பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள்… Bhagavan saranam bhagavathi saranam lyrics Tamil
பகவான் சரணம் பகவதி சரணம்
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா
பகலும் இரவும் உன் நாமமே
சரணம் சரணம் ஐயப்பா
(பகவான்)
கரிமலை வாசா பாபவினாசா
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய் கருனையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமியே – ஐயப்போ
ஐயப்போ – சுவாமியே
சுவாமியே – ஐயப்போ
ஐயப்போ – சுவாமியே
(பகவான்)
மஹிஷி சம்ஹாரா மதகஜ வாகன
சரணம் சரணம் ஐயப்பா
சுகுண விலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா
பாலபிஷேகம் உனக்கப்பா – இப்
பாலனை கடைகண் பாரப்பா
ஆறு வாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உனைக் காண வந்தோம்
இருமுடிக் கட்டு – சபரிமலைக்கு
சபரிமலைக்கு – இருமுடிக் கட்டு
நெய் அபிஷேகம் – சுவாமிக்கே
சுவாமிக்கே – நெய் அபிஷேகம்
(பகவான்)
முத்திரை தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எனக்கப்பா
கற்பூர தீபம் உனக்கப்பா – உன்
பொற்பத மலர்கள் எனக்கப்பா
நெய் அபிஷேகம் உனக்கப்பா – உன்
திவ்ய தரிசனம் எனக்கப்பா
தையினில் வருவோம் ஐயப்பா
அருள் செய்யப்பா – மனம் வையப்பா
(பகவான்)
சுவாமியே – ஐயப்போ
ஐயப்போ – சுவாமியே
பள்ளிக்கட்டு – சபரிமலைக்கு
சபரிமலைக்கு – பள்ளிக்கட்டு
தேவன் பாதம் தேவி பாதம்
சேவடி சரணம் ஐயப்பா
நாவினில் தருவாய் கீதமப்பா
தேவை உன் திருப் பாதமப்பா
(பகவான்)
மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha information *மஹாளய பட்சம்* (30.9.2023… Read More
Sivapuranam lyrics Tamil - சிவபுராணம் பாடல் வரிகள் சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த… Read More
Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More
ஓம் நமசிவாய... ஓம் சக்தி.... நம: பார்வதீ பதயே என்பது என்ன? சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல,… Read More
சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful Shiva Mantras Tamil Powerful shiva mantras tamil |… Read More
பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More
Leave a Comment