கம் போல் காட்சி கிடைக்கும். பிறகு பஞ்சாட்சர மந்திரத்தை குறைந்தது நூற்றி எட்டு முறை ஜெபிக்க வேண்டும்
(விஷ்ணு ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம்).

இறுதியாக இறைவனிடம் “இறைவா, இப்பூவுலகில் பிறந்து, இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும்
இந்த பூசை பலனை சமர்ப்பிக்கிறோம். இந்த பலனால் அந்த ஆன்மாக்கள் நற்கதி, சற்கதி அடைய பிரார்த்தனை செய்கிறோம்.

மேலும் இந்த பூசையை செய்வதும், செய்ய வைப்பதும் இறைவனும் சித்தர்களுமே. நாங்கள் வெறும் கருவிகளே” என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.
வேண்டுமானால்,
உங்கள் முன்னோர்களிடம் மானசீகமாக ஆசி வேண்டலாம்.

மறுநாள் நாம் பூசை செய்த விளக்குகள் (இலை நவ தானியம் உட்பட)
ஒரு துளி கூட சிந்தாமல் அனைத்து பொருட்களையும் நதியில் சேர்த்து விட வேண்டும்.

இது கட்டாயம் :
————————–

இந்த ஜீவ நாடியில் ஒரு இடத்தில் அகத்தியப் பெருமான் ஒவ்வொரு பொருளும் ஏன் ஒவ்வொரு எள்ளும் கூட ஒரு ஆத்மா என்று கூறி உள்ளார். அதனால், கண்டிப்பாக ஆற்றில் சேர்க்கவும். கோவிலில் முன் அனுமதி பெற்று செய்வது
மிக முக்கியம்.

ஆன்மிக குறிப்புகள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி - Chitra Pournami ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும் (Chitra Pournami) .… Read More

    2 days ago

    ஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு | chitra gupta pooja in tamil

    Chitra Gupta Pooja in Tamil ஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு | chitra gupta pooja in tamil… Read More

    2 days ago

    Today rasi palan 25/04/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் வியாழக்கிழமை சித்திரை – 12

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *சித்திரை - 12* *ஏப்ரல் -… Read More

    55 mins ago

    Kolaru Pathigam Song lyrics in Tamil | கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

    Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More

    6 days ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    6 days ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    1 month ago