Arthamulla Aanmeegam

எந்தெந்த திதிகளில் எந்தெந்த சுப காரியங்கள் செய்யலாம்

*** எந்தெந்த திதிகளில் எந்தெந்த சுப காரியங்கள் செய்யலாம் ???

*பிரதமை :—

வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும்.
அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம்.
மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம்.

இந்த திதிக்கு அதிதேவதை அக்னி.

*துவிதியை :—

அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம்.

இந்த திதிக்கு அதிதேவதை ப்ரம்மதேவர்.

*திருதியை :—

குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம்.
சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம்.
சீமந்தம் செய்யலாம்.
சிற்ப காரியங்களில் ஈடுபடலாம்.
சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது.
அழகுக் கலையில் ஈடுபடலாம்.

இதன் அதிதேவதை கௌரி (பராசக்தி).

*சதுர்த்தி :—

முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள்.
எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது.

எமதர்மனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள்.
ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.

*பஞ்சமி :—

எல்லா சுப காரியங்களையும் செய்யலாம்.
விசேஷமான திதி ஆகும் இது.
குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
மருந்து உட்கொள்ளலாம்.
அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். விஷ பயம் நீங்கும்.

இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள்.
எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது.
நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது.

*சஷ்டி :—

சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம்.
புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம்.
கேளிக்கைகளில் ஈடுபடலாம்.
புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம்.

இந்த திதிக்கு அதிதேவதை முருகன் ஆவார்.
முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும்.
சத்புத்திர பாக்கியம் கிட்டும்.
சஷ்டி என்றால் ஆறு.
ஆறுமுகம் கொண்ட முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும்.

*ஸப்தமி :—

பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம்.
வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம்.
திருமணம் செய்து கொள்ளலாம்.
சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம்.

இதன் அதிதேவதை சூர்யன்.
இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூர்யனை வழிபடுவது சிறப்பாகும்

*அஷ்டமி :—

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம்.
ஸ்ரீ கிருஷ்ணர் பைரவர் மற்றும் ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை ஆவார்.

*நவமி :—

சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம். இந்த திதிக்கு ஸ்ரீ ராமர் மற்றும் அம்பிகை அதிதேவதை.

*தசமி :—

எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு உகந்த நாளிது. பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம்.
வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம்.
இந்தத் திதிக்கு எமதர்மனே அதிதேவதை.

*ஏகாதசி :—

விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம்.
சிகிச்சை செய்து கொள்ளலாம்.
சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இதற்கு, ஸ்ரீ மஹா விஷ்ணுவே அதிதேவதை ஆவார்.

*துவாதசி :—

அற்புதமான திதி எல்லா விதமான சுப காரியங்கள் செய்யலாம்
மதச்சடங்குகளில் ஈடுபடலாம். அதிதேவதை மஹாவிஷ்ணு ஆவார்.

*த்ரயோதசி :—

சிவபெருமான் வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புக்கள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.

*சதுர்த்தசி :—

ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது.
காளி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள்.

*பௌர்ணமி :—

ஹோம, சிற்ப, மங்கள காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு விஷ்ணு சிவன் பராசக்தி அதிதேவதை ஆவாள்.

***அமாவாசை ;—

பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். இயந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம்.
பெருமாள் லஷ்மி சிவன், சக்தி அதிதேவதை ஆவார்கள்.

********ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணம்*********

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    பிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram prayers for getting baby

    Aadi pooram Prayers for getting baby பிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம்! ஆடி பூரம் 2024 தேதி… Read More

    1 week ago

    Aadi Pooram | ஆடிப்பூரம் | Aadi pooram Festival | Aadi Pooram 2024 Date

    Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More

    1 week ago

    ஆடிக்கிருத்திகை விரதமுறை மற்றும் பலன்கள் | Aadi kiruthigai

    Aadi kiruthigai #ஆடிக்கிருத்திகை விரதம் இருக்கும் முறை இதுதான்!! - ஆடி கிருத்திகை 2024 தேதி மற்றும் நேரம்: ஆடி… Read More

    1 week ago

    ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் | Aadi Amavasai special

    Aadi Amavasai special ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் Aadi amavasai ********************************************** ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள்… Read More

    1 week ago

    ஆடிப்பெருக்கு விழா | aadi perukku festival | aadi 18

    ஆடிப்பெருக்கு:  3/8/2024 aadi perukku தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இதனால் ஆடி மாதம் ஒவ்வொரு… Read More

    1 week ago

    Aadi month special Festivals Information | ஆடி மாத சிறப்புகள்

    Aadi month special Festival News and Info ஆடி மாத சிறப்புகள் Aadi month special news -… Read More

    1 week ago