Arthamulla Aanmeegam

நவகிரகங்களின் வரலாறு | Navagraha History in Tamil

நவகிரகங்களின் வரலாறு | Navagraha History in Tamil

Navagraha history in tamil – இந்த பதிவில் அனைத்து நவகிரங்களின் காயத்ரி மந்திரம், திக்கு, அதிதேவதை, தலம், நிறம், வாகனம், தானியம், மலர், வஸ்திரம், ரத்தினம் மற்றும் அன்னம் பதிவு செய்யப்பட்டுள்ளது…

1.சூரியன்.
காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவகிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
சூரிய பகவானின் திக்கு – கிழக்கு
சூரிய பகவானின் அதிதேவதை – அக்னி
சூரிய பகவானின் ப்ரத்யதி தேவதை – ருத்திரன்
சூரிய பகவானின் தலம் – சூரியனார் கோவில்
சூரிய பகவானின் நிறம் – சிவப்பு
சூரிய பகவானின் வாகனம் – ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
சூரிய பகவானின் தானியம் – கோதுமை
சூரிய பகவானின் மலர் – செந்தாமரை , எருக்கு
சூரிய பகவானின் வஸ்திரம் – சிவப்பு
சூரிய பகவானின் ரத்தினம் – மாணிக்கம்
சூரிய பகவானின் அன்னம் – கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்

ஸ்ரீ சூரிய பகவானின் காயத்ரி மந்திரம்:-ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹிதன்னோ சூர்ய ப்ரயோதயாத்.

 

2.சந்திரன்.
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.
சந்திர பகவானின் திக்கு -தென்கிழக்கு
சந்திர பகவானின் அதிதேவதை – ஜலம்
சந்திர பகவானின் ப்ரத்யதி தேவதை – கௌரி
சந்திர பகவானின் தலம் – திருப்பதி
சந்திர பகவானின் நிறம் – வெள்ளை
சந்திர பகவானின் வாகனம் – வெள்ளைக் குதிரை
சந்திர பகவானின் தானியம் – நெல்
சந்திர பகவானின் மலர் – வெள்ளை அரளி
சந்திர பகவானின் வஸ்திரம் – வெள்ளாடை
சந்திர பகவானின் ரத்தினம் – முத்து
சந்திர பகவானின் அன்னம் – தயிர் சாதம்

ஸ்ரீ சந்திர பகவானின் காயத்ரி மந்திரம்:- ஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி தன்னோ ஸோம ப்ரயோதயாத்.

 

3 . அங்காரகன் (செவ்வாய்)
இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.
செவ்வாய் பகவானின் திக்கு -தெற்கு
செவ்வாய் பகவானின் அதிதேவதை – நிலமகள்
செவ்வாய் பகவானின் ப்ரத்யதி தேவதை – க்ஷேத்திரபாலகர்
செவ்வாய் பகவானின் தலம் – வைத்தீசுவரன் கோவில்
செவ்வாய் பகவானின் நிறம் – சிவப்பு
செவ்வாய் பகவானின் வாகனம் – ஆட்டுக்கிடா
செவ்வாய் பகவானின் தானியம் – துவரை
செவ்வாய் பகவானின் மலர் – செண்பகப்பூ, சிவப்பு அரளி
செவ்வாய் பகவானின் வஸ்திரம் – சிவப்பு ஆடை
செவ்வாய் பகவானின் ரத்தினம் – பவளம்
செவ்வாய் பகவானின் அன்னம் – துவரம் பருப்பு பொடி சாதம்

ஸ்ரீ செவ்வாய் பகவானின் காயத்ரி மந்திரம்:- ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம ப்ரயோதயாத்.

 

4.புதன்.
இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி
புதன் பகவானின் திக்கு – வட கிழக்கு
புதன் பகவானின் அதிதேவதை – விஷ்ணு
புதன் பகவானின் ப்ரத்யதி தேவதை – நாராயணன்
புதன் பகவானின் தலம் – மதுரை
புதன் பகவானின் நிறம் – வெளிர் பச்சை
புதன் பகவானின் வாகனம் – குதிரை
புதன் பகவானின் தானியம் – பச்சைப் பயறு
புதன் பகவானின் மலர் – வெண்காந்தள்
புதன் பகவானின் வஸ்திரம் – வெண்ணிற ஆடை
புதன் பகவானின் ரத்தினம் – மரகதம்
புதன் பகவானின் அன்னம் – பாசிப்பருப்பு பொடி சாதம்

ஸ்ரீ புதன் பகவானின் காயத்ரி மந்திரம்:- ஓம் கஜ த்வஜாய வித்மஹே: சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத ப்ரயோதயாத்.

 

5.குரு.
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.
குரு பகவானின் திக்கு – வடக்கு
குரு பகவானின் அதிதேவதை – பிரம்மா
குரு பகவானின் ப்ரத்யதி தேவதை – இந்திரன்
குரு பகவானின் தலம் – திருச்செந்தூர்
குரு பகவானின் நிறம் – மஞ்சள்
குரு பகவானின் வாகனம் – மீனம்
குரு பகவானின் தானியம் – கடலை
குரு பகவானின் வஸ்திரம் – மஞ்சள் நிற ஆடை
குரு பகவானின் ரத்தினம் – புஷ்பராகம்
குரு பகவானின் அன்னம் – கடலைப் பொடி சாதம் , சுண்டல்.

ஸ்ரீ குரு பகவானின் காயத்ரி மந்திரம்:- ஓம் விருஷப த்வஜாய வித்மஹே: க்ருணி ஹஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரயோதயாத்.

 

6.சுக்கிரன்.
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.
சுக்கிர பகவானின் திக்கு – கிழக்கு
சுக்கிர பகவானின் அதிதேவதை – இந்திராணி
சுக்கிர பகவானின் ப்ரத்யதி தேவதை – இந்திர மருத்துவன்
சுக்கிர பகவானின் தலம் – ஸ்ரீரங்கம்
சுக்கிர பகவானின் வாகனம் – முதலை
சுக்கிர பகவானின் தானியம் – மொச்சை
சுக்கிர பகவானின் மலர் – வெண் தாமரை
சுக்கிர பகவானின் வஸ்திரம் – வெள்ளாடை
சுக்கிர பகவானின் ரத்தினம் – வைரம்
சுக்கிர பகவானின் அன்னம் – மொச்சைப் பொடி சாதம் .

ஸ்ரீ சுக்கிர பகவானின் காயத்ரி மந்திரம்:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: தநுர் ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.

 

7.சனி
இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
சனி பகவானின் திக்கு – மேற்கு
சனி பகவானின் அதிதேவதை – யமன்
சனி பகவானின் ப்ரத்யதி தேவதை – பிரஜாபதி
சனி பகவானின் தலம் – திருநள்ளாறு
சனி பகவானின் நிறம் – கருமை
சனி பகவானின் வாகனம் – காகம்
சனி பகவானின் தானியம் – எள்
சனி பகவானின் மலர் – கருங்குவளை, வன்னி
சனி பகவானின் வஸ்திரம் – கருப்பு நிற ஆடை
சனி பகவானின் ரத்தினம் – நீலம்
சனி பகவானின் அன்னம் – எள்ளுப்பொடி சாதம்

7.) ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரி மந்திரம்:- ஓம் காக த்வஜாய வித்மஹே: கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரயோதயாத்.

 

8.ராகு
இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.
ராகு பகவானின் திக்கு – தென் மேற்கு
ராகு பகவானின் அதிதேவதை – பசு
ராகு பகவானின் ப்ரத்யதி தேவதை – பாம்பு
ராகு பகவானின் தலம் – காளத்தி
ராகு பகவானின் நிறம் – கருமை
ராகு பகவானின் வாகனம் – நீல சிம்மம்
ராகு பகவானின் தானியம் – உளுந்து
ராகு பகவானின் மலர் – மந்தாரை
ராகு பகவானின் வஸ்திரம் – கருப்பு நிற ஆடை
ராகு பகவானின் ரத்தினம் – கோமேதகம்
ராகு பகவானின் அன்னம் – உளுத்தம்பருப்புப்பொடி சாதம்

ஸ்ரீ ராகு பகவானின் காயத்ரி மந்திரம்:- ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரயோதயாத்.

 

9.கேது
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.
கேது பகவானின் திக்கு – வட மேற்கு
கேது பகவானின் அதிதேவதை – சித்திரகுப்தன்
கேது பகவானின் ப்ரத்யதி தேவதை – பிரமன்
கேது பகவானின் தலம் – காளத்தி
கேது பகவானின் நிறம் – செம்மை
கேது பகவானின் வாகனம் – கழுகு
கேது பகவானின் தானியம் – கொள்ளு
கேது பகவானின் மலர் – செவ்வல்லி
கேது பகவானின் வஸ்திரம் – பல நிற ஆடை
கேது பகவானின் ரத்தினம் – வைடூரியம்
கேது பகவானின் அன்னம் – கொள்ளுப்பொடி சாதம்

ஸ்ரீ கேது பகவானின் காயத்ரி மந்திரம்:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ கேது ப்ரயோதயாத்

நவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன.
இவ்வழிமுறைகள் எளிதானதும் எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமாகும். அவற்றை இங்கு காண்போம்.

காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்: வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.

நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும்.

தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.

கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும்.

கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.

தோலில் செய்த மணிபர்சில் பணம் வைக்க வேண்டாம். சனி கெட்டிருப்பவர்களின் கெடு பலனைக் குறைக்கும்;.

வாகனத்தை எப்போதும் நல்ல நிலையில் சீராக வைத்திருக்க வேண்டும். சனி பலம் நன்றாக அமையும். (ஜாதகத்தில் சனி கெட்டு, அவரது தசை நடந்தால் வாகனத்தில் அதிக பராமரிப்பு செலவு ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)

வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.

தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும்: பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.

வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.

பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால் வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.

16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.

பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.

அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.

சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.

இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோசம் நீங்கும்.

வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்

நவகிரக 108 போற்றி

பல நன்மைகள் தரும் நவகிரக மந்திரங்கள்

குளிகை என்றால் என்ன?

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    ஞான சரஸ்வதி கோவில் ஆதிலாபாத் தெலுங்கானா | basara saraswathi temple adilabad

    ஞான சரஸ்வதி கோவில் ஆதிலாபாத் தெலுங்கானா ஞான சரஸ்வதி, பஸாரா, ஆதிலாபாத், ஆந்திர பிரதேசம் / தெலுங்கானா நமது நாட்டில்… Read More

    8 hours ago

    சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil

    சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil சந்திரனுக்குக் கிடைத்த சாபம்! ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது,… Read More

    1 day ago

    விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகள் | Vinayaga 100 special information

    Vinayaga 100 special information விநாயகர் சதுர்த்தி விரதம் சிறப்பு பதிவு. விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகள் .… Read More

    3 days ago

    விநாயகர் அகவல் பாடல் வரிகள் | Vinayagar Agaval Lyrics in Tamil | Vinayagar songs

    Vinayagar Agaval Lyrics in Tamil விநாயகர் அகவல் (Vinayagar Agaval) - ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர்… Read More

    3 days ago

    கணபதியே கணபதியே பாடல் வரிகள்

    ஓம் கணநாதனே போற்றி போற்றி ஓம் ஞான முதல்வனே போற்றி ஓம் வெள்ளை கொம்பனே போற்றி கணபதியே கணபதியே… கணபதியே… Read More

    6 days ago

    Vinayaka Chathurthi Pooja Procedure in Tamil | சதுர்த்தியன்று பூஜை செய்யும் முறை

    Vinayaka Chathurthi Pooja Procedure Tamil விநாயகர் சதுர்த்தி (7/9/2024) வழிபடும் முறைகள் (Vinayagar Chathurthi Pooja Procedure in… Read More

    6 days ago