வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
ஒளவையார்
ஒவ்வொரு தேய்பிறைசதுர்த்தி அன்று மாலையில் விநாயகருக்கு அபிஷேகம் பலவகையில் செய்வதால் பல வகையிலும் நம் சங்கடங்கள் தீரும்.
நம் சங்கடங்களை தீர்ப்பதால்தான்
சங்கடஹரசதுர்த்தி என்கிறோம் .
நல்லெண்ணெய் காப்பு போடுவதால்
நமது துன்பங்கள் தீரும்.முதலில் பச்சரிசி மாவு அபிஷேகம் செய்வதால் நாம் கடனாளி ஆகமாட்டோம். வராக்கடன் வசூல் ஆகும்.இளநீர் அபிஷேகம் நம் மனதை அமைதிப்படுத்தும் .பால் அபிஷேகம் தூய்மையையும் தயிர்
அபிஷேகம் சாந்தத்தையும் தரும்.
கரும்புப்பால் இழந்த செல்வத்தையும்
பழச்சாறு அபிஷேகம் 16 வகை ஐஸ்வர்யங்களையும் தரும்அதேபோல
பஞ்சாமிர்தம் தேன் சந்தனம் திருமஞ்சனம் மஞ்சள் பன்னீர் விபூதி
அபிஷேகம் செய்து பூர்ண அலங்காரம் செய்து அருகம்புல் மாலை வெள்ளெருக்கு மாலை அணிவித்து ஆராதனை செய்யலாம் .தனியாகவோ மற்றவர்களுடன் இனைந்து கூட்டாகவும் செய்யலாம்.எந்தகோவிலிலும் தெருவில் உள்ள பிள்ளையார் ஆலயங்களிலும் சதுர்த்தி அபிஷேகம் செய்யலாம் குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது ஒருவர் நேரிடையாக அபிஷேக பொருள்
நேரிடையாக சிரம்ம் எடுத்து வாங்குவது பூஜையில் கலந்து கொள்வது நல்லது.
கோசாரகேது மகரத்தில் இருக்கும்
நிலையில் ரிஷபம்,கன்னி,மகரம்
ராசியினர் பிரதிமாதம் கட்டாயம் சங்கடஹரசதுர்த்தி பூஜையில் கலந்து
கொள்வது கஷ்டங்களை குறைக்கும்
எதிர்பாராத துன்பங்கள் பிரச்சனைகள் உடல்நலக்கேடு பணவிரயங்களில் இருந்து பாதுகாப்பு தரும் விநாயகரை வணங்கி பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நிவாரணம் பெறுவீர்
பிரியமாக என் மனதில் இருக்கும் பிள்ளையாரே
பிரேமையொடு நான் அழைக்கிறேன் பிள்ளையாரே
பின்னமின்றி முழுமையாக முடிக்க அருளும் பிள்ளையாரே
பின்னே வரும் பக்தர்களை காக்கும் பிள்ளையாரே
பிசகு செய்தால் மன்னித்து அருளும் பிள்ளையாரே
பிடித்த பக்தனாக உனக்கு இருக்கிறேன் பிள்ளையாரே
பிரிக்க முடியாது எனை உன்னிடமிருந்து பிள்ளையாரே
பிடித்தேன் உன் பத்மபாதங்களை இறுக்கமாக பிள்ளையாரே
பிடிவாதம் செய்யாமல் உன்பாதம் அருள்வாய் பிள்ளையாரே
பிள்ளையாரே நீ நினைத்ததை கொடுப்பவன் முடிப்பவன்
வாழ்க்கை வாழ்வதற்கே அதை அனுபவித்து வாழ்வோமாக நண்பர்களே……*
*சௌபாக்கியங்களையும் தரும்…!!*
*சங்கடஹர சதுர்த்தி*
🔯விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
⚜ ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
⚜ இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர்.
⚜ அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது, பாண்டவர்கள், துரியோதனனை வென்றது போன்றவை நிகழ்ந்ததும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையால்தான்.
⚜ ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர் விநாயகர்.
⚜ சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகளையும், தோஷங்களையும் போக்கக்கூடியவர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீவிநாயகப் பெருமானை நினைத்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.
⚜ விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் சிறப்பானது ஆகும்.
*🔯விரதத்தின் பலன்கள் :*
⚜ இவ்விரதத்தை கடைபிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.
⚜ மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.
⚜ சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் குறையும்.
⚜ நினைத்ததை நிறைவேற்றும் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை மனமுருகி வழிபட்டு இறைவனுடைய அருளைப் பெற்றிடுங்கள்.
வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் – எந்தது சிறந்தது? வாக்கிய பஞ்சாங்கம் vs திருக்கணித பஞ்சாங்கம் – வேறுபாடுகள்… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _* _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *பங்குனி - 13* *மார்ச்… Read More
Kandha Sasti Kavasam Tamil Lyrics கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் (Kandha sasti kavasam tamil lyrics)… Read More
Maruvathoor om sakthi song lyrics tamil மருவத்தூர் ஓம் சக்தி பாடல் வரிகள் | Maruvathur om sakthi… Read More
Sani peyarchi palangal 2025-2027 சனிப்பெயர்ச்சி 2025-2027 பலன்கள் (Sani Peyarchi Palangal 2025) இந்த மாற்ற நிலை 29.03.2025… Read More
காரடையான் நோன்பு -விளக்கம்-விரத முறை *காரடையான் நோன்பு* 🙏🙏 *காரடையான் நோன்பு* *சிறப்பு பதிவு* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *14.03.2025* *வெள்ளிக் கிழமை*… Read More