அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா……
பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா …….
சாமி பொன்னய்யப்பா சரணம் பொன்னய்யப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா
அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா
பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா
இச்சை கொண்டேன் உந்தன் முன்னே ஈஸ்வரன் மைந்தா
பச்சை வண்ணம் பரந்தாமன் மகிழும் செல்வா (சாமி பொன்னய்யப்பா )
ஆரியங்காவில் வாழும் ஆண்டவனே வா
பார்வதியாள் அகமகிழும் பாலகனே வா
எருமேலி வீற்றிருக்கும் இறைவனே வா
தர்மஞான சாஸ்தாவே தயவுடனே நீ வா
மறைதேடும் சபரிமலை மன்னவனே நீ வா
குறைதீர்க்கும் குளத்துப்புழை பாலகனே வா
மன்னவனே மணிகண்டனே மகிழ்வுடனே வா
வன்புலிமேல் காட்சி தரும் வள்ளலே நீ வா
தேவர்களும் உனைப்பணிய காந்தமலையிலே நீ
ஆவலுடன் காட்சி தந்தாய் ஜோதி உருவிலே
காவலனே கண்ணாரக் கண்டோமே ஜோதிமலை
நாவார உனை அழைத்தோம் சுவாமியே
சரணம் ஐயப்பா (சாமி பொன்னய்யப்பா
Lalitha Sahasranamam Lyrics Tamil இந்த பதிவில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாடல் வரிகள் (lalitha sahasranamam lyrics tamil)… Read More
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் ப்ராதஹ: ஸ்மராமி லலிதா வதநாரவிந்தம் பிம்பாதரம் ப்ரதுல மௌக்திக ஷோபிநாசம் ஆகர்ண தீர்க்க நயனம் மணிகுண்டலாட்யம்… Read More
ஸ்ரீ காலபைரவர் ஜெயந்தி (Kala Bhairava Jayanti 2023) Date ஸ்ரீ காலபைரவர் ஜெயந்தி (Kala Bhairava Jayanti 2023)… Read More
ஸ்ரீ மஹா விஷ்ணுவின் 10 அவதார (தசாவதாரம்) காயத்ரி மந்திரங்கள் ஸ்ரீ மகா விஷ்ணுவின் காயத்ரி மந்திரம் (maha vishnu… Read More
சின்ன சின்ன முருகா முருகா பாடல் வரிகள் | chinna chinna muruga lyrics tamil சின்ன சின்ன முருகா… Read More
வில்லாளி வீரன் ஐயா பாடல் வரிகள் வில்லாளி வீரன் ஐயா வீர மணிகண்டனையா பாடல் வரிகள் அல்லது (Villali Veeran… Read More
Leave a Comment